Group 4 Exam Preparation: உள்ளங்கையில் அரசுப் பணி 17- அறிவியலில் அதிக மதிப்பெண்ணை அள்ளுவது எப்படி?
அறிவியல் அயர்ச்சியை ஏற்படுத்தும் என்ற எண்ணம் மாணவர்கள் உள்ளிட்ட பெரும்பாலான தேர்வர்களிடம் இருப்பதைக் காண முடிகிறது.
உங்கள் எண்ணத்தை மட்டுமல்ல வாழ்க்கையையே கூட இந்தத் தொடர் மாற்றலாம்.
அறிவியல் அயர்ச்சியை ஏற்படுத்தும் என்ற எண்ணம் மாணவர்கள் உள்ளிட்ட பெரும்பாலான தேர்வர்களிடம் இருப்பதைக் காண முடிகிறது. அன்றாட வாழ்க்கையுடன் தொடர்புபடுத்தி, புரிந்து படித்தால், அறிவியலிலும் மதிப்பெண்களை அள்ளலாம்.
குரூப் 4 தேர்வுக்கான பொது அறிவியல் பாடத்திட்டம்
i. பேரண்டத்தின் இயல்பு – இயற்பியல் அளவுகளின் அளவீடுகள் – இயக்கவியலில் பொது அறிவியல் விதிகள் – விசை, அழுத்தம் மற்றும் ஆற்றல் – அன்றாட வாழ்வில் இயந்திரவியல், மின்னியல், காந்தவியல், ஒளி, ஒலி, வெப்பம் மற்றும் அணுக்கரு இயற்பியலின் அடிப்படைக் கோட்பாடுகளும் அதன் பயன்பாடுகளும்.
பொது அறிவியல் பாடம் கடினமானது என்று பெரும்பாலானோர் கருதும் நிலையில், அறிவியலையும் அசத்தலாகப் படித்து, மதிப்பெண்களை அள்ளலாம் என்கிறார் ஆட்சியர் கல்வியின் நிறுவனர் செல்வ ராம ரத்தினம். இதுகுறித்து 'ஏபிபி நாடு'விடம் அவர் தெரிவித்ததாவது:
''பழைய கேள்வித் தாள்களை ஒப்பிட்டுப் பார்த்துப் படித்தால், டிஎன்பிஎஸ்சி கேள்வி கேட்கும் முறையை அறிந்துகொள்ளலாம். பள்ளி புத்தகங்களைப் படிப்பதுடன் யோசித்து, ஒப்பிட்டுப் பார்த்து கேள்விகள் கேட்கப்படும் முறையைத் தெரிந்துகொள்ள வேண்டும்.
இந்தப் பகுதி பெரும்பாலும் பொது அறிவியல் பாடத்தின் இயற்பியல் பகுதியை ஒட்டிய பாடப்பகுதிகள் ஆகும். முதல் தலைப்பான பேரண்டத்தின் இயல்பு பகுதியை, புவியியல் பாடத்தோடு ஒப்பிட்டுப் படிக்க வேண்டும். பேரண்டத்தின் இயல்பு பகுதியில் பிரபஞ்சம், பால்வெளி அண்டம், சூரியக் குடும்பம், புவியின் அமைவிடம், வாழ்வதற்கான சூழல் ஆகியவை குறித்துப் படிக்க வேண்டும்.
ஒவ்வொரு கோள்களின் அளவு, அடர்த்தி, சுற்றும் திசை, சூரியனுக்கு, புவிக்கு அருகாமையில் உள்ள கோள்கள் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும். ஒவ்வொரு கோளுக்கும் இருக்கும் சிறப்புப் பெயர்களைத் தெரிந்துகொள்ள வேண்டும். சூரியனின் வெப்பநிலை, பூமியின் அடுக்குகள், வெப்பநிலை, அதில் உள்ள வாயுக்கள் பற்றிப் படிக்க வேண்டும்.
நடப்பு நிகழ்வுடன் தொடர்புபடுத்த வேண்டும்
இதிலேயே நடப்பு நிகழ்வுடன் தொடர்புபடுத்தி, கருந்துகள்கள் ( Black holes), சூரியக் குடும்பத்துக்கு அனுப்பப்படும் செயற்கைக்கோள் உள்ளிட்டவை குறித்துத் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். அதேபோல சூரியன் பற்றி ஆய்வு மேற்கொள்ள அனுப்பப்படும் ஆதித்யா எல் 1 (Aditya L1 mission) செயற்கைக்கோள், சோலாரின் வடிவம், 11 ஆண்டுகளுக்கு ஒருமுறை உருவாகும் சூரியப் புள்ளிகள் ஆகியவை பற்றியும் தெரிந்திருக்க வேண்டும்.
ஒரு குறிப்பிட்ட கோள், புவியைச் சுற்றி முடிக்க ஆகும் காலம் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும். இந்தப் பகுதியில் இருந்து புவியியல், இயற்பியல், கணிதத்தை இணைத்துக் கேள்விகள் கேட்கப்படும்.
