Group 1 Exam Postponed: குரூப் 1 முதல்நிலைத் தேர்வு திடீரென ஒத்திவைப்பு: என்ன காரணம்?
TNPSC Group 1 Preliminary Exam Postponed: அக்டோபர் 30ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட குரூப் 1 முதல்நிலைத் தேர்வு திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 30ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட குரூப் 1 முதல்நிலைத் தேர்வு திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நிர்வாகக் காரணங்களுக்காக தேர்வு ஒத்திவைக்கப்பட்டு, நவம்பர் 19ஆம் தேதி நடைபெறும் என்றும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
TNPSC நடத்தும் துணை ஆட்சியர், துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட பல்வேறு குருப்-1 பதவிகளுக்கான தேர்வு அறிக்கை ஜூலை 21ஆம் தேதி வெளியானது. குறிப்பாக,
துணை ஆட்சியர் (18) - Deputy Collector,
காவல்துறை துணை கண்காணிப்பாளர் (26) - Deputy Superintendent of Police,
வணிகவரி உதவி ஆணையர் (25) - Assistant Commissioner (Commercial Taxes),
கூட்டுறவு சங்க துணைப்பதிவாளர் (13)- Deputy Registrar of Cooperative Societies,
Assistant Director of Rural Development,
District Employment Officer in Tamil Nadu General Service உள்ளிட்ட குரூப்-1 பதவியில் காலியாக உள்ள 92 பணியிடங்களுக்குத் தேர்வர்கள் விண்ணப்பித்தனர். 92 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 1 முதல்நிலைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் ஆகஸ்ட் 22ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது.
#JUSTIN | குரூப் 1 முதல் நிலை தேர்வு ஒத்திவைப்புhttps://t.co/wupaoCzH82 | #TNPSC #Group1Exam pic.twitter.com/HI9SfOOQSd
— ABP Nadu (@abpnadu) September 9, 2022
இந்த நிலையில், முதல்நிலைத் தேர்வு 30-10-2022 காலை 9.30 முதல் 12.30 மணி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இந்தத் தேர்வு நிர்வாகக் காரணங்களுக்காகத் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. குரூப் 1 முதல்நிலைத் தேர்வு நவம்பர் 19ஆம் தேதி காலை 9.30 முதல் 12.30 மணி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு முறை
முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு, நேர்முகத் தேர்வு என்று தேர்வர்கள் இந்தப் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுகின்றனர்.
எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு முழுமையாகக் கட்டண விலக்கு அளிக்கப்படுகிறது.
அதேபோல எம்பிசி/ டிஎன்சி பிரிவினர் 3 முறை இலவசமாகத் தேர்வு எழுதலாம்.
பிசி, பிசி முஸ்லிம் பிரிவினருக்கும் 3 முறை இலவசமாகத் தேர்வு எழுதும் வசதி வழங்கப்படுகிறது.
முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கு 2 முறை இலவச வாய்ப்பு உண்டு.
மாற்றுத்திறனாளிகள் மற்றும் கணவனை இழந்த பெண்களுக்கும் முழுமையாகக் கட்டண விலக்கு அளிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
மேலும் வாசிக்க: NEET Marks: பூஜ்ஜியத்துக்கும் குறைவான நீட் மதிப்பெண்: அரசின் நீட் பயிற்சி மையங்களில் பயின்ற மாணவர்கள் நிலை!