மேலும் அறிய

TNGASA Admission 2024: மாணவர்களே.. மறந்துடாதீங்க! கலை, அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்க இன்றே கடைசி!

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்க இன்றே கடைசி தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மொத்தம் 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் சுமார் 140 பாடப் பிரிவுகளில் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. இந்த கலை, அறிவியல் கல்லூரிகளில் மொத்தம் 1 லட்சத்துக்கு 7 ஆயிரத்து 395 இடங்கள் மாணவர் சேர்க்கைக்காக உள்ளன.

இவற்றில் சேர விண்ணப்பப் பதிவு மே 6ஆம் தேதி தொடங்கியது. குறிப்பாக 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியான அன்றே, விண்ணப்பப் பதிவு தொடங்கியது. மே 20 வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், மாணவர்களின் கோரிக்கைக்கு இணங்க, விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டது. அதன்படி மாணவர்கள் விண்ணப்பிக்க இன்று (மே 24) கடைசித் தேதி ஆகும். 

ஜூலை 3 முதல் முதலாமாண்டு வகுப்புகள்

முன்னதாக மே 20ஆம் தேதி வரை விண்ணப்பித்த பிறகு, மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் கல்லூரிகளுக்கு மே 24ஆம் தேதி அன்று அனுப்பப்படுவதாக இருந்தது. இந்தத் தேதி மே 27-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கான சிறப்பு ஒதுக்கீடு கலந்தாய்வு மே 28 முதல் 30 வரை நடைபெற உள்ளது. தொடர்ந்து முதல் பொது கலந்தாய்வு ஜூன் 10 முதல் 15 வரையில் நடைபெற உள்ளது. இரண்டாம் பொதுக் கலந்தாய்வு ஜூன் 24 முதல் 29ஆம் தேதி வரை நடைபெற உள்ள. அதேபோல ஜூலை 3 முதல் முதலாமாண்டு வகுப்புகள் தொடங்க உள்ளன.  

விண்ணப்பிப்பது எப்படி?

மாணவர்கள் https://www.tngasa.in/ என்ற இணையதள முகவரியைப் பயன்படுத்தி விண்ணப்பிக்க வேண்டும். Tngasa என்ற பெயரைக் கொண்ட வேறு எந்த இணையதளத்தையும் பார்க்க வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிதாக விண்ணப்பிக்கும் மாணவர்கள் https://www.tngasa.in/user/register என்ற இணைப்பை க்ளிக் செய்து, முன்பதிவு செய்துகொள்ள வேண்டியது அவசியம்.

தொடர்ந்து போதிய விவரங்களை உள்ளிட்டு, விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தி, தேவையான சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்து, மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம். 

முக்கியத் தேதிகளைப் பார்க்க: https://static.tneaonline.org/docs/arts/UG-Admission-Schedule-2024.pdf?t=1715241912829 என்ற இணைப்பை க்ளிக் செய்யலாம்.

விண்ணப்பத்திற்கான தகவல்களைப் பதிவு செய்தல் குறித்து முழுமையாக அறிய https://static.tneaonline.org/docs/arts/tamil_instruction.pdf?t=1684734156651 என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம். ஸ்டெப் பை ஸ்டெப்பாக வழிமுறைகள் இதில் கொடுக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிகளின் முழு பட்டியலைக் காண: https://static.tneaonline.org/docs/arts/college_list.pdf?t=1684479144557 என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

கூடுதல் விவரங்களுக்கு: tngasa24@gmail.com
தொலைபேசி எண்கள்: 044 - 24343106, 044 - 24342911

இதையும் வாசிக்கலாம்: TN School Reopen: தமிழ்நாட்டில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை ஜூன் 6 பள்ளிகள் திறப்பு- வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK:
TVK: "எனக்கு எதிரிங்க வெளிய இல்ல" அடித்து கொள்ளும் தவெக நிர்வாகிகள்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
உண்டியலில் விழுந்த ஐ-போன் முருகனுக்கு சொந்தமா? - அமைச்சர் சேகர் பாபு சொன்ன பதில்
உண்டியலில் விழுந்த ஐ-போன் முருகனுக்கு சொந்தமா? - அமைச்சர் சேகர் பாபு சொன்ன பதில்
Russia Ukraine War: அடிவாங்கிய அமெரிக்கா, ரஷ்யாவில்  கட்டிடங்களுக்குள் பாய்ந்த ட்ரோன்கள் - அதிர்ந்த புதின்
Russia Ukraine War: அடிவாங்கிய அமெரிக்கா, ரஷ்யாவில் கட்டிடங்களுக்குள் பாய்ந்த ட்ரோன்கள் - அதிர்ந்த புதின்
Robin Uthappa : 23 லட்சம் மோசடி! வலை வீசும் போலீஸ்.. சிக்கலில் முன்னாள் கிரிக்கெட் வீரர்!
Robin Uthappa : 23 லட்சம் மோசடி! வலை வீசும் போலீஸ்.. சிக்கலில் முன்னாள் கிரிக்கெட் வீரர்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK:
TVK: "எனக்கு எதிரிங்க வெளிய இல்ல" அடித்து கொள்ளும் தவெக நிர்வாகிகள்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
உண்டியலில் விழுந்த ஐ-போன் முருகனுக்கு சொந்தமா? - அமைச்சர் சேகர் பாபு சொன்ன பதில்
உண்டியலில் விழுந்த ஐ-போன் முருகனுக்கு சொந்தமா? - அமைச்சர் சேகர் பாபு சொன்ன பதில்
Russia Ukraine War: அடிவாங்கிய அமெரிக்கா, ரஷ்யாவில்  கட்டிடங்களுக்குள் பாய்ந்த ட்ரோன்கள் - அதிர்ந்த புதின்
Russia Ukraine War: அடிவாங்கிய அமெரிக்கா, ரஷ்யாவில் கட்டிடங்களுக்குள் பாய்ந்த ட்ரோன்கள் - அதிர்ந்த புதின்
Robin Uthappa : 23 லட்சம் மோசடி! வலை வீசும் போலீஸ்.. சிக்கலில் முன்னாள் கிரிக்கெட் வீரர்!
Robin Uthappa : 23 லட்சம் மோசடி! வலை வீசும் போலீஸ்.. சிக்கலில் முன்னாள் கிரிக்கெட் வீரர்!
Sabarimala Temple: ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு... சபரிமலையில் ஸ்பாட் புக்கிங் திடீர் நிறுத்தம்
ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு... சபரிமலையில் ஸ்பாட் புக்கிங் திடீர் நிறுத்தம்
Breaking News LIVE: சிசிடிவி காட்சிகளை வெளியிட மறுப்பது ஏன்? மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் கேள்வி
Breaking News LIVE: சிசிடிவி காட்சிகளை வெளியிட மறுப்பது ஏன்? மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் கேள்வி
TN GOVT Election: என்னாது..!  உள்ளாட்சி தேர்தல் கிடையாது - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
TN GOVT Election: என்னாது..! உள்ளாட்சி தேர்தல் கிடையாது - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
விசாரணைக்கு வந்த ஜெயம் ரவி ஆர்த்தி விவாகரத்து  வழக்கு...என்ன சொன்னாங்க
விசாரணைக்கு வந்த ஜெயம் ரவி ஆர்த்தி விவாகரத்து வழக்கு...என்ன சொன்னாங்க
Embed widget