மேலும் அறிய

PM Modi Chennai Visit: இன்று சென்னை வருகிறார் பிரதமர் மோடி - 15,000 போலீசார் குவிப்பு, டிரோன்கள் பறக்க தடை

PM Modi Chennai Visit: பிரதமர் மோடி இன்று சென்னை வந்து பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்.

PM Modi Chennai Visit: சென்னை நந்தனத்தில் இன்று நடைபெற உள்ள, பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றுகிறார்.

பிரதமர் மோடி சென்னை வருகை:

நாடாளுமன்ற ம்க்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதற்கான பணிகளில் தமிழ்நாடு பாஜக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. கடந்த 27ஆம் தேதி திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்ற அண்ணாமலை பாத யாத்திரையின் நிறைவு விழா கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். அதோடு, பல்வேறு நலத்திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார்.  இந்நிலையில், 6 நாட்களுக்குள், பிரதமர் மோடி மீண்டும் இன்று தமிழ்நாடு வருகிறார். சென்னை நந்தனத்தில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். அந்த  மேடைக்கு ‘மீண்டும் மோடி சர்க்கார்’ என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. திமுக பொதுக்கூட்டத்திற்கு நிகராக மக்களை திரட்டி, இந்த பொதுக்கூட்டத்தை நடத்திட பாஜக முனைப்பு காட்டி வருகிறது. பிரதமரின் அடுத்தடுத்த இந்த பயணம், தமிழக பாஜகவினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

பிரதமரின் சென்னை பயண விவரம்:

  • மகாராஷ்டிராவில் இருந்து விமானம் மூலம் பிற்பகல் 2.45 மணிக்கு சென்னை வந்தடைகிறார் பிரதமர் மோடி
  • விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கல்பாக்கம் செல்கிறார்
  • மதியம் 3.30 மணிக்கு அணு உலை ரியாக்டர் மேம்பாடு (உற்பத்தி) திட்டத்தை பார்வையிடுகிறார்.
  • அதனை முடித்துக் கொண்டு ஹெலிகாப்டர் மூலமாக மாலை 5 மணிக்கு சென்னை விமான நிலையம் வருகிறார்
  • சாலை மார்க்கமாக சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தை அடைந்து, அங்கு நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.
  • கூட்டம் முடிந்ததும் மாலை 6.35 மணிக்கு விமானம் மூலமாக பிரதமர் மோடி தெலங்கானா செல்கிறார்.

பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்:

பிரதமர் வருகையையொட்டி சென்னையில் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த போலீசார் மற்றும் ஆயுதப்படை, கமாண்டோ, தமிழ்நாடு சிறப்பு காவல் படை போலீசார் என மொத்தம் 15 ஆயிரம் பேர் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். கல்பாக்கம் அணுமின் நிலைய நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பிரதமரின் பாதுகாப்புக்கு 5 ஆயிரம் போலீசார் ஈடுபடுகின்றனர். அதன்படி, 5 அடுக்கு பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. சென்னையில் உள்ள முக்கிய ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். சென்னை மற்றும் கல்பாக்கம் பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, 'டிரோன்'கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தமட்டில் இந்த தடை உத்தரவு ஏப்ரல் 29-ந் தேதி வரை அமலில் இருக்கும் எனவும், தடையை மீறி 'டிரோன்'கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சென்னை போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Thaipusam 2025: கந்தனுக்கு அரோகரா! தைப்பூசம் இன்று கோலாகல கொண்டாட்டம்! லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள்
Thaipusam 2025: கந்தனுக்கு அரோகரா! தைப்பூசம் இன்று கோலாகல கொண்டாட்டம்! லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள்
Thaipusam 2025: இன்று பத்திரம் பதியப் போறீங்களா? நல்ல நேரம் இதுதான்!
Thaipusam 2025: இன்று பத்திரம் பதியப் போறீங்களா? நல்ல நேரம் இதுதான்!
IND Vs ENG 3rd ODI: ஹாட்ரிக் வெற்றியா? ஆறுதல் வெற்றியா? இந்தியா Vs இங்கிலாந்து, 3வது ODI, அகமதாபாத் மைதானம் எப்படி?
IND Vs ENG 3rd ODI: ஹாட்ரிக் வெற்றியா? ஆறுதல் வெற்றியா? இந்தியா Vs இங்கிலாந்து, 3வது ODI, அகமதாபாத் மைதானம் எப்படி?
Hajj 2025 Rules: வந்தது உத்தரவு..! இனி குழந்தைகளுக்கு அனுமதி கிடையாது, ஹஜ் பயணத்திற்கு புதிய கட்டுப்பாடுகள்
Hajj 2025 Rules: வந்தது உத்தரவு..! இனி குழந்தைகளுக்கு அனுமதி கிடையாது, ஹஜ் பயணத்திற்கு புதிய கட்டுப்பாடுகள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tirupattur: நள்ளிரவில் வீடு புகுந்த கும்பல்.. பெண்ணை நிர்வாணப்படுத்தி வீடியோ! கள்ளக்காதலன் பகீர்!VJ Siddhu Vlogs: ”அடி.. உதை.. ஆவேசம்” சர்ச்சையில் சிக்கிய VJ சித்து! வெளியான அதிர்ச்சி வீடியோ!செங்கோட்டையனுக்கு வந்த PHONE CALL.. ஆட்டத்தை ஆரம்பித்த சசிகலா! எடப்பாடிக்கு ஆப்பு ரெடி!ஆதங்கத்தில் கோகுல இந்திரா! கடுப்பான ஜெயக்குமார்! என்ன செய்யப்போகிறார் EPS?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thaipusam 2025: கந்தனுக்கு அரோகரா! தைப்பூசம் இன்று கோலாகல கொண்டாட்டம்! லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள்
Thaipusam 2025: கந்தனுக்கு அரோகரா! தைப்பூசம் இன்று கோலாகல கொண்டாட்டம்! லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள்
Thaipusam 2025: இன்று பத்திரம் பதியப் போறீங்களா? நல்ல நேரம் இதுதான்!
Thaipusam 2025: இன்று பத்திரம் பதியப் போறீங்களா? நல்ல நேரம் இதுதான்!
IND Vs ENG 3rd ODI: ஹாட்ரிக் வெற்றியா? ஆறுதல் வெற்றியா? இந்தியா Vs இங்கிலாந்து, 3வது ODI, அகமதாபாத் மைதானம் எப்படி?
IND Vs ENG 3rd ODI: ஹாட்ரிக் வெற்றியா? ஆறுதல் வெற்றியா? இந்தியா Vs இங்கிலாந்து, 3வது ODI, அகமதாபாத் மைதானம் எப்படி?
Hajj 2025 Rules: வந்தது உத்தரவு..! இனி குழந்தைகளுக்கு அனுமதி கிடையாது, ஹஜ் பயணத்திற்கு புதிய கட்டுப்பாடுகள்
Hajj 2025 Rules: வந்தது உத்தரவு..! இனி குழந்தைகளுக்கு அனுமதி கிடையாது, ஹஜ் பயணத்திற்கு புதிய கட்டுப்பாடுகள்
Bus Accident: கோர விபத்து..! கவிழ்ந்த பேருந்து, எடுக்க எடுக்க கிடைத்த பிணங்கள் - 51 சடலங்கள் கண்டெடுப்பு
Bus Accident: கோர விபத்து..! கவிழ்ந்த பேருந்து, எடுக்க எடுக்க கிடைத்த பிணங்கள் - 51 சடலங்கள் கண்டெடுப்பு
Seeman:
Seeman: "நான் புலி.. நான் பெரியாரை ஏத்துக்கவே மாட்டேன்" மீண்டும் சீறிய சீமான்
Ind vs Eng 3rd Odi : ஃபார்முக்காக போராடும் கோலி! அணிக்கு திரும்பும் பண்ட்? 3வது ஒரு நாள் போட்டி பிளேயிங் 11 எப்படி இருக்கும்?
Ind vs Eng 3rd Odi : ஃபார்முக்காக போராடும் கோலி! அணிக்கு திரும்பும் பண்ட்? 3வது ஒரு நாள் போட்டி பிளேயிங் 11 எப்படி இருக்கும்?
TNPSC Controversy: தமிழ்நாட்டின் தாயுமானவர் யார்? டிஎன்பிஎஸ்சி குரூப் 2 வினாத்தாளால் வெடித்த சர்ச்சை! விவரம்
TNPSC Controversy: தமிழ்நாட்டின் தாயுமானவர் யார்? டிஎன்பிஎஸ்சி குரூப் 2 வினாத்தாளால் வெடித்த சர்ச்சை! விவரம்
Embed widget