மேலும் அறிய
Advertisement
திராவிட கட்சிகள் என்னைப் பார்த்து பயப்படுகிறது - மன்சூர் அலிகான் அதிரடி
இந்தியா என்பது என் தாய் நாடு, இஸ்லாம் என்பது என்னுடைய வழிபாடு. அது எனது ஒரே கொள்கை - மன்சூர் அலிகான்
”நான் மதவாதம் பேசுபவன் அல்ல அவரவர்கள் அவரவர்களிடத்தில் இருந்து கொள்ள வேண்டும்” என வாணியம்பாடியில் நடிகர் மன்சூர் அலிகான் பேட்டியளித்தார்.
வேலூரில் போட்டி
வேலூர் மக்களவை தொகுதிக்குட்பட்ட வாணியம்பாடி, ஆம்பூர் பகுதிகளில் இந்திய ஜனநாயக புலிகள் அமைப்பை சார்ந்தவரும் நடிகருமான மன்சூர் அலிகான் வேலூர் மக்களவை தொகுதியில் வேட்பாளராக போட்டியிடுகிறேன் என தொகுதி மக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நியூ டெல்லி மற்றும் காதர்பேட்டை பகுதிகளில் ரமலான் நோன்பு திறப்பு என்பதால் பள்ளிவாசல்களுக்கு சென்று தொழுகை நடத்தினார். பின்னர் பொதுமக்களிடம் வாக்குகளை சேகரித்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:
எனக்கு மக்கள் ஆதரவு அதிக அளவில் உள்ளது. எந்த கட்சியும் கூட்டணிக்கு கூப்பிடுவதற்கு என்னை பார்த்து பயப்படுகிறார்கள். சொந்தமாக உழைத்து கட்சி தொடங்கியுள்ளேன். ஜனநாயகம் என்பது தற்பொழுது கேலிக்கூத்தாக தான் உள்ளது. உலகத்தின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவாக இந்த தேர்தல் உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தீர்ப்பை எழுதிவிட்டு தற்பொழுது எங்களுக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று கேட்டு வருகிறார்.
மோடி மஸ்தான் வேலை போல் இவிஎம் டப்பாவை வைத்து அவர் செய்து வருகிறார் பிரதமர் மோடி.
யாரும் வாயைத் திறந்து பேச மாட்டார்கள் நான் பேசி வருகிறேன். 20 ஆண்டு 30 ஆண்டு 70 ஆண்டுகளாக அப்படியே தான் உள்ளது அனைத்து பிரச்சினைகளும் மேம்பாலம் தொடங்கி குப்பைகள் தேங்கி கிடக்கும் வரை உள்ளது.
வேலூரை கொடைக்கானல் போல்
இதெல்லாம் ஜூஜிபி மேட்டர் இதெல்லாம் ஒரு விஷயமே கிடையாது. வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும் இந்த மாவட்டத்தை சுற்றி பசுமையாக்க வேண்டும். வேலூரை கொடைக்கானல் போல் மாற்றி அமைக்க வேண்டும். இயற்கை வளத்தை உருவாக்க வேண்டும். உருவாக்கினால் பாலாற்றில் தண்ணீர் வரத்து சென்று கொண்டிருக்கும் அப்படி உருவாக்கப்பட்டால் மணல் கொள்ளை அடிக்க முடியாது.
தமிழனை பிரதமர் ஆக்க வேண்டும்
இவை அனைத்துமே என்னால் தான் செய்ய முடியும் கூட்டணி சென்றால் நானும் செய்ய முடியாது. 30ஆம் தேதிக்குப் பிறகு என்னுடைய கொடுவாலையும, அறிவாளையும் தூக்கி பேசுவேன். ஜனநாயக நாட்டில் பேச்சுரிமை உள்ளது. இன்றைக்கு கட்சி என்று சொல்லாதீர்கள் இந்திய ஜனநாயக புலிகள் என்பது இந்திய அளவுக்கு கொண்டு போகனும் தமிழர்களுக்கு பதவி வேண்டும் தமிழனை பிரதமர் ஆக்க வேண்டும். தமிழன் ஆள வேண்டும். உரிமைகள் பாதிக்கப்படுகிறது அதே நேரத்தில் மீனவர் பிரச்சினை, நீட் உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளையும் அப்படியே தான் உள்ளது.
நான் அடிப்படை மத வாதத்திற்கு எதிரானவன். மோடி ஒரு அடிப்படை மதவாதி அடிச்சி விரட்டப்பட வேண்டிய மதவாதி. எந்தவிதமான இந்து, முஸ்லீம், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட அடிப்படை மதவாதத்தை எதிர்ப்பவன். மக்கள் காசு மோடியிடம் உள்ளது. அதனால் விளம்பரம் செய்து வருகிறார்.
அந்தக் கழுதைகளுக்கு ஓட்டை போட்டு பேப்பராய் தின்னு கிடைக்கிறது அவர்கள் பிணைவரையில் பணத்தை சேமித்து வைத்துள்ளார்கள். நம்மிடம் லாக்கர் வைப்பதற்கு காசு இல்லை. சிஏஏ, என்ஆர்சி கொண்டு வந்ததற்கு இவர்களுக்கு என்ன தகுதி உள்ளது அவர்களை செருப்பால் அடிக்க வேண்டும்.
சிஏஏ என்பது தவறான சட்டம் அதற்கு கெஜ்ரிவால் எதிர்பால் பதிலளித்துள்ளார். அங்கு இருப்பவர்களை எதற்காக அழைக்கிறீர்கள் இங்கு இருப்பவர்களுக்கே வேலையில்லாமல் உள்ளார்கள்.
இந்தியா என்பது என் தாய் நாடு
சிஏஏ என்பது குடியுரிமை சட்டம் உன் குடியுரிமை என்ன உச்சி குடிமியாக உள்ளது. நான் மதவாதம் பேசுபவன் அல்ல அவரவர்கள் அவரவர்களிடத்தில் இருந்து கொள்ள வேண்டும். இந்தியா என்பது என் தாய் நாடு இஸ்லாம் என்பது என்னுடைய வழிபாடு. அது எனது ஒரே கொள்கை தான்
பாரத பிரதமரும் உடன் போட்டி போட்டு என்னால் நடிக்க முடியவில்லை. அதனால் இங்கு வந்து உள்ளேன். புதிதாக பாராளுமன்றம் கட்டியுள்ளார்கள் அங்கு நான் செல்வேன், நீங்கள் வாக்களியுங்கள் நீங்கள் போடக்கூடிய ஓட்டை நான் எங்கேயும் தூக்கி செல்ல விட மாட்டேன்.
திராவிட கட்சிகளுடன் நானே கூட்டணிக்காக சென்றேன். ஆனால் என்னைப் பார்த்து பயப்படுகிறார்கள். விஜய் அரசியலுக்கு வந்துள்ளார். அவர் வந்து முதல்வர் ஆகட்டும் நான் ஒரு மந்திரி ஆகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
அரசியல்
சென்னை
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion