மேலும் அறிய
Advertisement
Local body election | சுயேச்சையாக களமிறங்கும் திமுகவினர் வேட்புமனுவை வாபஸ் பெற வேண்டும் - அமைச்சர் மஸ்தான் எச்சரிக்கை
திண்டிவனம் நகராட்சியில் திமுகவில் சீட் கிடைக்காததால் சுயேட்சையாக போட்டியிட்ட திமுகவினர்; மனுவை திரும்ப பெற வேண்டும் என அமைச்சர் மஸ்தான் எச்சரிக்கை
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் தி.மு.க., வேட்பாளர் பட்டியலில், அதிருப்தி நிலவுவதால், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி பலர் கட்சி வேட்பாளர்களை எதிர்த்து களம் காண தயாராகி வருகின்றனர். திண்டிவனம் நகராட்சியில் மொத்தமுள்ள 33 வார்டுகளில் போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் ஒரு சில வார்டுகளில் சலசலப்பு இருந்தாலும், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலையிட்டு, சரி செய்துவிட்டார். இதனால் அ.தி.மு.க., வேட்பாளர்கள் சிக்கலின்றி வார்டுகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் திண்டிவனம் நகராட்சியில் தி.மு.க., சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் தி.மு.க., நகர செயலாளர் கபிலன் பரிந்துரை செய்தவர்களின் பெயர்கள் இடம் பெறவில்லை.
இதனால் அவரது ஆதரவாளர்கள் அதிருப்தியடைந்தனர். வேட்பாளர் பட்டியல் வெளியாவதற்கு முன், நகர செயலாளர் கபிலன் அமைச்சர் மஸ்தானை நேரில் சந்தித்து, தன்னுடைய ஆதரவாளர்களுக்கு சீட் வழங்குமாறு கோரிக்கை வைத்தார். இந்த சூழ்நிலையில் நேற்று வெளியான தி.மு.க., வேட்பாளர் பட்டியலில், கபிலன் ஆதரவாளரான நகர அவைத்தலைவர் செல்வராஜ் பெயர் மட்டும் இடம் பெற்றுள்ளது. மற்றவர்களின் பெயர்கள் இடம் பெறவில்லை. இந்நிலையில், சீட் கேட்டு மறுக்கப்பட்ட கபிலன் ஆதரவாளர்கள் சிலர் ஏற்கனவே தங்கள் வார்டுகளில் பொது மக்களிடம் ஓட்டு கேட்டு வந்துள்ள நிலையில், தற்போது சீட் இல்லையென்று உறுதியானதை தொடர்ந்து, கட்சியின் அதிகார பூர்வ வேட்பாளர்களை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த நிலையில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் அறிக்கையில் கூறியிருப்பதாவது :
விழுப்புரம் மாவட்டம் - திண்டிவனம் நகராட்சியில் தலைமை கழகத்தால் வார்டு எண் : 01, 03, 05, 06, 07, 08, 09, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33 அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்களை தவிர வேறு யாரேனும் வேட்புமனு தாக்கல் செய்திருந்தால் உடனடியாக திரும்ப பெற்றுகொள்ளும்படி மாவட்ட கழகத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன், மேலும் தலைமை கழகத்தால் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள்களுடன் இணைந்து தேர்தல் பணியாற்றி வெற்றிக்கு உழைத்திடுமாறு கேட்டுக்கொள்கிறேன் என அமைச்சர் மஸ்தான் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
வணிகம்
தேர்தல் 2024
தேர்தல் 2024
சேலம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion