Chennai Corporation Election 2022 : சென்னையின் இளவயது(21) கவுன்சிலர்.. சென்னையில் 98-வது வார்டை தட்டித்தூக்கிய ஆட்டோ டிரைவர் மகள் ப்ரியதர்ஷினி..
சென்னை மாநகராட்சியில் 21 வயதான ப்ரியதர்ஷினி, தற்போதைய கவுன்சிலர்களில் இளைய கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் ஆகியவற்றிற்கு கடந்த 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. மொத்தம் 1,374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3,843 நகராட்சி உறுப்பினர், 7,621 பேரூராட்சி உறுப்பினர் பதவிகள் என மொத்தமாக 12,838 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முழுவதும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அலுவலர்கள் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில், சென்னை மாநகராட்சியில் 21 வயதான பிரியதர்ஷினி,தற்போதைய கவுன்சிலர்களில் இளைய கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆட்டோ ஓட்டுநர் ஆறுமுகத்தின் மகளான பிரியதர்ஷினி சிபிஎம் சார்பில் வேட்பாளராக 98வது வார்டில் போட்டியிட்டு 8695 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
21-year old Priyadharshini will be the youngest councillors in this present council of Greater Chennai corporation. The CPM candidate, daughter of an auto driver, has won from ward 98 and got 8695 votes. #UrbanLocalBodyElection #chennai @chennaicorp #autodriver #Councillor
— Komal Gautham (@komalgauthamTOI) February 22, 2022
தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. திமுக கூட்டணி கட்சிகள் 95%க்கும் அதிகமான இடங்களை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. 21 மாநகராட்சிகளிலும் தொடர்ந்து பெருவாரியான வார்டுகளை திமுக கூட்டணி கைப்பற்றி வருகிறது. திமுக கூட்டணி 95 சதவீதத்துக்கும் அதிகமான நகராட்சி மற்றும் பேரூராட்சிகளை கைப்பற்றியது.
அதிமுகவின் கோட்டையாக விளங்கிய பல பகுதிகளிலும் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றதால் அக்கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள், நிர்வாகிகள், ஆதரவாளர்கள் பல இடங்களில் பட்டாசு வைத்து, இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். மேலும், திமுக நிர்வாகிகள் முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்தனர்.
மக்களவை, சட்டப்பேரவை, ஊரக உள்ளாட்சியைத் தொடர்ந்து நகர்ப்புற தேர்தலில் திமுக அமோக வெற்றியை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்