மேலும் அறிய

College Cultural Fests: சாரங் முதல் ஃபெஸ்டம்பர் வரை; நாடு முழுவதும் கல்லூரிகளில் களைகட்டும் கலைவிழாக்கள்- பட்டியல் இதோ!

நாட்டின் மத்தியக் கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு கல்லூரிகளில் கொண்டாடப்படும் கலை, கலாச்சார திருவிழாக்கள் குறித்து விளக்கமாகக் காணலாம்.

கல்லூரிகள் என்றாலே நண்பர்களிடையே கரை புரண்டு ஓடும் உற்சாகமும் களைகட்டும் விழாக்களும்தான் முதலில் நினைவில் வரும். விழாக்களில் ஆட்டம், பாட்டு, நாடகம் என மாணவர்களின் தனித் திறன்கள் மிளிரும். மாணவர்களும் மாணவிகளும் போட்டிபோட்டுக் கொண்டு, தங்களின் திறனை வெளிப்படுத்துவர். இந்த விழாக்களுக்கு கல்லூரிகள் தனியாகப் பெயர் ஒன்றைச் சூட்டி, ஆண்டுதோறும் அதே பெயரில் விமரிசையாகக் கொண்டாடும். கல்வி நிறுவனங்களில் கலை விழாக்களோடு, தொழில்நுட்பம் சார்ந்த கண்காட்சிகளும் (Technical Symposium) ஆண்டுதோறும் நடைபெறும். 

அந்த வகையில் நாட்டின் மத்தியக் கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு கல்லூரிகளில் கொண்டாடப்படும் கலை, கலாச்சார திருவிழாக்கள் குறித்து விளக்கமாகக் காணலாம்.

Mood Indigo - IIT Bombay

நாட்டின் தலைசிறந்த கல்லூரிகளில் ஐஐடி மும்பையும் ஒன்று. இங்கு ஆண்டுதோறும் நடத்தப்படும் மூட் இண்டிகோ மிகவும் பிரபலம். ஆசியாவிலேயே மிகப்பெரிய கல்லூரி விழாக்களில் இதுவும் ஒன்று. உலகப் புகழ்பெற்ற இந்த விழாவில், இந்தியா முழுவதிலும் இருந்து சுமார் 1 லட்சம் மாணவர்கள் கலந்துகொள்வர். இதில், இசை கச்சேரிகள், நடனம், தியேட்டர் காட்சிகள் மற்றும் பல கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றும். 

College Cultural Fests: சாரங் முதல் ஃபெஸ்டம்பர் வரை; நாடு முழுவதும் கல்லூரிகளில் களைகட்டும் கலைவிழாக்கள்- பட்டியல் இதோ!

Oasis - BITS Pilani

ராஜஸ்தான் மாநிலம், பிலானி என்னும் இடத்தில் உள்ள பிர்லா தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (பிட்ஸ் பிலானி) கொண்டாடப்படும் ஒயாசிஸ் என்னும் கலை விழாவும் மாணவர்கள் மத்தியில் வெகு பிரசித்தம். இங்கு இசைக் கச்சேரிகள், பல்வேறு வகையான நடன செயல்பாடுகள், இலக்கியப் போட்டிகள் ஆகியவை நடைபெறும். 

முதன்முதலில் 1971ஆம் ஆண்டு சிறிய விழாவாக ஒயாசிஸ் தொடங்கப்பட்டது. பின்னர் நாளடைவில் பிரம்மாண்டமான விழாவாக மாறியது. இப்போது நாடு முழுவதிலும் இருந்து சுமார் 200 கல்லூரிகள் இந்த விழாவில் கலந்துகொள்கின்றன.

சாரங், ஐஐடி சென்னை

சென்னையில் ஐஐடி சென்னை நடத்தும் சாரங் (Saarang) தமிழ்நாட்டு மாணவர்கள் மட்டுமல்லாமல், பிற மாநில மாணவர்கள் மத்தியிலும் பிரபலமான கலை விழாவாகும். சாரங் விழா மிகவும் பழமையான கல்லூரி கலை விழாக்களில் ஒன்று. இங்கும் பிற கல்வி நிறுவனங்களைப் போன்று இயல், இசை, நாடக விழாக்கள் நடைபெறும். மொத்தம் 5 நாட்களுக்கு இந்த விழா நடைபெறுகிறது. முன்னதாக Mardi Gras என்று சாரங் விழா அழைக்கப்பட்டது. 