இயற்பியல் அளவுகளின் அளவீடுகள்
இந்தப் பகுதியில் எஸ்.ஐ. (International System of Units) அளவீடுகள் குறித்துப் படிக்க வேண்டியது அவசியம். ஃபெம்டோவை மீட்டராக மாற்றுவது, கிலோகிராமை கலமாக மாற்றுவது, நேரத்தை அளவிடுதலுக்கான அறிவியல் படிப்பு எது? என்பது மாதிரியான கேள்விகள் இதிலிருந்து கேட்கப்படலாம்.
இயக்கவியலில் பொது அறிவியல் விதிகள் என்னும் பகுதியில் அறிவியல் விதிகள் பற்றி படிக்க வேண்டும். குறிப்பாக ஐன்ஸ்டீன் விளைவு, டாப்ளர் விளைவு, ராமன் விளைவு, பீஸோஎலக்ட்ரிக் விளைவு (Piezoelectric Effect), கூலும் விதிகள், நியூட்டனின் 3ஆவது விதி, பாரடைஸ், ஜூல், பாஸ்கல், கெப்ளர் ஆகிய விதிகள் முக்கியம்.
அளவீடு பகுதியில் டேக்கோமீட்டர் (Tachometer), மல்டிமீட்டர், பேரோமீட்டர் (Barometer), ஆர்எச் ஃபேக்டர், ஒலி அளவு மதிப்பிடு உள்ளிட்ட பகுதிகள் முக்கியம்.
விசை (Force)
இந்தத் தலைப்பில் நியூட்டனின் விதிகள், ஹூக் விதி, தகைவு (Stress), திரிபு, வேலை, இடப்பெயர்ச்சி, திறன், முடுக்கம், திசைவேகம், இழுவிசை, மைய விலக்குவிசை, அதிகப் பரப்பு இழுவிசை, ஈர்ப்பு விசை உள்ளிட்டவை முக்கியம். கணக்குகள், சமன்பாடுகள் சார்ந்து இந்தப் பகுதியில் அதிகமாகக் கேள்விகள் கேட்கப்படும்.
அழுத்தம் (Pressure)
நிலைமம் (Inertia), உராய்வு (Friction), திசைவேகம், கோணத் திசைவேகம் உள்ளிட்ட தலைப்புகள் சார்ந்து படிக்க வேண்டும். இந்தப் பகுதியில் இருந்து பயன்பாடுகள் அடிப்படையில் கேள்விகள் கேட்கப்படலாம். குக்கர் செயல்படும் விதம் உள்ளிட்ட பயன்பாடுகளின் அடிப்படையில், கேள்விகள் இருக்கலாம்.
ஆற்றல் (Energy)
நிலை ஆற்றல், இயக்க ஆற்றல், வெப்ப ஆற்றல் ஆகியவை குறித்துப் படிக்க வேண்டும். அதேபோல புதுப்பிக்கத்தக்க, புதுப்பிக்க முடியாத ஆற்றல் மூலங்களான சூரிய மின் ஆற்றல், சூரிய நீராவி ஆற்றல், காற்றாலை ஆற்றல், அணு ஆற்றல், அணுமின் ஆற்றல், உயிரி வாயு ஆற்றல் ஆகியவை பற்றி அறிந்துகொள்ள வேண்டியதும் அவசியம் ஆகும்.
மின்னியல் (Electricity)
மின்சாரம், மின், ஆர்எம்எஸ் மதிப்பு, ஜூல் வெப்ப விளைவு, கால்வனோமீட்டர், ஓம்ஸ் விதி, டேனியல் மின்கலம், அரைஅலை திருத்தி (Rectifier), மின் தேக்கு (Capacitance), மின் தடை (Resistance), மின் எதிர்ப்பு (Impedance), மாறுதிசை மின்னோட்டம் (A.C.), நேரடி மின்னோட்டம் (D.C.) ஆகியவற்றின் செயல்பாடுகளை அறிந்துகொள்ள வேண்டும்.
வீட்டில் அன்றாடம் பயன்படுத்தும் விளக்குகள், ஃப்யூஸ், மொபைல் சார்ஜர்கள், மின்விசிறிகள், ட்ரான்சிஸ்டர்கள் ஆகியவை இவற்றின் பயன்பாட்டு உதாரணங்கள் ஆகும். இவை செயல்படும் விதங்கள் பற்றிப் படிக்க வேண்டும். மின்னணுவியல் மற்றும் மின்பொறியியல் பகுதியில் வாயில் (GATE) பற்றிய கேள்வி கட்டாயம் இருக்கும்.
