UPSC Mains Result 2023: யு.பி.எஸ்.சி. மெயின் தேர்வு முடிவுகள் வெளியீடு - ரிசல்ட் பார்ப்பது எப்படி?
யு.பி.எஸ்.சி. முதன்மைத் தேர்வுகளின் முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. எப்படி பார்ப்பது என்பதை கீழே விரிவாக காணலாம்.
மத்திய அரசின் உயர் பதவிகளுக்காக யு.பி.எஸ்.சி. தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், யு.பி.எஸ்.சி. தேர்வின் முடிவுகள் வெளியாகியுள்ளது.
UPSC Mains Exams:
நாட்டின் நிர்வாக பணிகளுக்காக ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். ஐ.எஃப்.எஸ். உள்பட உயர் பதவிகளுக்கு யு.பி.எஸ்.சி. தேர்வுகள் நடத்தப்பட்டு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில், யு.பி.எஸ்.சி. சார்பில் கடந்த செப்டம்பர் 15 முதல் கடந்த செப்டம்பர் 24 வரை முதன்மைத் தேர்வுகள் நடத்தப்பட்டது. அந்த தேர்வின் முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது.
தற்போது வெளியாகியுள்ள யு.பி.எஸ்.சி. முதன்மைத் தேர்வு முடிவுகளை upsc.gov.in என்ற இணையதளத்திற்குள் செல்ல வேண்டும். அதில், UPSC Mains Result 2023 என்பதை தேர்வு செய்யவும். அது முகப்பு பக்கத்திலே இருக்கும். அதில், முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் பெயர்கள் அவர்களுடைய பதிவெண்களுடன் இருக்கும்.
முடிவுகள் பார்ப்பது எப்படி?
தேர்வு எழுதியவர்கள் தங்களது பதிவெண்கள் இருக்கிறதா? என்று பரிசோதித்துக் கொள்ளவும். மேலும், அதை பதிவிறக்கம் செய்து வைத்துக் கொள்வதும் மிகவும் நல்லது ஆகும். தற்போது முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் டெல்லியில் நடைபெறும் திறனறிவுத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.
டெல்லி, ஷாஜகான் சாலையில் உள்ள தோல்பூர் இல்லத்தில் நடைபெற உள்ள திறனறிவுத் தேர்வுக்கான அழைப்பு முறைப்படி, தேர்ச்சி பெற்றவர்களுக்கு விடுக்கப்படும். இந்த தேர்விலும் தேர்ச்சி பெறுபவர்கள் அவரவர் தகுதிக்கு ஏற்ப பொறுப்புகளும், பணிகளும் வழங்கப்படும். திறனறிவுத் தேர்வு நிறைவு பெற்ற பிறகு 15 நாட்களுக்குள் அதன் முடிவுகள் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதில், தேர்வில் பங்கேற்றவர்களின் மதிப்பெண் பட்டியல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.