Uttarakhand Exit Poll 2022: உத்தராகண்ட் தேர்தல் : தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் இதோ..
ABP C Voter Exit Poll Results 2022: உத்தரக்காண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாக பிப்ரவரி 14ஆம் தேதி நடைபெற்றது.
ABP C Voter Exit Poll Results 2022: உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தர்காண்ட், மணிப்பூர் மற்றும் கோவா உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதில் உத்தரக்காண்ட் மாநிலத்திலுள்ள 70 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக கடந்த பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 10ஆம் தேதி எண்ணப்பட உள்ளது. மணிப்பூரில் பாஜகவின் பிரேன் சிங் தலைமையிலான அரசு தற்போது ஆட்சி செய்து வருகிறது. இந்தத் தேர்தலில் பாஜகஅரசுக்கு போட்டியாக காங்கிரஸ் கட்சி இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் இந்தத் தேர்தல் தொடர்பாக ஏபிபி மற்றும் சி-வோட்டர் ஆகியவை இணைந்து தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பை செய்துள்ளது. அந்தக் கருத்து கணிப்பின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. உத்தரக்காண்ட் மாநிலத்தில் 2017ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 11 இடங்களையும், பாஜக 57 இடங்களையும், சுயேட்சைகள் 2 இடங்களிலும் வென்று இருந்தனர்.
2022-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பின்படி உத்தரக்காண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி 32 முதல் 38 இடங்கள் வரை பெற வாய்ப்பு உள்ளது. அதேபோல் பாஜக 26 முதல் 32 இடங்கள் வரை பிடிக்கும் வாய்ப்பு உள்ளது. ஆம் ஆத்மி கட்சி 0 முதல் 2 இடங்களும்,சுயேட்சைகள் 3 முதல் 7 இடங்கள் வரையும் பிடிக்கும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது.
ABP Cvoter Exit Poll 2022 LIVE: 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் : தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் உடனுக்குடன்..
தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பில் காங்கிரஸ் கட்சி 30 முதல் 36 வரை இடங்களை பிடிக்கும் என்று கூறப்பட்டிருந்தது. பாஜக 31 முதல் 37 இடங்கள் வரை பிடிக்கும் வாய்ப்பு உள்ளது. ஆத்மி கட்சி 2முதல் 4 இடங்கள் வரையும், சுயேட்சைகள் 1 இடங்கள் வரை பிடிக்கும் வாய்ப்பு என்று கணிக்கப்பட்டிருந்தது. அந்த நிலை தற்போது மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்