காந்தவியல்
ஃப்ளெம்மிங் இடக்கை விதி, வலக்கை விதி, மிதிவண்டி டைனமோ, மின்காந்த அலைகள் ஆகிய பகுதிகளைத் தவறவிடாமல் படிக்க வேண்டும். மின் காந்தங்கள் ஏன் தேன் இரும்பு கொண்டு உருவாக்கப்படுகின்றன என்பது மாதிரியான கேள்விகள் அடிக்கடி கேட்கப்படுபவை. எம்.ஆர்.ஐ. ஸ்கேன் உள்ளிட்ட பயன்பாட்டு உதாரணங்களையும் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
ஒளி (Light)
இந்தத் தலைப்பு முக்கியமானது. இதில், லென்ஸ் வகைகள் (குவி ஆடி, குழி ஆடி), ஒளியின் அலைநீளம், லேசர் பயன்பாடுகள், ஒளிச்சிதறல், ராமன் விளைவு, ஸ்பெக்ட்ரம் உள்ளிட்ட பகுதிகள் முக்கியமானவை.
லேசர் பெயரின் விரிவாக்கம், லேசர் வகைகள், ரோமங்கள் மாற்றம் உள்ளிட்ட அன்றாடப் பயன்பாடுகள் ஆகியவற்றைப் படிக்க வேண்டும்.
ஒலி (Sound)
ஒலி என்றால் என்ன, அது பயணிக்கும் முறை, எதிரொலி, ரேடார் பயன்பாடு, மீயொலி, டாப்ளர் விளைவு, பெண்டுலம் உள்ளிட்டவை குறித்துப் படிக்க வேண்டும். கணக்கு மதிப்பீடு முறையிலும் இந்தப் பகுதியில் இருந்து கேள்விகள் இருக்கலாம்.
M என்ற நிறை கொண்ட ஒரு தனிவூசலின் (simple pendulum). நேரம் "T" என உள்ளது. பின் அத்தனிவூசலின் ஊசற்குண்டு மாற்றுப் வதால் அதன் நிறை 2M ஆக மாறுகிறது. தற்போது அதன் அலைவதே என்னவாக இருக்கும்? (ஊசற்குண்டை தாங்கும் இழை நிறையற்றதாக கருதலாம்)
(A)2T
(B) T/2)
(C)T
(D) 3T/2
(E) விடை தெரியவில்லை
ANS: (C)
84. 30°C - ல் காற்றில் ஒலியின் வேகம் 350 மீ/வி. காற்றில் மாறாமல் அழுத்தம் இரு மடங்கு ஆனால் அதன் வேகம் என்னவாகும்?
(A) 700 மீவி
(B) 175 மீ/வி (C) 350 மீவி (E) விடை தெரியவில்லை
(D) 800 மீ/வி
ற்றின் வெப்பநிலை
ன வேகம் என்னவாகும்
ANS: C
வெப்பம் (Heat)
வெப்ப ஏற்புத் திறன், கொதிநிலை, வெப்ப இஞ்ஜின், ஒரு பொருளின் நிலையை மற்றொரு நிலைக்கு மாற்றத் தேவையான வெப்பம், டிகிரி செல்சியஸ், ஃபாரன்ஹீட், தெர்மிஸ்டர் (thermistor), கதிர்வீச்சு, வெப்பக் கதிர்வீச்சு, வெப்ப மாற்றீடற்ற நிகழ்வு, டிகிரி செல்சியஸை ஃபாரன்ஹீட்டாக மாற்றுவது உள்ளிட்டவற்றைப் படிக்க வேண்டும்.
அணுக்கரு இயற்பியலின் அடிப்படைக் கோட்பாடுகளும் அதன் பயன்பாடுகளும்
அணுக்கரு சம்பந்தமாக ஒரு கேள்வி நிச்சயமாகக் கேட்கப்படும். அணு கோட்பாடு (atomic theory), அணுக்கரு, எலக்ட்ரான், நியூட்ரான், ஃபோட்டான், ஐசோடோன், யுரேனியம், தோரியம், இந்திய அணுசக்திக் கழகம், அணுகுண்டு சோதனை, ஆசியாவிலேயே முதல்முறையாக இந்தியாவில் உருவாக்கப்பட்ட அணு உலை, உற்பத்தி உலை, இந்தியாவிலேயே மிகப்பெரிய அணு உலை, அணுசக்தி ஆகிய உள்ளடக்கங்கள் முக்கியம். அணு உலைகளின் பயன்பாடுகள் குறித்துத் தெரிந்துகொள்ள வேண்டியது முக்கியம்''.
இவ்வாறு ஆட்சியர் கல்வியின் நிறுவனர் செல்வ ராம ரத்தினம் தெரிவித்துள்ளார்.
இயற்பியல் சரி, பிற அறிவியல் பாடங்களைப் படிப்பது எப்படி?
பார்க்கலாம்...
-க.சே.ரமணி பிரபா தேவி, தொடர்புக்கு: ramanip@abpnetwork.com
முந்தைய அத்தியாயங்களையும் வாசிக்கலாம்..