மேலும் அறிய

மாற்றம் நிச்சயம்.. தூத்துக்குடியில் ஸ்ரீநாத்: தலைவர் மீதான நம்பிக்கையும், மக்களின் எதிர்பார்ப்பும்!

பெருசா வாக்குறுதி இது வரைக்கும் இருந்தவங்க செய்யாத விஷயங்கள், பண்ணாத விஷயங்களை நாங்க செய்வோம். - நடிகர் ஸ்ரீநாத்.

மாற்றத்துக்காக எங்க தலைவர் மேல வச்சிருக்க நம்பிக்கை. அந்த ஒரு முகம், அந்த முகம் கண்டிப்பா பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். -மதுரை விமான நிலையத்தில் ஸ்ரீநாத் பேட்டி.

மதுரையில் நடிகர் ஸ்ரீநாத்
 
தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் தூத்துக்குடியில் போட்டியிடப் போகும் நடிகர் ஸ்ரீநாத் அவர்கள் இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் தொகுதிக்கு செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். அவருக்கு மதுரை மாநகரத்தில் தவெக சார்பாக உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர் சந்தித்து அவர் கூறுகையில்...,” 
 
முதல் முறையா தேர்தல்ல களம் இறங்குறீங்க, தூத்துக்குடியை தேர்ந்தெடுக்க காரணம் என்ன எந்த அடிப்படையில உங்களை அங்க நிறுத்தினாங்க குறித்த கேள்விக்கு:
 
இது கழகம் முடிவு பண்ண ஒரு விஷயம், தலைவர் முடிவு பண்ண ஒரு விஷயம். ஏன்னா ஓவ்வொரு வேட்பாளரும் எங்கு போட்டியிட வேண்டும், என்று நம்மளுடைய விருப்பம் என்னவா இருந்தாலும், கழகத்தினுடைய விருப்பத்துக்கு தகுந்த மாதிரி செயல்படுறதுதானே அடிப்படை தொண்டன்ல இருந்து பொறுப்புல இருக்கிற நம்மளுடைய கடமை. 
 
வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு சார்? தூத்துக்குடி மற்றும் தமிழகம் முழுவதும் எப்படி இருக்குன்னு குறித்த கேள்விக்கு:
 
தமிழகம் முழுவதும் கண்டிப்பா ஒரு மாற்றத்தை எல்லாருமே... அந்த மாற்றத்துக்காக வெயிட் பண்றாங்க. ஒரு மாற்றம் நிகழும் அப்படின்னு கண்டிப்பா நம்புறாங்க தூத்துக்குடியிலயும் அந்த மாற்றம் ஏற்படும் அப்படின்றத ஆணித்தரமா நான் நம்புறேன்.
 
ஏற்கனவே முன்னாள் அமைச்சர் இருக்காங்க அதிமுக-ல, இப்ப திமுக-லயும் அமைச்சர் இருக்காங்க. அதனால உங்களுக்கு போட்டி எந்த மாதிரி இருக்கும்னு நினைக்கிறீங்க
 
கடுமையா இருக்கும், ரொம்ப... என்ன சொல்றது..விறுவிறுப்பாக இருக்கும் நாங்க ரொம்ப ரொம்ப உறுதிய இருக்கோம்.
 
அறிமுகக் கூட்டத்துல முத்தம் கொடுத்து அனுப்பி வச்சாரு (விஜய்), ஏதாவது பர்சனலா அட்வைஸ் சொல்லி அனுப்பி வச்சார?
 
வெற்றியோட வா நண்பா" அப்படின்றத மட்டும் சொன்னாரு.
 
தூத்துக்குடியில 'தவெக'-க்கு மக்கள் ஏன் ஓட்டு அளிக்கணும் என்ன காரணமா இருக்கும்னு எதிர்பார்க்கிறீங்க மக்கள் என்ன விரும்புறாங்க
 
மாற்றத்துக்காக எங்க தலைவர் மேல வச்சிருக்க நம்பிக்கை... அந்த ஒரு முகம், அந்த முகம் கண்டிப்பா பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் இந்த தமிழ்நாட்டுல அப்படின்றது தான் எங்களோட நம்பிக்கை.
 
