MP Senthilkumar: "தருமபுரி மக்களை பார்த்தா எப்படி இருக்கு" பா.ம.க.வை அட்டாக் செய்த எம்.பி செந்தில்குமார்!
MP Senthilkumar: தருமபுரி மக்களவை தொகுதி வேட்பாளராக சவுமியா அன்புமணி அறிவிக்கப்பட்டதையடுத்து, தி.மு.க. எம்.பி செந்தில்குமார் மறைமுகமாக விமர்சித்து பேசியுள்ளார்.
தருமபுரி மக்களவைத் தொகுதி வேட்பாளராக பாமக தலைவர் அன்புமணி மனைவி சவுமியா அன்புமணி அறிவிக்கப்பட்டதையடுத்து, எம்.பி செந்தில்குமாரின் கருத்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ்நாட்டில் உள்ள பாஜக கூட்டணியில் பாமக கட்சி அங்கம் வகிக்கிறது. கூட்டணியில் பாமக கட்சிக்கு 10 இடங்கள் ஒதுக்கப்பட்டன. இதையடுத்து பாமக சார்பில் போட்டியிடும் 10 வேட்பாளர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
பாமக வேட்பாளர்கள் பட்டியல் 2024:
- திண்டுக்கல் - கவிஞர் திலகபாமா
- அரக்கோணம் - கே.பாலு
- ஆரணி - கணேஷ் குமார்
- கடலூர் - தங்கர் பச்சான்
- மயிலாடுதுறை - ம.க ஸ்டாலின்
- கள்ளக்குறிச்சி - தேவதாஸ் உடையார்
- தருமபுரி – சவுமியா அன்புமணி
- சேலம் - அண்ணாதுரை
- விழுப்புரம் - முரளி சங்கர்
- காஞ்சிபுரம்: ஜோதி வெங்கடேசன்
முன்னதாக தருமபுரி தொகுதியில் பாமக கிழக்கு மாவட்ட செயலாளர் அரசாங்கம் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், மாலை அரசாங்கம் மாற்றப்பட்டு பாமக தலைவர் அன்புமணியின் மனைவி சவுமியா அன்புமணி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில், தருமபுரி மக்களவைத் தொகுதியின் எம்.பியாக உள்ள செந்தில்குமார், ட்விட்டரில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் தெரிவித்துள்ளதாவது,
” இல்ல தெரியாம தான் கேட்கிறேன், தர்மபுரி மக்களை பார்த்தா உங்களுக்கு எப்படி இருக்கு. தர்மபுரியில் வாழும் பாட்டாளி சொந்தங்களே உங்களுக்கும் சேர்த்து தான் என் குரல்” என கருத்து தெரிவித்துள்ளார்.
இல்ல தெரியாம தான் கேட்கிறேன்,
— Dr.Senthilkumar.S (@DrSenthil_MDRD) March 22, 2024
தர்மபுரி மக்களை பார்த்தா உங்களுக்கு எப்படி இருக்கு.😡
தர்மபுரியில் வாழும் பாட்டாளி சொந்தங்களே உங்களுக்கும் சேர்த்து தான் என் குரல்.
இது குறித்து பலரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிக்கையில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மனைவி போட்டியிடுவதால், வாரிசு அரசியல் பாமகவில் உள்ளது என்பதை மறைமுக சாடுகிறார் என கருத்து தெரிவித்துள்ளார் என கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
திமுக சார்பில் போட்டியிட்டு தருமபுரி மக்களவைத் தொகுதி எம்.பி-யாக உள்ள நிலையில், தற்போது வரும் மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. திமுக சார்பாக, தருமபுரி மக்களவைத் தொகுதியில் வழக்கறிஞர் ஆ. மணி போட்டியிடுகிறார்.
Also Read: Sowmiya Anbumani: தருமபுரி பாமக வேட்பாளராக அரசாங்கத்திற்கு பதிலாக சவுமியா அன்புமணி; என்ன காரணம்?