மேலும் அறிய

UGC Equity Regulation: யுஜிசி புது விதிகள் பொதுப்பிரிவு மாணவர்களுக்கு ஆபத்தா? எழும் எதிர்ப்புகள்- உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!

UGC 2026 Equity Regulation: சட்டம் அனைவருக்கும் சமமான பாதுகாப்பை அளிக்க வேண்டும். பொய்ப் புகார்கள் அளிக்கப்பட்டால் அதைக் கையாள்வது எப்படி? யுஜிசி புதிய விதிகள் பாரபட்சமாக உள்ளன.

யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழு, உயர்கல்வி நிறுவனங்களில் சமத்துவத்தை ஊக்குவிப்பதற்காக வெளியிட்ட 2026ஆம் ஆண்டிற்கான புதிய விதிமுறைகள் (2026 UGC regulation) நாடு முழுவதும் கடும் விவாதத்தையும் எதிர்ப்பையும் கிளப்பியுள்ளன. குறிப்பாக, இந்த விதிகள் பொதுப்பிரிவு (General Category) மாணவர்களுக்கு எதிராக, ஒரு சார்பாக இருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

சர்ச்சை என்ன?

யுஜிசி கடந்த ஜனவரி 13ஆம் தேதி அன்று, சாதிப் பாகுபாடு குறித்த ஒரு ரெகுலேஷனை வெளியிட்டது. அதில், சாதி, பிறப்பு, மதம், பாலினம், பிறந்த இடம் ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபாடு காட்டப்படக் கூடாது என்று கூறப்பட்டது. உயர் கல்வி நிறுவனங்களில் சமத்துவத்தை ஊக்குவிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.

எனினும் சாதிப் பாகுபாடு என்பதற்கு அளித்துள்ள விளக்கத்தில் எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி மாணவர்களுக்கு மட்டுமே பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என்றும் 2025ஆம் ஆண்டு வரைவு விதிகளில் இருந்த "பொய்ப் புகார் அளிப்பவர்கள் மீதான அபராத நடவடிக்கை" குறித்த அம்சம், இறுதி விதிகளில் நீக்கப்பட்டுள்ளது என்றும் புகார் எழுந்துள்ளது. இது பொதுப்பிரிவு மாணவர்கள் மீது தவறான புகார்கள் அளிக்க வழிவகுக்கும் என்றும், அவர்கள் தங்களைப் தற்காத்துக்கொள்ள வழியில்லாமல் போகும் என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

இந்த விவகாரம் தற்போது உச்ச நீதிமன்றப் படியேறியுள்ளது. பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் மிருத்யுஞ்சய் திவாரி என்பவர், இந்த விதிகளை எதிர்த்து ரிட் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

UGC Equity Regulation: யுஜிசி புது விதிகள் பொதுப்பிரிவு மாணவர்களுக்கு ஆபத்தா? எழும் எதிர்ப்புகள்- உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!

எழும் விவாதங்கள்

இதுகுறித்து மாநிலங்களவை எம்.பி. பிரியங்கா சதுர்வேதி கூறும்போது, "சட்டம் அனைவருக்கும் சமமான பாதுகாப்பை அளிக்க வேண்டும். பொய்ப் புகார்கள் அளிக்கப்பட்டால் அதைக் கையாள்வது எப்படி? இந்த விதிகள் பாரபட்சமாக உள்ளன" எனச் சாடியுள்ளார். உ.பி. பாஜக எம்எல்சி தேவேந்திர பிரதாப் சிங் மற்றும் குமாவோன் பல்கலைக்கழக மாணவர் சங்கம் ஆகியோர் கூறும்போது, "இது மாணவர்களிடையே அச்சத்தையும், தேவையற்ற பிரிவினையையும் உருவாக்கும்" எனத் தெரிவித்துள்ளனர்.

பாஜக விளக்கம்

எதிர்ப்புகள் வலுத்து வரும் நிலையில், ஜார்க்கண்ட் பாஜக எம்.பி நிஷிகாந்த் துபே, "மோடி அரசு இருக்கும் வரை உயர் சாதியினரின் குழந்தைகளுக்கு எந்தப் பாதிப்பும் வராது. பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்த்தப்பட்ட வகுப்பினருக்கு (EWS) இடஒதுக்கீடு வழங்கியதே இந்த அரசுதான். அனைத்துக் குழப்பங்களும் விரைவில் தீர்க்கப்படும்" என்று சமாதானம் கூறியுள்ளார்.

ஒருபுறம் பொதுப்பிரிவினர் இதை எதிர்க்க, மறுபுறம் சில சமூகச் செயற்பாட்டாளர்கள், "இந்த விதிகள் ஒடுக்கப்பட்ட மாணவர்களைப் பாதுகாக்கப் போதுமானதாக இல்லை" என்று கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பாக https://www.ugc.gov.in/pdfnews/1881254_UGC-Promotion-of-Equity-in-HEIs-Regulations-2026.pdf என்ற இணைப்பில் யுஜிசி விதிகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: விடைத்தாள் பாதுகாப்பு குறித்த முக்கிய அறிவிப்பு! தவறினால் என்ன நடக்கும்?
12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: விடைத்தாள் பாதுகாப்பு குறித்த முக்கிய அறிவிப்பு! தவறினால் என்ன நடக்கும்?
 ICAI சிஏ இறுதித் தேர்வு முடிவுகள் வெளியீடு: தீக்‌ஷா முதலிடம்- எவ்வளவு மதிப்பெண்கள்? மற்றவர்கள் எப்படி?
 ICAI சிஏ இறுதித் தேர்வு முடிவுகள் வெளியீடு: தீக்‌ஷா முதலிடம்- எவ்வளவு மதிப்பெண்கள்? மற்றவர்கள் எப்படி?
IIT Madras: மார்பகப் புற்றுநோய்: இந்தியாவில் அதிர்ச்சி தரும் மரபணு பாதிப்பு! ஐஐடி சென்னை ஆய்வு சொல்வது என்ன?
IIT Madras: மார்பகப் புற்றுநோய்: இந்தியாவில் அதிர்ச்சி தரும் மரபணு பாதிப்பு! ஐஐடி சென்னை ஆய்வு சொல்வது என்ன?
TN Govt School Admission: 2026- 27 கல்வியாண்டு: அரசுப்பள்ளி மாணவர் சேர்க்கை! பெற்றோர்களே, இதை மிஸ் பண்ணாதீங்க!
TN Govt School Admission: 2026- 27 கல்வியாண்டு: அரசுப்பள்ளி மாணவர் சேர்க்கை! பெற்றோர்களே, இதை மிஸ் பண்ணாதீங்க!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Gold Price Hike | ஷாக் கொடுத்த தங்கம் ஈரான் தான் காரணமா? எப்போது குறையும் Gold Price | Iran War
Iran IRGC | ஈரானின் வலிமையான படை! US-க்கு பயம் காட்டிய IRGC தரைமட்டமாக்கிய ட்ரம்ப்! பகீர் காட்சி
Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK
TVK Flag Accident | தலையில் விழுந்த கொடிக்கம்பம் பேச்சை நிறுத்தாத நாஞ்சில் தவெக மேடையில் பரபரப்பு
Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Smallpox Prevention : சின்னம்மை பாதிப்பா குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாதீங்க... பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் என்ன.?
சின்னம்மை பாதிப்பா குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாதீங்க... பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் என்ன.?
TN Assembly: போஸ்டர், பேனர்களுக்கு நோ.. அரசியல் கட்சிகளையே அலறவிடும் தமிழக கிராமம் - எந்த ஊருப்பா?
TN Assembly: போஸ்டர், பேனர்களுக்கு நோ.. அரசியல் கட்சிகளையே அலறவிடும் தமிழக கிராமம் - எந்த ஊருப்பா?
Khameni: 15 நிமிஷம்தான்.. முடிவுக்கு வந்த சண்டை! காஷ்மீரில் அப்பவே சம்பவம் செய்த காமேனி!
Khameni: 15 நிமிஷம்தான்.. முடிவுக்கு வந்த சண்டை! காஷ்மீரில் அப்பவே சம்பவம் செய்த காமேனி!
Israel Iron Beam: இஸ்ரேல் களமிறக்கிய அதிநவீன ஆயுதம்; சிதறும் எதிரிகளின் ஏவுகணைகள்; அதென்ன அயர்ன் பீம்.?
இஸ்ரேல் களமிறக்கிய அதிநவீன ஆயுதம்; சிதறும் எதிரிகளின் ஏவுகணைகள்; அதென்ன அயர்ன் பீம்.?
கிளாப் அடிக்குறதுனா சும்மாவா? விக்ரமனையே மிரளவைத்த காமெடி நடிகர் - இவரா?
கிளாப் அடிக்குறதுனா சும்மாவா? விக்ரமனையே மிரளவைத்த காமெடி நடிகர் - இவரா?
KS Ravikumar: விக்ரமனிடம் கே.எஸ்.ரவிக்குமார் போட்ட கண்டிஷன்- என்ன தெரியுமா?
KS Ravikumar: விக்ரமனிடம் கே.எஸ்.ரவிக்குமார் போட்ட கண்டிஷன்- என்ன தெரியுமா?
இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டல்...சர்ச்சையில் மஞ்சும்மல் பாய்ஸ் இயக்குநர் சிதம்பரம்
இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டல்...சர்ச்சையில் மஞ்சும்மல் பாய்ஸ் இயக்குநர் சிதம்பரம்
Saudi Arabia Attack: ”உலகின் எண்ணெய் வங்கி” அராம்கோவை தாக்கிய ஈரான் ட்ரோன்கள் - கலக்கத்தில் உலக நாடுகள்
Saudi Arabia Attack: ”உலகின் எண்ணெய் வங்கி” அராம்கோவை தாக்கிய ஈரான் ட்ரோன்கள் - கலக்கத்தில் உலக நாடுகள்
Embed widget