Local Body Election 2022 : மதுரை : இஸ்லாமிய பெண்ணை ஹிஜாப் அகற்றச்சொல்லிய விவகாரம்: கைதானவருக்கு 4-ஆம் தேதிவரை நீதிமன்ற காவல்
கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு மேலூர் குற்றவியல் நீதிமன்றத்தின் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு, வரும் 4.3.22 ம் தேதி வரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் தேர்தல் நாளான நேற்று மதுரை மாவட்டம் மேலூர் நகராட்சி 8வது வார்டு அல்அமீன் பள்ளி வாக்குச் சாவடியில் வாக்களிக்க வந்த இஸ்லாமிய பெண்களை ஹிஜாப்பை அகற்ற சொல்லி பாஜகவைச் சேர்ந்த பூத் ஏஜேண்ட் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். இதை கண்டித்து திமுக, அதிமுக உள்ளிட்ட மற்ற கட்சி ஏஜெண்ட்கள் மற்றும் அதிகாரிகள் வாக்குபதிவு மையத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.
#Abpnadu complaint of Presiding officer of the booth a case has been registered in Melur PS and the said Giri Nandhan was arrested and produced before the Judicial Magistrate, Melur. He is interned into Melur Sub Jail upto 04.03.2022.#melur | #issues | #madurai | #election
— Arunchinna (@iamarunchinna) February 20, 2022
அதைதொடர்ந்து, சிறிதுநேரம் வாக்குபதிவு நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பா.ஜ.க பூத் ஏஜெண்டை வாக்குபதிவு மையத்திலிருந்து அப்புறப்படுத்தியதை அடுத்து வாக்குபதிவு மீண்டும் தொடங்கியது. இதன் காரணமாக அல்-அமீன் பள்ளியில் செயல்பட்டு வரும் வாக்குச்சாவடியில் சிறிது நேரம் பதற்றமான சூழ்நிலை நிலவியது. தொடர்ந்து காவல்துறையினர் அங்கு கூடுதலாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பின்னர் அந்த வாக்குச் சாவடியில் அமைதியான முறையில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
இந்நிலையில் நேற்று அல் அமீன் பள்ளியில் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட கிரி நந்தன் என்பவரின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கிரி நந்தன் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு மேலூர் குற்றவியல் நீதிமன்றத்தின் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு, வரும் 4.3.22 ம் தேதி வரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.