Rendezvous- ஐஐடி டெல்லி

Rendezvous கலை விழா, ஐஐடி டெல்லியில் ஆண்டுதோறும் நடைபெறும் கலைத் திருவிழா ஆகும். இது வட இந்தியாவில் நடைபெறும் மிகப்பெரிய கல்லூரி விழாக்களில் ஒன்று. இங்கு கலை செயல்பாடுகளுடன் இலக்கியப் போட்டிகளும் நடத்தப்படுகின்றன. இந்த விழாவில் நாடு முழுவதிலும் இருந்து 350 கல்லூரிகளைச் சேர்ந்த, சுமார் 50 ஆயிரம் மாணவர்கள் கலந்துகொள்கின்றனர். 

டெக்ஃபெஸ்ட், ஐஐடி மும்பை

இது ஐஐடி மும்பையால் ஆண்டுதோறும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்களுக்காக நடத்தப்படும் கண்காட்சி (TechFest) ஆகும். ஆசியாவிலேயே மிகப் பெரிய இந்த தொழில்நுட்பக் கண்காட்சியில், உலகம் முழுவதிலும் இருந்து மாணவர்கள் கலந்துகொள்வர். 

Unmaad - ஐஐஎம் பெங்களூரு 

ஐஐஎம் பெங்களூரு சார்பில் நடத்தப்படும் Unmaad விழா 1996 முதல் நடத்தப்படுகிறது. அதீத மகிழ்ச்சி எனப் பொருள்படும் இந்த உன்மாத் விழா. மாணவர்களுக்கும் கல்லூரிகளுக்கும் மகிழ்வை அளிக்கிறது. இங்கு நடக்கும் ஃபேஷன் ஷோ மிகவும் பிரபலம். 

College Cultural Fests: சாரங் முதல் ஃபெஸ்டம்பர் வரை; நாடு முழுவதும் கல்லூரிகளில் களைகட்டும் கலைவிழாக்கள்- பட்டியல் இதோ!

ஃபெஸ்டம்பர் - என்ஐடி திருச்சி

1975 முதல் இந்த விழா நடத்தப்படுகிறது. இசை, நடனம், உணவு, கலை, பிரபலங்கள், இலக்கிய நிகழ்வுகள், வினாடி வினா, பட்டறைகள் மற்றும் இசை நிகழ்ச்சிகள் இங்கு நடத்தப்படுகின்றன. பெயரிலேயே இருப்பதைப் போல இந்த விழா ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் (Fest + September- Festember) நடைபெறுகிறது.

Riviera, விஐடி பல்கலைக்கழகம்

தமிழ்நாட்டின் வேலூர் தொழில்நுட்ப நிறுவனத்தில் 3 முதல் 4 நாட்களுக்கு நடத்தப்படும் Riviera விழா தேசியப் புகழ்பெற்ற விழாக்களில் ஒன்றாகும். இந்த விழா ஜனவரி - பிப்ரவரி மாதங்களில் நடைபெறுகிறது. இசை, நடனம், கலை, நுண் கலை, விவாதம், இலக்கியம் என பல்வேறு துறைகளில் 100-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் இந்த விழாவில் நடத்தப்படுகின்றன. புகழ்பெற்ற திரைக் கலைஞர்கள் பலர் இந்த விழாவில் கலந்து கொள்கின்றனர்.

இவை தவிர ஐஐடி காரக்பூர் நடத்தும் என்ஐடி கோழிக்கோடு தொடங்கி நடத்தும் ராகம் (Ragam- NIT Calicut) விழா, எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தின் மிலன் கலை விழா (Milan- SRM University), லயோலா கல்லூரியின் ஓவேஷன்ஸ் (LOYOLA OVATIONS) ஆகிய கலை விழாக்களும் புகழ்பெற்ற திருவிழாக்களில் முக்கியமானவை ஆகும்.

