மேலும் அறிய

TNEA Counselling 2023: பொறியியல் படிப்புகளுக்கான 2ஆம் சுற்று கலந்தாய்வு தொடங்கியது; கலந்துகொள்வது எப்படி?

பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான 2ஆம் சுற்று கலந்தாய்வு இன்று (ஆகஸ்ட் 9) தொடங்கி உள்ளது.

பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான 2ஆம் சுற்று கலந்தாய்வு இன்று (ஆகஸ்ட் 9) தொடங்கி உள்ளது. மாணவர்கள் https://www.tneaonline.org/ என்ற இணைப்பை க்ளிக் செய்து, கலந்தாய்வில் கலந்துகொள்ளலாம்.

கலந்தாய்வு அட்டவணையை அறிய https://static.tneaonline.org/docs/TNEA_schedule_2023.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டியது அவசியம் ஆகும். 

நிறைவடைந்த முதல் சுற்றுக் கலந்தாய்வு

1,78,959 மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியான நிலையில், கலந்தாய்வு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த ஆண்டு பொறியியல் படிப்புகளில் 1,57,378 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. 3,100 இடங்கள் கடந்த ஆண்டைக் காட்டிலும் அதிகமாக உள்ளன. 11,804 மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் இருந்து படித்து, பொறியியல் கலந்தாய்வில் இடம்பெற்று உள்ளனர்.  அங்கீகாரம் பெற்றும் 430 அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகள் இந்த ஆண்டு பொறியியல் சேர்க்கையை நடத்தி வருகின்றன. 

இந்த நிலையில், பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான 2ஆம் சுற்று கலந்தாய்வு இன்று (ஆகஸ்ட் 9) தொடங்கி உள்ளது. மாணவர்கள் https://www.tneaonline.org/ என்ற இணைப்பை க்ளிக் செய்து, கலந்தாய்வில் கலந்துகொள்ளலாம்.

11ஆம் தேதி வரை நடைபெற உள்ள கலந்தாய்வுக்கு, அன்று மாலை 5 மணி வரை Choice Filling செய்யலாம். தொடர்ந்து 13ஆம் தேதி இட ஒதுக்கீட்டு உத்தரவு வழங்கப்பட உள்ளது. 

பொது தரவரிசைப் பட்டியலில் 22,763 முதல் 87,049 வரை இடம்பெற்ற மாணவர்கள் இந்தக் கலந்தாய்வில் கலந்துகொள்ளலாம்.  176.99 முதல் 142 வரை கட் ஆஃப் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் இதில் பங்கேற்கின்றனர்.

சிறப்புப் பிரிவுக்கு 1, பொதுப் பிரிவுக்கு 2 என மொத்தம் 3 கட்டங்களாகக் கலந்தாய்வு நடைபெற உள்ளது. காலி இடங்கள் இருந்தால், அவற்றை நிரப்பக் கூடுதலாக ஒரு கலந்தாய்வு நடத்தப்படவும் திட்டமிடப்பட்டு வருகிறது. இவர்களுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 28ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 3ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இணையதள வாயிலாக நடைபெறும் துணைக் கலந்தாய்வு செப்டம்பர் 6 முதல் 9ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 

செப்டம்பர் 11ஆம் தேதி வரை கலந்தாய்வு 

அருந்ததியர்களிடம் இருந்து காலியாக உள்ள இடங்களை தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு மாற்றும் கலந்தாய்வு செப்டம்பர் 10, 11ஆம் தேதிகளில் நடத்தப்பட உள்ளது. இறுதி நாள் கலந்தாய்வு செப்டம்பர் 11ஆம் தேதி நடைபெறுகிறது. 

பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு

சிறப்புப் பிரிவு கலந்தாய்வில் மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர், விளையாட்டு வீரர்கள் ஆகியோருக்கு சிறப்பு இடங்கள் வழங்கப்படுகின்றன. விளையாட்டு வீரர்களுக்கான அசல்‌ சான்றிதழ்‌ சரிபார்ப்பு சென்னையில்‌ நேரடியாக நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்க உள்ளது. 

கூடுதல் விவரங்களுக்கு:

தொடர்பு எண்‌: 044 - 2235 1014 / 1015
அழைப்பு எண்‌: 1800 - 425 - 0110

இ- மெயில் முகவரி: tneacare@gmail.com

கலந்தாய்வு அட்டவணையை அறிய https://static.tneaonline.org/docs/TNEA_schedule_2023.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டியது அவசியம் ஆகும். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

