Career Guidance: சிறந்த உயர்கல்வி படிப்புகளை தேர்வு செய்வது எப்படி? ட்ரெண்டிங் பின்னாடி ஓடாம இந்த 6 கேள்வி கேளுங்க!
கல்லூரிப் படிப்புகளைத் தேர்வு செய்யும்போது யாரும் ட்ரெண்டிங் பின்னால் ஓட வேண்டிய அவசியம் இல்லை. இந்த 6 கேள்விகளுக்கு விடை இருக்கிறதா என்று மட்டும் பாருங்கள்.

ஏபிபி நாடு வழங்கும் வானமே எல்லை என்னும் உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சியில், கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி சிறப்பான பொறியியல் படிப்புகள், கல்லூரிகளை தேர்வு செய்வது எப்படி என்று மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கினார். அதில் அவர் கூறி உள்ளதாவது:
கல்லூரிகள் சொல்வதை ஒரு முறைக்கு இருமுறை பரிசோதித்துக் கொள்ளுங்கள். மேலும் பொறியியல் படிப்புகளை பொறுத்தவரை முதலில் பாடத்திட்டத்தை தரவிறக்கம் செய்யுங்கள், பாடத்திட்டத்தில் என்னென்ன உள்ளடக்கம் இருக்கிறது என்று பாருங்கள் என்று கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி தெரிவித்தார்.
கல்லூரிப் படிப்புகளைத் தேர்வு செய்யும்போது யாரும் ட்ரெண்டிங் பின்னால் ஓட வேண்டிய அவசியம் இல்லை. இந்த 6 கேள்விகளுக்கு விடை இருக்கிறதா என்று மட்டும் பாருங்கள். ஏஐ-இடம் கூட இதுகுறித்துக் கேள்வி கேட்கலாம்.
- நான் படிப்பை முடித்துவிட்டு 2029 ல் வெளியே வரும் பொழுது வேலை வாய்ப்பை உருவாக்கி கொடுக்குமா?, என்ன வேலை இருக்கும் என்று பாருங்கள்.
- இவ்வளவு வேலை உருவாகும் என்றால், அதற்கு எத்தனை பேர் போட்டி போடுவார்கள்?
- இந்த வேலைக்கான குறைந்தபட்ச ஊதியம், அதிகபட்ச ஊதியம் எவ்வளவு?
4.அதிகபட்ச ஊதியம் பெற என்னென்ன திறமைகளைக் கூடுதலாக வளர்த்துக்கொள்ள வேண்டும்?
- என்ன மாதிரியான நிறுவனங்கள் நமக்கு வேலை கொடுப்பார்கள்? உள் நாட்டிலும், வெளி நாட்டிலும் உள்ள நிறுவனங்கள் என்னென்ன?
- இந்தத் துறையும் அது சார்ந்த வேலைகளும் எவ்வளவு காலத்துக்கு நீடிக்கும்?
இந்த கேள்விகளுக்கு பதில் கண்டுபிடித்து, அதற்கேற்ற படிப்புகளைத் தேர்வு செய்யலாம். ட்ரெண்டிங் பின்னால் ஓட வேண்டியதில்லை என்று கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி தெரிவித்தார்.
முழு பேட்டியையும் காண இந்த வீடியோவைப் பார்க்கலாம்.






















