TNEA Counselling: தொடங்கிய பொறியியல் துணைக் கலந்தாய்வு; நல்ல கல்லூரியைத் தேர்வு செய்வது எப்படி?
TNEA Supplementary Counselling 2023: பொறியியல் படிப்புகளில் சேர நடத்தப்படும் துணைக் கலந்தாய்வு இன்று (செப். 6) தொடங்கி உள்ளது.
பொறியியல் படிப்புகளில் சேர நடத்தப்படும் துணைக் கலந்தாய்வு இன்று (செப். 6) தொடங்கி உள்ளது. விண்ணப்பித்த மாணவர்கள் நாளை (செப். 7) மாலை 5 மணி வரை தங்களுக்கு விருப்பமான கல்லூரிகளைத் தேர்வு செய்து, பதிவு செய்யலாம் என்று பொறியியல் சேர்க்கை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் அங்கீகாரம் பெற்ற 442 அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகள் இந்த ஆண்டு பொறியியல் சேர்க்கையை நடத்தி வருகின்றன. ஒற்றைக் கலந்தாய்வு முறையில் மாணவர்கள் விண்ணப்பிக்க 1,60,780 பொறியியல் இடங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், பொதுப் பிரிவுக்கு 1,48,721 இடங்களும் 7.5 சதவீத ஒட ஒதுக்கீட்டுக்கு, 12,059 இடங்களும் ஒதுக்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து பொறியியல் படிப்பில் சேர 50,000-க்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக இருந்தது. இந்த நிலையில் துணைக் கலந்தாய்வு அறிவிக்கப்பட்டது. பொதுக் கலந்தாய்வில் கலந்துகொள்ளாத மாணவர்களும் 12ஆம் வகுப்பு துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களும் ஆகஸ்ட் 28ஆம் தேதி முதல் விண்ணப்பித்தனர். குறிப்பாக பொதுப்பிரிவில் 13,650 பேரும் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின்கீழ் 4,585 மாணவர்களும் செப்டம்பர் 3ஆம் தேதி வரை விண்ணப்பித்தனர். இணையதளம் வாயிலாக தங்களுடைய விண்ணப்பத்தினை பதிவு செய்யும்பொழுதே அசல் சான்றிதழ்களைப் பதிவேற்றம் (upload) செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
பொதுப் பிரிவில் 13,244 பேரும் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் 4,466 பேரும் தகுதி பெற்றுள்ளனர். இவர்களுக்கான கலந்தாய்வு இன்று (செப்டம்பர் 6) முதல் 8ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
விண்ணப்பித்த மாணவர்கள் நாளை (செப். 7) மாலை 5 மணி வரை தங்களுக்கு விருப்பமான கல்லூரிகளைத் தேர்வு செய்து, பதிவு செய்யலாம் என்று பொறியியல் சேர்க்கை மையம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து செப். 8ஆம் தேதி காலை 10 மணிக்கு தற்காலிக இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். மாணவர்கள் அன்று மாலை 5 மணிக்குள் தங்களுக்கான இடத்தை உறுதி செய்ய வேண்டும். இதை அடுத்து, கல்லூரிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதுகுறித்த பட்டியல் செப்டம்பர் 9ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும்.
கல்லூரி இடங்களைத் தேர்வு செய்வது எப்படி?
கல்லூரிகளில் துணைக் கலந்தாய்வின் மூலம் தனக்கான இடத்தை உறுதி செய்துகொள்ளலாம். பொதுக் கலந்தாய்வில் நிரப்பப்படாமல், காலியாக உள்ள இடங்கள் குறித்து அறிய https://static.tneaonline.org/docs/Academic_General_Seat_Matrix.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டும்.
தொழிற்கல்வி பிரிவில் காலியாக உள்ள இடங்கள் குறித்து அறிய https://static.tneaonline.org/docs/Vocational_General_Seat_Matrix.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டும்.
அதேபோல பொதுக் கலந்தாய்வில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின்கீழ் காலியாக உள்ள இடங்கள் குறித்து அறிய https://static.tneaonline.org/docs/Government_Academic_Seat_Matrix.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டும்.
மேலும் விவரங்களைப் பெற தொடர்பு கொள்ள வேண்டிய கட்டணமில்லா தொலைபேசி எண்: 1600-425-0110.
கூடுதல் விவரங்களுக்கு: https://suppl.tneaonline.org/ என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.
தொலைபேசி எண்கள்: 044- 22351014, 044-22351015
இ- மெயில் முகவரி: tneacare@gmail.com