MOTN Survey: தமிழ்நாட்டுல பாஜக வளரவே இல்ல..இப்ப தேர்தல் நடந்தாலும் திமுக தான் ஜெயிக்கும் - கருத்துக்கணிப்பு
தமிழ்நாட்டுல பாஜக வளரவே இல்ல..இப்ப தேர்தல் நடந்தாலும் திமுக தான் ஜெயிக்கும் - கருத்துக்கணிப்பு
King Maker Vijay: கூட்டணி வைக்காவிட்டால் பாஜக, அதிமுக கோவிந்தா.!! கிங் மேக்கராகும் விஜய் - கருத்துக்கணிப்பு
கூட்டணி வைக்காவிட்டால் பாஜக, அதிமுக கோவிந்தா.!! கிங் மேக்கராகும் விஜய் - கருத்துக்கணிப்பு
முதல்வர் துறையிலேயே இப்படியா? பெண் காவலர்களுக்கு பாதுக்காப்பில்லையா? இணை ஆணையர் சஸ்பெண்ட்
முதல்வர் துறையிலேயே இப்படியா? பெண் காவலர்களுக்கு பாதுக்காப்பில்லையா? இணை ஆணையர் சஸ்பெண்ட்
Double Decker Flyover: அடடே..! மேல மெட்ரோ, கீழே வாகன போக்குவரத்து.. கோவையில் 'டபுள் டக்கர்' மேம்பாலம், எங்கே தெரியுமா?
Double Decker Flyover: அடடே..! மேல மெட்ரோ, கீழே வாகன போக்குவரத்து.. கோவையில் 'டபுள் டக்கர்' மேம்பாலம், எங்கே தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Chiranjeevi Controversy | TVK Transgender Issue | ”9-ஆடா நாங்க?...இன்னும் எத்தனை நாளைக்கு..” SURRENDER ஆன தவெக! | Vijayதிமுகவுக்கு பக்கா ஸ்கெட்ச்! ஆட்டத்தை தொடங்கிய PK! குஷியில் EPS, விஜய்அந்தர்பல்டி அடித்த மம்தா!ராகுல் காந்திக்கு செக்!உடைகிறதா கூட்டணி?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MOTN Survey: தமிழ்நாட்டுல பாஜக வளரவே இல்ல..இப்ப தேர்தல் நடந்தாலும் திமுக தான் ஜெயிக்கும் - கருத்துக்கணிப்பு
தமிழ்நாட்டுல பாஜக வளரவே இல்ல..இப்ப தேர்தல் நடந்தாலும் திமுக தான் ஜெயிக்கும் - கருத்துக்கணிப்பு
King Maker Vijay: கூட்டணி வைக்காவிட்டால் பாஜக, அதிமுக கோவிந்தா.!! கிங் மேக்கராகும் விஜய் - கருத்துக்கணிப்பு
கூட்டணி வைக்காவிட்டால் பாஜக, அதிமுக கோவிந்தா.!! கிங் மேக்கராகும் விஜய் - கருத்துக்கணிப்பு
முதல்வர் துறையிலேயே இப்படியா? பெண் காவலர்களுக்கு பாதுக்காப்பில்லையா? இணை ஆணையர் சஸ்பெண்ட்
முதல்வர் துறையிலேயே இப்படியா? பெண் காவலர்களுக்கு பாதுக்காப்பில்லையா? இணை ஆணையர் சஸ்பெண்ட்
Double Decker Flyover: அடடே..! மேல மெட்ரோ, கீழே வாகன போக்குவரத்து.. கோவையில் 'டபுள் டக்கர்' மேம்பாலம், எங்கே தெரியுமா?
Double Decker Flyover: அடடே..! மேல மெட்ரோ, கீழே வாகன போக்குவரத்து.. கோவையில் 'டபுள் டக்கர்' மேம்பாலம், எங்கே தெரியுமா?
PM Modi US Visit: அமெரிக்காவில் கால் வைத்ததுமே சம்பவம்..! ட்ரம்ப் சந்திப்பு - 36 மணி நேரம், மோடியின் 6 முக்கிய திட்டங்கள்
PM Modi US Visit: அமெரிக்காவில் கால் வைத்ததுமே சம்பவம்..! ட்ரம்ப் சந்திப்பு - 36 மணி நேரம், மோடியின் 6 முக்கிய திட்டங்கள்
Cockroach Milk: எதிர்காலத்தின் சூப்பர் ஃபுட்..! கரப்பான் பூச்சியின் பால், சேமிக்கப்படுவது எப்படி? விலை எவ்வளவு?
Cockroach Milk: எதிர்காலத்தின் சூப்பர் ஃபுட்..! கரப்பான் பூச்சியின் பால், சேமிக்கப்படுவது எப்படி? விலை எவ்வளவு?
”பிப்ரவரி 26ல் த.வெ.க. செயற்குழு, பொதுக்குழு” வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு..!
”பிப்ரவரி 26ல் த.வெ.க. செயற்குழு, பொதுக்குழு” வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு..!
Annamalai Vs TVK: தவெக-வை நக்கலடித்த அண்ணாமலை... என்ன சொல்லியிருக்கார் தெரியுமா.?
தவெக-வை நக்கலடித்த அண்ணாமலை... என்ன சொல்லியிருக்கார் தெரியுமா.?
Embed widget