மக்களுக்கு என்ன வாக்குறுதிகள் கொடுக்குறீங்க
 
பெருசா வாக்குறுதி இது வரைக்கும் இருந்தவங்க செய்யாத விஷயங்கள், பண்ணாத விஷயங்களை நாங்க செய்வோம். எங்க தலைவர் செய்வாரு. புதுசா வாக்குறுதியைத் தாண்டி, அது என்னென்ன நாங்க செய்யணும்னு நாங்க எல்லாம் ஒரு பட்டியலே வச்சிருக்கோம். எங்களுடைய அடிப்படை நோக்கம் என்ன அப்படின்னா, இதுவரைக்கும் இருந்தவர்கள் செய்யாத விஷயத்தை, தவறவிட்ட விஷயத்தை நாங்க செய்வோம்
 
இப்ப முதல்வர் சகோதரி (கனிமொழி) அங்க இருக்காங்க, திமுக-வோட அலை அங்க அதிகமா இருக்கு. நீங்க இந்த போட்டியை எப்படி முன்னெடுக்கப் போறீங்க?
 
கடுமையா இருக்கும், ஆரோக்கியமாக இருக்கும். நாங்க ரெடி, எதையும் சந்திக்கிறதுக்கு தயாராக இருக்கோம். அந்த நோக்கத்தோடு தானே தலைவர் களம் இறங்கியிருக்கிறார்.
 
உங்கள் தலைவர் பிரசாரம் பண்ற இடத்துக்கு அனுமதி மறுக்கப்படுது, தொடர்ந்து பிரச்னைகள் வந்துகிட்டே இருக்கு. நேத்து கூட ஒரு கூட்டத்துல பெண்கள் மேல பாட்டில் எறிஞ்சு ஒரு பிரச்னை வந்தது. இதை எப்படி பேஸ் பண்ண ரெடியா இருக்கீங்க?
 
இதை ரொம்ப நாகரிகமா நாங்க பேஸ் பண்றோம். அநாகரிகமா அவங்க நடந்துக்கிறாங்க அப்படின்னா, எங்க கழகமும் எங்க தலைவரும் இதை ரொம்ப ஒரு நாகரிகமா பேஸ் பண்ணுவாரு. அப்படித்தான் எங்களை ட்ரெய்ன் பண்ணிருக்காரு. அதுதான் எங்களுடைய இயல்பான ஒரு மூவ்மென்ட் ஆகவும் இருக்கும்
 
காவல்துறை பாதுகாப்பு கொடுக்கிறாங்களா?
 
அது அவங்களோட கடமை, அதை செய்யணும் அவங்க. ஒவ்வொரு இடங்கள்ல செய்றாங்க அப்படின்னு நாங்க நம்புறோம். எங்கேயாவது கொஞ்சம் அதுல சில பிசிறுகள் எல்லாம் இருந்ததுன்னா அதை சரி செய்யணும். அரசாங்கம் தான் சரி செய்யணும். உங்கள மாதிரி ஆட்கள் அது எங்க தவறுகள் நடக்குதோ, ஊடக நண்பர்கள் அதை வெளிச்சத்துக்கு கொண்டு வரணும், அதை எடுத்து மக்களுக்கு தெரிவிக்கணும்.
 
தென் மாவட்டங்கள்ல அடிக்கடி சாதி மோதல் போன்ற சம்பவங்கள் நடக்குது. அதைத் தடுக்க தவெக கிட்ட ஏதாவது புதிய திட்டங்கள் இருக்கா?
 
எல்லாமே இருக்குது, ஒரு பட்டியலே இருக்கு. அது ஸ்லோவா ஒவ்வொன்னா நாங்க டிஸ்க்ளோஸ் (Disclose) பண்றோம் என்றார்.
 
தலைப்பு செய்திகள்

TN Weather News: 12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
Ration Card : ஒரே நாளில் ரேஷன் கார்டில் திருத்தம்... விரல் ரேகை பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்.! தமிழக அரசு தேதி அறிவிப்பு
ஒரே நாளில் ரேஷன் கார்டில் திருத்தம்... விரல் ரேகை பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்.! தமிழக அரசு தேதி அறிவிப்பு
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: 12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
Ration Card : ஒரே நாளில் ரேஷன் கார்டில் திருத்தம்... விரல் ரேகை பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்.! தமிழக அரசு தேதி அறிவிப்பு
ஒரே நாளில் ரேஷன் கார்டில் திருத்தம்... விரல் ரேகை பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்.! தமிழக அரசு தேதி அறிவிப்பு
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
Tasmac liquor online : மதுப்பிரியர்களுக்கு ஜாலி.! இன்று முதல் ஆன்லைனிலேயே மதுபானம் ஆர்டர் செய்யலாம்.? விளக்க வீடியோ இதோ..
மதுப்பிரியர்களுக்கு ஜாலி.! இன்று முதல் ஆன்லைனிலேயே மதுபானம் ஆர்டர் செய்யலாம்.? விளக்க வீடியோ இதோ..
Hyundai Creta EV On EMI: 475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
Embed widget