மேலும் அறிய

UPSC Result 2022 TN List: யூபிஎஸ்சி தேர்வுகளில் தமிழ்நாட்டில் இருந்து 42 பேர் தேர்ச்சி; வெளியான முழு பட்டியல் இதோ!

UPSC Result 2022 Tamil Nadu List: 2022ஆம் ஆண்டு தேர்வுக்கான யூபிஎஸ்சி இறுதி முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் தமிழ்நாட்டில் இருந்து 42 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

UPSC Result 2022 Tamil Nadu List: ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் உள்ளிட்ட பணிகளுக்கு நடத்தப்பட்ட 2022ஆம் ஆண்டு தேர்வுக்கான யூபிஎஸ்சி இறுதி முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் தமிழ்நாட்டில் இருந்து 42 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யூபிஎஸ்சி)  சார்பில் ஆண்டுதோறும் சிவில் சர்வீஸ் எனப்படும் குடிமைப் பணித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ், குரூப் ஏ, குரூப் பி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் உள்ள காலிப் பணியிடங்களுக்குத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வுகள் முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்காணல் என மொத்தம் 3 கட்டங்களாக நடைபெறுகின்றன. ஏதாவது ஓர் இளங்கலைப் பட்டம் முடித்திருக்கும் தேர்வர்கள், யூபிஎஸ்சி தேர்வை எழுதலாம்.

இந்த நிலையில் 20222ஆம் ஆண்டுக்கான இந்தியக் குடிமைப் பணி முதல்நிலைத் தேர்வு கடந்த ஆண்டு ஜூன் 5ஆம் தேதியன்று நடத்தப்பட்டது. இதில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு செப்டம்பர் 16ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை முதன்மைத் தேர்வுகள் நடைபெற்றன. இந்தத் தேர்வின் முடிவுகள் டிசம்பர் 6ஆம் தேதி அன்று
வெளியாகின. 

முதன்மைத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு  2023ஆம் ஆண்டு மார்ச் 13 முதல் மே 18 வரை தலைநகர் டெல்லியில் நேர்முகத் தேர்வு நடைபெற்றது. இவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று (23.05.2023) அறிவிக்கப்பட்டன. இதில் 933 பேர் தேர்ச்சி பெற்ற நிலையில், தமிழ்நாட்டில் இருந்து 42 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

முதல் முயற்சியிலேயே வெற்றி

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சென்னை, பெரம்பூரைச் சேர்ந்த ஜீ ஜீ என்னும் மாணவி, 107ஆவது இடத்தைப் பிடித்து, முதலிடத்தைப் பெற்றுள்ளார். இவர் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றவர் ஆவார். 

அதை அடுத்து, கோவில்பட்டியைச் சேர்ந்த ராமகிருஷ்ண சாமி என்ற தேர்வர் யூபிஎஸ்சி தேர்வில் 117ஆவது இடத்தைப் பிடித்து தேர்ச்சி பெற்றுள்ளார். அதேபோல சென்னையைச் சேர்ந்த மதிவதனி ராவணன் என்ற தேர்வர், 447ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.  

குடியரசு என்னும் தேர்வர், 849ஆவது இடத்தைப்பிடித்துள்ளார். அருண் என்னும் தேர்வர் 436ஆம் இடத்தையும் , கார்த்திக் என்னும் தேர்வர்கள் 488ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர். எழிலரசன் என்னும் தேர்வர் 523ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.

ஏற்கெனவே குடிமைப் பணியில் இருந்த குடியரசு என்னும் தேர்வர் 849ஆவது இடத்தையும் ராகுல் என்னும் தேர்வர் 858ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் இருந்து தேர்வான 42 பேரின் பட்டியல் இதோ..!

வ.எண் ரேங்க்       பெயர் 
1 107 ஜீ ஜீ
2 117 ராமகிருஷ்ணசாமி    ஆர்
3 118 சுபாஷ் கார்த்திக் 
4 147 சரவணன்
5 168 அக்ஷயா 
6 169 சைத்ரியா கவின் 
7 229 அஸ்வினி ஜி
8 232 அனுக்ரஹா வி
9 235 சிவா ரஞ்சினி
10 289 ஹரினி கே.ஆர்.
11 291 இஷானி ஆனந்த்
12 361 அரவிந்த் ராதாகிருஷ்ணன்
13 427 வைஷாலி ஆர்
14 436 அருண்
15 447 மதிவதனி
16 459 சாணக்ய உதயகிரி
17 461 அருண் குமார் 
18 472 லட்சுமி பிரபா 
19 487 சரவணன்
20 488 கார்த்திக் 
21 509 அஞ்சலி 
22 518 சத்ய பார்வதி 
23 523 எழிலரசன்.வி.
24 524 டேனியல் ராஜ்.சி.
25 578 சிவபிரகாஷ் எஸ்.வி.
26 612 முகமது யாக்கூப்
27 621 சுப்புராஜ்
28 629 அபினேஷ் குமார்
29 698 மணிமாலா.என்.
30 731 டி.வசுமதி
31 757 பிரதீப்.ப.
32 761 பி அஸ்வின்
33 764 சந்தீப் டி
34 784 கார்த்திக் கன்சால்
35 847 ஸ்ரீநாத் டி
36 849 குடியரசு
37 857 ரவி மீனா
38 858 ராகுல்
39 884 ராஜேஷ்
40 577 மோகனப்பிரியா
41 528 சுஷ்மிதா

இதையும் வாசிக்கலாம்: UPSC Exam Results: 2022 யூ.பி.எஸ்.சி. தேர்வு இறுதி முடிவுகள் வெளியீடு; 933 பேர் தேர்ச்சி- காண்பது எப்படி?

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு  சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன்,  வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன், வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு  சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன்,  வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன், வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Popcorn GST: ஏற்கனவே அநியாய விலை! பாப் கார்னுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி.யா? புலம்பும் ரசிகர்கள்
Popcorn GST: ஏற்கனவே அநியாய விலை! பாப் கார்னுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி.யா? புலம்பும் ரசிகர்கள்
Breaking News LIVE:பா.ஜ.க.வுக்கும், சமூகநீதிக்கும் என்ன சம்பந்தம்? சீமான் கேள்வி
Breaking News LIVE:பா.ஜ.க.வுக்கும், சமூகநீதிக்கும் என்ன சம்பந்தம்? சீமான் கேள்வி
DMK Meeting: விஜயை சமாளிப்பது எப்படி? உள்ளாட்சி தேர்தல் - இன்று கூடுகிறது திமுக செயற்குழு கூட்டம், ஸ்டாலின் உத்தரவு என்ன?
DMK Meeting: விஜயை சமாளிப்பது எப்படி? உள்ளாட்சி தேர்தல் - இன்று கூடுகிறது திமுக செயற்குழு கூட்டம், ஸ்டாலின் உத்தரவு என்ன?
Pushpa 2 Collection: அடங்காத வசூல்! அரண்டு போன பாலிவுட்! கோடிகளை குவிக்கும் புஷ்பா 2!
Pushpa 2 Collection: அடங்காத வசூல்! அரண்டு போன பாலிவுட்! கோடிகளை குவிக்கும் புஷ்பா 2!
Embed widget