மேலும் அறிய

TN 12th Result 2025: பிளஸ் 2 மாணவர்களே... 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது? காண்பது எப்படி?

Tamil Nadu 12th Result 2025 Date: 12ஆம் வகுப்புக்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் 4ஆம் தேதி தொடங்கின. ஏப்ரல் 17ஆம் தேதி வரை இந்தப் பணிகள் நடைபெற்றன.

12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் இன்னும் சில நாட்களில், அதாவது மே 9ஆம் தேதி வெளியாக உள்ளன. இதை தமிழக பள்ளிக் கல்வித்துறை உறுதிப்படுத்தி உள்ளது.

தேர்வு தேதிகள் என்னென்ன?

2024- 25ஆம் கல்வி ஆண்டில் மாநிலக் கல்வி வாரியத்தின் கீழ் 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு மார்ச் 3ஆம் தேதி தொடங்கி, மார்ச் 25ஆம் தேதி வரை தேர்வு நடைபெற்றது. கடைசி நாளான மார்ச் 25ஆம் தேதி இயற்பியல் மற்றும் பொருளாதார பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற்றன.

இந்தத் தேர்வை சுமார் 8.21 லட்சம் மாணவர்கள் எழுதினர். இதற்காகத் தமிழகம் முழுவதும் 3,316 தேர்வு மையங்கள் அமைக்​கப்​பட்டன. பொதுத் தேர்​வுக்கான அறை கண்காணிப்​பாளர் பணியில் 43,446 ஆசிரியர்கள் நியமிக்​கப்​பட்​டனர்.

தேர்வு முடிவுகள் எப்போது?

12ஆம் வகுப்புக்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் 4ஆம் தேதி தொடங்கின. ஏப்ரல் 17ஆம் தேதி வரை இந்தப் பணிகள் நடைபெற்றன. இந்த நிலையில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9ஆம் தேதி வெளியாக உள்ளன. தகவல் வெளியாகியுள்ளது. இதை தமிழக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தி உள்ளனர்.

தேர்வு முடிவுகளைக் காண்பது எப்படி?

மாணவர்கள் தங்களின் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை tnresults.nic.in, dge.tn.gov.in ஆகிய அதிகாரப்பூர்வ இணைய தளங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் எப்போது?

அதேபோல சிபிஎஸ்இ எனப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின்கீழ் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 10ஆம் தேதிக்குள் வெளியாகலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.

மாணவர்கள் cbseresults.nic.in, cbse.nic.in மற்றும் cbse.gov.in ஆகிய இணையதளத்தில் சென்று தேர்வு முடிவுகளை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

10ஆம் வகுப்புக்கு எப்படி?

10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் 21ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. இவர்களுக்கான தேர்வு முடிவுகளும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகளும் மே 19ஆம் தேதி திட்டமிட்டபடி வெளியாக உள்ளதாகவும் பள்ளிக் கல்வித்துறை வட்டார அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். 

கடந்த ஆண்டு 94.56 % தேர்ச்சி

கடந்த ஆண்டு மே 6ஆம் தேதி 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், மாநிலம் முழுவதும் தேர்வு எழுதியவர்களில் 94.56 சதவிகிதத்தினர் தேர்ச்சி பெற்றனர். இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 0.53 சதவீதம் அதிகம் ஆகும். இதில் மாணவிகள் 96.44 சதவிகிதமும், மாணவர்கள் 92.37 சதவிகிதமும் தேர்ச்சி பெற்றனர்.

மொத்தமாக 7 லட்சத்து 60 ஆயிரத்து 606 பேர் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதிய நிலையில், அவர்களின் மாணவர்கள் 3 லட்சத்து 52 ஆயிரத்து 165 பேரும், மாணவியர்கள் 4 லட்சத்து 8 ஆயிரத்து 440 பேரும் தேர்ச்சி பெற்று இருந்தனர்.

மாநில அளவிலான தேர்ச்சி விகிதத்தில், 97.45 சதவிகிதத்துடன் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்தது. அதைத் தொடர்ந்து, ஈரோடு மாவட்டம் மற்றும் சிவகங்கை மாவட்டங்கள் 97.42 சதவிகிதத்துடன் இரண்டாவது இடத்தை பிடித்தன.  அரியலூர் மாவட்டம் 97.25 சதவிகிதத்துடன் மூன்றாவது இடத்தை பிடித்தது ,குறிப்பிடத்தக்கது.

கூடுதல் தகவல்களுக்கு: tnresults.nic.in, dge.tn.gov.in

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

NEET PG 2026: முதுகலை நீட் தேர்வில் மாற்றம்... இனி காலை, மாலை தேர்வு இல்லை.. மோசடியை தடுக்க சூப்பர் திட்டம்!
NEET PG 2026: முதுகலை நீட் தேர்வில் மாற்றம்... இனி காலை, மாலை தேர்வு இல்லை.. மோசடியை தடுக்க சூப்பர் திட்டம்!
MBBS Counselling: மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிப்பு - மாநில ஒதுக்கீடு எப்போது? கடைசி நாள் என்ன?
மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிப்பு - மாநில ஒதுக்கீடு எப்போது? கடைசி நாள் என்ன?
IIT Madras: ஐஐடி சென்னை, கான்பூர் வெப்சைட்டை ஹேக் செய்த மாணவன்: அங்கேயே சேர்ந்து படிக்க அரிய வாய்ப்பு!
IIT Madras: ஐஐடி சென்னை, கான்பூர் வெப்சைட்டை ஹேக் செய்த மாணவன்: அங்கேயே சேர்ந்து படிக்க அரிய வாய்ப்பு!
HOLIDAY : 3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கும் குஷி- வெளியான அறிவிப்பு
3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கும் குஷி- வெளியான அறிவிப்பு

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
‘என்னாச்சு, என்னாச்சு CM சார் என்னாச்சு..’ தஞ்சையில் தவெக அரசுக்கு எதிராக களத்தில் இறங்கிய உதயநிதி..!
‘என்னாச்சு, என்னாச்சு CM சார் என்னாச்சு..’ தஞ்சையில் தவெக அரசுக்கு எதிராக களத்தில் இறங்கிய உதயநிதி..!
TN Cabinet: காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
Car Accident: 7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்
7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்
TVK Vs DMK:
"கொத்தூஸ் ஐடி விங் கவனத்திற்கு" திமுகவிற்கு டேட்டாக்களுடன் பதிலடி கொடுத்த தவெக..! எது உண்மை?
TN Weather News: 6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை, சென்னையை சூழந்த கருமேகங்கள் -தமிழக வானிலை அறிக்கை
6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை, சென்னையை சூழந்த கருமேகங்கள் -தமிழக வானிலை அறிக்கை
திமுகவுக்கு ஓட்டு போட மாட்டீங்க.. பொருள் மட்டும் வேணுமா?.. மக்களை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன்!
திமுகவுக்கு ஓட்டு போட மாட்டீங்க.. பொருள் மட்டும் வேணுமா?.. மக்களை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன்!
CNG SUV: 28.51KM மைலேஜ்..! டாப் 5 சிஎன்ஜி எஸ்யுவிக்கள் - விலை, வசதி , அம்சங்கள், ரேட்டிங் - முழு விவரம் இதோ
28.51KM மைலேஜ்..! டாப் 5 சிஎன்ஜி எஸ்யுவிக்கள் - விலை, வசதி , அம்சங்கள், ரேட்டிங் - முழு விவரம் இதோ
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
Embed widget