(Source: ECI/ABP News/ABP Majha)
TNPSC Recruitment 2024: அரசு வழக்கறிஞர் ஆகணுமா? டிஎன்பிஎஸ்சி மூலம் விண்ணப்பிக்கலாம்- இன்னும் 2 நாள்தான்! விவரம்
டிஎன்பிஎஸ்சி நடத்த உள்ள அரசு உதவி வழக்கு நடத்துநர் பணிகளுக்கு அறிவிப்பு வெளியான நிலையில், இதற்கு விண்ணப்பிக்க அக்.12 கடைசி ஆகும்.
இதில், அரசு உதவி வழக்கு நடத்துநர் நிலை - II (TNPSC Assistant Public Prosecutor Grade II ) குற்ற வழக்கு தொடர்வு துறையில் உள்ள அரசு உதவி வழக்கு நடத்துநர், நிலை - II பதவிக்கான நேரடி நியமனத்திற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க நாளை மறுநாள் (அக்.12) கடைசித் தேதி ஆகும்.
நாளை மறுநாளே கடைசி
இதற்கான இணையவழி விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள்: நாளை மறுநாள் (12.10.2024 11.59 PM)
விண்ணப்பத் திருத்தத்தை 16.10.2024 நள்ளிரவு 12.01 AM முதல் 18.10.2024 இரவு11.59 PM வரை மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு முறை
* முதல்நிலைத் தேர்வு,
* முதன்மைத் தேர்வு,
* நேர்முகத் தேர்வு
* சான்றிதழ் சரிபார்ப்பு
டிஎன்பிஎஸ்சி அரசு உதவி வழக்கறிஞர் பணிக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்; எப்படி? அக்.12 கடைசி!" width="720" />
தேர்வு தேதி இதுதான்
முதல்நிலைத் தேர்வு – டிசம்பர் 14, 2024 மதியம் 2.30 PM முதல் 5.30 PM வரை
முதன்மைத் எழுத்துத் தேர்வு - முதல்நிலைத் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும்போது வெளியிடப்படும்.
தேர்வு பாடத்திட்டம் என்ன?
அரசு உதவி வழக்கு நடத்துநருக்கான கல்வி மற்றும் முன் அனுபவ தகுதி
* தேர்வர்களின் பிறந்த தேதி, 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியலுடன் சரிபார்க்கப்படும்.
* பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் பல்கலைக்கழகம், நிறுவனத்தால் வழங்கப்பட்ட இளநிலை சட்டத்தில் கட்டாயம் பட்டம் பெற்றிருக்க வேண்டும்
* வழக்குரைஞர் சங்கத்தில் (பார் கவுன்சில்) கட்டாயம் உறுப்பினராக இருப்பதோடு குற்றவியல் நீதிமன்றங்களில் முனைப்புடன் 5 ஆண்டுகளுக்கு குறையாமல் கட்டாயம் வழக்கு நடத்தியவராக இருத்தல் வேண்டும்.
விளக்கம்: குற்றவியல் நீதிமன்றங்களில் தற்காலிக அரசு உதவி வழக்கு நடத்துநர், நிலை 11 ஆக பணிபுரிந்த காலம் அனுபவ காலமாக கருதப்படும்.
* போதிய தமிழ் அறிவு உடையவராக கட்டாயம் இருத்தல் வேண்டும். ( அதாவது ஒருவரை போதிய தமிழ் அறிவு உடையவராக கருதுவதற்கு, அவர் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு அல்லது அதற்கு இணையான தேர்வில், உயர்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பில் தமிழ் பாடத்தை ஒரு மொழிப் பாடமாக கற்றிருக்க வேண்டும் அல்லது தமிழ் மொழி வழியில் பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட இரண்டாம் வகுப்பு தமிழ் மொழித் தேர்வில் தேர்ச்சி பெற்றவராயிருக்க வேண்டும்)
விண்ணப்ப வழிமுறைகள் என்ன?
* தேர்வர்கள் https://apply.tnpscexams.in/secure?app_id=UElZMDAwMDAwMQ== என்ற இணைப்பை க்ளிக் செய்து தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
* தேர்வர்கள் தேர்வாணைய இணையதளத்தில் உள்ள ஒரு முறைப் பதிவு தளத்தில் (ஓடிஆர்) பதிவு செய்த பின்பு இத்தேர்விற்கான விண்ணப்பத்தினை நிரப்ப வேண்டும்.
* தேர்வர்கள் ஏற்கனவே ஒருமுறைப் பதிவில் பதிவு செய்திருப்பின், அவர்கள் இத்தேர்விற்கான இணையவழி விண்ணப்பத்தை நேரடியாகப் பூர்த்தி செய்யத் தொடங்கலாம்.
முழு விவரங்களுக்கு: https://www.tnpsc.gov.in/Document/tamil/APP%20GRADE%20II%20TAMIL_.pdf