மேலும் அறிய
Advertisement
கடலூரில் வீடுவீடாக கபசுர குடிநீர் வழங்கி வாக்கு சேகரிக்கும் அதிமுக வேட்பாளர்
கடலூர் மாநகராட்சி உள்ள 45 வார்டுகளில் திமுக, அதிமுக, பாமக, கம்யூனிஸ்ட், மற்றும் இதர கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என 286 பேர் போட்டி
தமிழகம் முழுவதும் நகர்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது, அதன்படி கடலூர் மாவட்டத்தில் கடலூர் மாநகராட்சி, நெல்லிக்குப்பம், பண்ருட்டி, சிதம்பரம், விருந்தாசலம், வடலூர், திட்டக்குடி ஆகிய 6 நகராட்சிகள், அண்ணாமலைநகர், காட்டுமன்னார்கோவில், பரங்கிப்பேட்டை குறிஞ்சிப்பாடி, புவனகிரி, கங்கை கொண்டான், பெண்ணாடம், ஸ்ரீஷ்ணம், சேத்தியாததோப்பு, லால்பேட்டை, மங்கலம்பேட்டை, தொரப்பாடி, மேல்பட்டாம்பாக்கம், கிள்ளை ஆகிய 14 பேரூராட்சிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் கடலூர் மாநகராட்சியில் உள்ள 45 வார்டுகளிலும் போட்டியிட திமுக, அதிமுக, விசிக, அமமுக, மக்கள் நீதி மையம் என பல்வேறு கட்சிகளும் கடந்த 28 ஆம் தேதி முதல் கடைசி நாளன நேற்றுவரை பல்வேறு கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் ஆர்வமாக வேட்புமனு தாக்கல் செய்தனர்.
தற்பொழுது கடலூர் மாநகராட்சியில் 45 வார்டுகளில் 286 பேர் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுகின்றனர்.மேலும் கடலூர் மாநகராட்சி தரம் உயர்த்தப்பட்ட பிறகு மாநகராட்சி முதல் தேர்தல் நடைபெற உள்ளது, இந்த சூழ்நிலையில் கடலூர் மாநகராட்சி உள்ள 45 வார்டுகளில் திமுக, அதிமுக, பாமக, கம்யூனிஸ்ட், மற்றும் இதர கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என 286 பேர் போட்டியிடுகின்றனர் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் தற்போது கடலூர் மாநகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் கட்சிகள் சார்ந்த மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.இந்த நிலையில் கடலூர் மாநகராட்சி தரம் உயர்த்தப்பட்ட பிறகு முதல் மாநகராட்சி உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது இதில் அதிமுக சார்பில் 27 வது வார்டில் சங்கீதாவசந்தராஜ் எனும் பட்டதாரி பெண் போட்டியிடுகிறார். இவர் கடந்த 5 நாட்களாக தீவிர வாக்கு சேகரிப்பில் வீதி வீதியாக ஈடுபட்டு வந்த நிலையில்.
இன்று 27வது வார்டில் உள்ள மக்களுக்கு வீடு வீடாக சென்று கபசுர குடிநீர் வழங்கினார் பின்னர் கொரோனாவில் இருந்து தங்களை பாதுகாக்கும் வகையில் இதனை வாரத்திற்கு இரண்டு முறை சாப்பிட வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தியும் கொரோனா குறைந்தாலும் பாதிப்புகள் உள்ளது ஆகையால் அனைவரும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வாக்காளர்களிடம் வாக்கு சேகரித்தார். சங்கீதா வசந்த்ராஜ் குரூப் 2 தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று அரசு வேலைக்கு சென்று கொண்டிருந்தார், இதற்கு முன்னதாக நடக்கவிருந்த நகராட்சி தேர்தலில் போட்டியிடுவதற்காக வேலையை ராஜினாமா செய்துவிட்டு கடந்த தேர்தலில் போட்டியிட்டார் ஆனால் கடந்த நகர்புற உள்ளாட்சி தேர்தல் ரத்து செய்யப்பட்டதால் தற்பொழுது மீண்டும் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
அரசியல்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion