மேலும் அறிய

Term Exam: தொடக்கப்பள்ளி மாணவர்களுக்குத் தேர்வு எப்போது?- பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு என்ன?

அரசுப் பள்ளிகளில் 1 முதல் 3-ம் வகுப்பு மாணவர்களுக்கான 2-ம் பருவத் தேர்வு டிசம்பர் 13ஆம் தேதி தொடங்குவதாக பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அரசுப் பள்ளிகளில் 1 முதல் 3-ம் வகுப்பு மாணவர்களுக்கான 2-ம் பருவத் தேர்வு டிசம்பர் 13ஆம் தேதி தொடங்குவதாக பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக எஸ்சிஇஆர்டி எனப்படும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் கூறி உள்ளதாவது:

’’அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 3ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2ஆம் பருவத்துக்கான தமிழ், ஆங்கிலம், கணிதம் பாடங்களுக்கான தொகுத்தறி மதிப்பீடு  டிசம்பர் 13 முதல் 23ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்கப்பட உள்ளது.

இந்த பாடங்களுக்கான தொகுத்தறி மதிப்பீட்டை செயலி அல்லது எழுத்துப் பூர்வமாக நடத்த வேண்டும் என்ற ஆசிரியர்களின் கோரிக்கை ஏற்கப்படுகிறது. இதற்கான வினாத் தாள்களை அந்த செயலியிலேயே பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். வினாத் தாளை ஆசிரியர்கள் தங்கள் விருப்பத்துக்கேற்ப வடிவமைத்து, அதன் அடிப்படையிலும் மாணவர்களை மதிப்பீடு செய்து கொள்ளலாம். 

மதிப்பெண் விவரங்களை பதிவேற்ற வேண்டியதில்லை

எழுத்துப்பூர்வமான தொகுத்தறி மதிப்பீடு முற்றிலும் விருப்பத்தின் அடிப்படையில் ஆனது. அதனால், மதிப்பெண் விவரங்களை செயலியில் பதிவேற்ற அவசியம் இல்லை. அனைத்துப் பள்ளிகளிலும் 1 முதல் 3ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2ஆம் பருவத்துக்கான தொகுத்தறி மதிப்பீட்டுப் பணிகளை நடத்த தலைமை ஆசிரியர்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் வழங்க வேண்டும்’’. 

இவ்வாறு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் கூறப்பட்டுள்ளது.

Term Exam: தொடக்கப்பள்ளி மாணவர்களுக்குத் தேர்வு எப்போது?- பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு என்ன?

அரையாண்டுத் தேர்வு எப்போது?

நடுநிலைப் பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 15ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 6, 8, 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு முற்பகலிலும் 7, 9 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கு பிற்பகலிலும் தேர்வு நடைபெறுகிறது. 

அனைத்து வகை உயர் / மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் உள்ள 5 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு சார்ந்த வினாத்தாள் கட்டுக்காப்பு மண்டல மையப்பள்ளி தலைமையாசிரியர்கள் மூலமாக வினாத்தாட்கள் வழங்கப்படும்.

தேர்வு நாட்களுக்குரிய வினாத்தாட்களை பெற தங்கள் பள்ளி சார்பாக ஒரு நபரைத் தேர்ந்தெடுத்து, அவ்விவரத்தினை மண்டல மையப்பள்ளித் தலைமையாசிரியருக்கு முன்கூட்டியே தகவலினைத் தெரிவித்தல் வேண்டும்.

அரையாண்டுத் தேர்வு கால அட்டவணையின்படி, தங்கள் பள்ளி சார்பாக அனுமதிக்கப்பட்ட நபர் சார்ந்த வினாத்தாள் கட்டுக்காப்பு மண்டல மையப்பள்ளி தலைமையாசிரியரை அணுகி அந்தந்த தேர்வு நாட்களுக்குரிய (முற்பகல் தேர்விற்கான வினாத்தாட்கள் காலை 7.30 மணியிலிருந்தும், பிற்பகல் தேர்விற்குரிய வினாத்தாட்கள் நண்பகல் 12 மணியிலிருந்தும்) வினாத்தாட்களை உரிய முறையில் பெற்று உரிய நேரத்திற்குள் மாணவர்களுக்கு வழங்கி தேர்வுகளை எவ்வித புகார்களுக்கு இடமளிக்காமல் சிறப்பான முறையில் நடத்த தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

கடந்த காலாண்டுத் தேர்வில் பள்ளிகளே வினாத்தாள்களைத் தயாரித்துக் கொள்ள பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டிருந்த நிலையில், தற்போது அரையாண்டுத் தேர்வுக்கு தமிழ்நாடு முழுவதும் பொதுவான வினாத்தாள் அடிப்படையில் அரையாண்டு தேர்வுகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. 

அரையாண்டு விடுமுறை

மாணவர்களுக்கு டிசம்பர் 24ஆம் தேதி முதல் அரையாண்டு விடுமுறை அளிக்கப்பட்டு வருகின்ற ஜனவரி 2-ஆம் தேதி விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"மகிழ்ச்சியையும் செழிப்பையும் கொண்டு வரட்டும்" பொங்கலுக்கு குடியரசுத் தலைவர் வாழ்த்து!
Seeman: அம்பேத்கரும், பெரியாரும் ஒன்னா? சிலை ஒன்னா வச்சாலும் சிந்தனை ஒன்னா? மீண்டும் சீறிய சீமான்
Seeman: அம்பேத்கரும், பெரியாரும் ஒன்னா? சிலை ஒன்னா வச்சாலும் சிந்தனை ஒன்னா? மீண்டும் சீறிய சீமான்
ஓராண்டுக்கு ரூ. 8,500! வேலையில்லா இளைஞர்களுக்கு ஜாக்பாட்.. காங்கிரஸ்-க்கு தாராள மனசு
ஓராண்டுக்கு ரூ. 8,500! வேலையில்லா இளைஞர்களுக்கு ஜாக்பாட்.. காங்கிரஸ்-க்கு தாராள மனசு
Chennai Rain: சென்னையை சூழ்ந்த கார்மேகங்கள்...நாளை மழை பெய்யுமா? வானிலை மையம் சொன்னது என்ன?
சென்னையை சூழ்ந்த கார்மேகங்கள்...நாளை மழை பெய்யுமா? வானிலை மையம் சொன்னது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Elephant Gandhimathi : யானை காந்திமதிக்கு என்னாச்சு? கதறி அழுத பாகன்! சோகத்தில் நெல்லை மக்கள்!V C Chandhirakumar Profile: செந்தில்பாலாஜி Choice! உடனே OK சொன்ன ஸ்டாலின்.. யார் இந்த சந்திரகுமார்?Erode East By Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. ஸ்டாலின் வைத்த கோரிக்கை நிறைவேற்றிய ராகுல்!Taiwan Couple Marriage in India : அம்மி மிதித்து..அருந்ததி பார்த்து திருமணம் செய்த தைவான் தம்பதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"மகிழ்ச்சியையும் செழிப்பையும் கொண்டு வரட்டும்" பொங்கலுக்கு குடியரசுத் தலைவர் வாழ்த்து!
Seeman: அம்பேத்கரும், பெரியாரும் ஒன்னா? சிலை ஒன்னா வச்சாலும் சிந்தனை ஒன்னா? மீண்டும் சீறிய சீமான்
Seeman: அம்பேத்கரும், பெரியாரும் ஒன்னா? சிலை ஒன்னா வச்சாலும் சிந்தனை ஒன்னா? மீண்டும் சீறிய சீமான்
ஓராண்டுக்கு ரூ. 8,500! வேலையில்லா இளைஞர்களுக்கு ஜாக்பாட்.. காங்கிரஸ்-க்கு தாராள மனசு
ஓராண்டுக்கு ரூ. 8,500! வேலையில்லா இளைஞர்களுக்கு ஜாக்பாட்.. காங்கிரஸ்-க்கு தாராள மனசு
Chennai Rain: சென்னையை சூழ்ந்த கார்மேகங்கள்...நாளை மழை பெய்யுமா? வானிலை மையம் சொன்னது என்ன?
சென்னையை சூழ்ந்த கார்மேகங்கள்...நாளை மழை பெய்யுமா? வானிலை மையம் சொன்னது என்ன?
அதிமுக வழியில் அண்ணாமலை.. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணிக்கும் பாஜக!
அதிமுக வழியில் அண்ணாமலை.. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணிக்கும் பாஜக!
கவர்னர் என்ற திமிரா? ஆவேசமாக டயலாக் பேசிய துரைமுருகன்!
கவர்னர் என்ற திமிரா? ஆவேசமாக டயலாக் பேசிய துரைமுருகன்!
ரயில் முன்பதிவில் முறைகேடுகள்.. புகார் அளிப்பது இனி ரொம்ப ஈஸி!
ரயில் முன்பதிவில் முறைகேடுகள்.. புகார் அளிப்பது இனி ரொம்ப ஈஸி!
அயலக தமிழர்களுக்கு புதிய திட்டம் - அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின் 
அயலக தமிழர்களுக்கு புதிய திட்டம் - அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின் 
Embed widget