UGC NET 2024: இன்றே கடைசி: ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாமல் தேர்வர்கள் அவதி!
UGC NET December 2024 Registration: யுஜிசி நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும்போது தொழில்நுட்பக் கோளாறு ஏற்படுவதால் விண்ணப்பிக்க முடியவில்லை என்று தேர்வர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்ற நடத்தப்படும் யுஜிசி நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசித் தேதி ஆகும். எனினும் விண்ணப்பிக்கும்போது தொழில்நுட்பக் கோளாறு ஏற்படுவதால் விண்ணப்பிக்க முடியவில்லை என்று தேர்வர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
தேசிய ஆசிரியர் தகுதித் தேர்வு ஆண்டுதோறும் 2 முறை, தேசியத் தேர்வுகள் முகமையால் நடத்தப்படுகிறது. ஜூன், டிசம்பர் மாதங்களில் இந்தத் தேர்வு நடைபெறும் நிலையில், டிசம்பர் மாத அமர்வு ஜனவரி மாதம் நடைபெற உள்ளது.
டிசம்பர் 11 வரை விண்ணப்பக் கட்டணம் செலுத்தலாம்
குறிப்பாக, ஜனவரி 1 முதல் 19 வரை யுஜிசி நெட் தேர்வு 83 பாடங்களுக்கு நடைபெற உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி ஆகும். அதே நேரத்தில், விண்ணப்பக் கட்டணத்தை டிசம்பர் 11ஆம் தேதி இரவு 11.50 மணி வரை செலுத்தலாம் என்று யுஜிசி தெரிவித்துள்ளது. விண்ணப்பத்தில் திருத்தங்களை மேற்கொள்ள டிசம்பர் 12, 13 ஆகிய தேதிகள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி?
* விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் முதலில் ugcnet.nta.ac.in என்ற இணைப்பை தேர்வு செய்யவும்,
* முகப்புப் பக்கத்தில் UGC NET December 2024 Registration open - Click Here என்ற இணைப்பு தோன்றும்.
* அதை க்ளிக் செய்யவும்.
* புதிதாக ஒரு பக்கம் தோன்றும். அதில் முன்பதிவு செய்து, கேட்கப்படும் தகவல்களைப் பூர்த்தி செய்யவும்.
* தேவையான ஆவணங்களைப் பதிவேற்றம் செய்த பிறகு, விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.
* விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* அதேபோல தேர்வர்கள் https://ugcnet.ntaonline.in/ என்ற இணைப்பை க்ளிக் செய்தும் விண்ணப்பிக்கலாம்.
எனினும் விண்ணப்பிக்கும்போது தொழில்நுட்பக் கோளாறு ஏற்படுவதால் விண்ணப்பிக்க முடியவில்லை என்று தேர்வர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இதனால் விண்ணப்பத் தேதியை நீட்டிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
6 days.I've been trying to apply for UGC NET but the issue still persists. This is nothing short of a disgrace. The incompetence of the agency responsible for major exams is unacceptable. Stop making a mockery of the system and fix this chaos! @NTA_Exams @dpradhanbjp @ugc_india pic.twitter.com/CdlwxbkEX0
— Bilal Hussain (@bilaalhusain) December 10, 2024
இ- மெயில் முகவரி: ugcnet@nta.ac.in
கூடுதல் தகவல்களுக்கு https://ugcnet.nta.ac.in/images/public-notice-ugc-net-december-2023-for-application.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து காண வேண்டும்.
யுஜிசி நெட் இணைய தள விவரம்: https://ugcnet.nta.ac.in/