எதற்காக இந்த விழாக்கள்?

கடந்த காலங்களில் விழா குறித்த அழைப்பிதழ்கள், அருகில் உள்ள கல்லூரிகள் அனைத்துக்கும் போஸ்டர்கள் வாயிலாக அனுப்பப்படும். இப்போதெல்லாம் சமூக வலைதளங்கள் அதிகரித்த நிலையில், ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கலை விழாக்களின் பெயரில் கணக்குகள் தொடங்கப்பட்டு, நிகழ்வின் அப்டேட்டுகள் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. இதன்மூலம் கல்லூரி மாணவர்கள் தங்களுக்குள் தகவலைப் பரிமாறிக் கொள்கின்றனர்.

இந்த விழாக்களின் மூலம் நாடு முழுவதும் வெவ்வேறு பகுதிகளில் உள்ள மாணவர்கள் தங்களுக்குள் கலந்துரையாட முடியும். சிந்தனைகளை, திறனைப் பரிமாறிக்கொள்ள முடியும். வழக்கமான படிப்பு, செமஸ்டர், பிராக்டிகல் ஆகியவற்றில் இருந்து சற்றே இடைவெளி எடுத்து, உடலையும் மனத்தையும் புத்துணர்ச்சி பெறச்செய்ய முடியும். 

இதையும் வாசிக்கலாம்: Positive College Experience: வசந்த காலம்...வருங்காலத்துக்கான அடித்தளம்: கல்லூரி வாழ்க்கைக்குள் நுழையும் முன் தெரிந்துகொள்ளவேண்டியவை

College Students Lunch Ideas: கல்லூரி மாணவர்களே, கேன்டீனுக்கு நோ சொல்லுங்க... இனி புதுப்புது லன்ச்தான்! இதை செய்து பாருங்க!

கல்வியோடு உடல் நலமும் மன நலமும் முக்கியம்! கல்லூரி மாணவர்களுக்கு சில முக்கிய டிப்ஸ்!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Anna University Issue:
"ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி" அண்ணா பல்கலை. விவகாரம்.. சென்னை கமிஷனர் அருண் பரபர தகவல்!
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
Pushpa 2 Collection :  கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
Pushpa 2 Collection : கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
"இந்தியா கூட்டணியில் உங்களுக்கு இடம் இல்ல" காங்கிரஸ்-க்கு கெட் அவுட்.. கொதிக்கும் கெஜ்ரிவால்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anna University Issue:
"ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி" அண்ணா பல்கலை. விவகாரம்.. சென்னை கமிஷனர் அருண் பரபர தகவல்!
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
Pushpa 2 Collection :  கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
Pushpa 2 Collection : கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
"இந்தியா கூட்டணியில் உங்களுக்கு இடம் இல்ல" காங்கிரஸ்-க்கு கெட் அவுட்.. கொதிக்கும் கெஜ்ரிவால்!
TN Rain: மழை மட்டுமல்ல பனியும் இருக்கும்: தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்?
மழை மட்டுமல்ல பனியும் இருக்கும்: தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்?
மதுரை மக்களே உஷார்.. நாளை (27-12-2024) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் இதுதான்
மதுரை மக்களே உஷார்.. நாளை (27-12-2024) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் இதுதான்
விபத்தா? திட்டமிட்ட சதியா? அஜர்பைஜான் விமானத்தை சுட்டு வீழ்த்திய ரஷியா?
விபத்தா? திட்டமிட்ட சதியா? அஜர்பைஜான் விமானத்தை சுட்டு வீழ்த்திய ரஷியா?
அண்ணா பல்கலை. மாணவி விவரங்களோடு வெளியான எஃப்ஐஆர்; உடன்பட வைத்தது எப்படி?- பரபரப்புத் தகவல்கள்!
அண்ணா பல்கலை. மாணவி விவரங்களோடு வெளியான எஃப்ஐஆர்; உடன்பட வைத்தது எப்படி?- பரபரப்புத் தகவல்கள்!
Embed widget