மேலும் அறிய

TNEA Admission 2024: பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பிக்க இன்றே கடைசி; வழிமுறைகள் இதோ!

அரசு, அரசு உதவிபெறும், தனியார் பொறியியல் கல்லூரிகளில் சேர, மாணவர்கள் இணையம் மூலம் விண்ணப்பிக்க இன்றே (ஜூன் 6) கடைசித் தேதி ஆகும்.

தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் (ஜூன் 6) முடிகிறது.

தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 440-க்கும் மேலான பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் இளநிலை படிப்புகளுக்கு சுமார் 1.5 லட்சம் இடங்கள் உள்ளன. இவை இணையவழி கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன. இந்த ஆண்டு பொறியியல் படிப்புகளுக்கு கூடுதல் இடங்கள் உருவாக்கப்பட்டு, ஒதுக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

மருத்துவக் கலந்தாய்வுக்குப் பிறகே, பொறியியல் கலந்தாய்வு

இதற்கிடையே 2024ம் ஆண்டுக்கான பொறியியல் கலந்தாய்வு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் மூலம் நடத்தப்படுகிறது. மருத்துவக் கலந்தாய்வு முடிந்த பிறகே, பொறியியல் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது.

இதற்கான விண்ணப்பப் பதிவு ஆன்லைன் மூலம் மே 6ஆம் தேதி தொடங்கியது. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், அன்றே விண்ணப்பப் பதிவு தொடங்கியது.

அரசு, அரசு உதவிபெறும், தனியார் பொறியியல் கல்லூரிகளில் சேர, மாணவர்கள் இணையம் மூலம் விண்ணப்பிக்க இன்றே (ஜூன் 6) கடைசித் தேதி ஆகும்.  விண்ணப்பப் பதிவு முடிந்த பின்னர் ரேண்டம் எண் ஜூன் 12ஆம் தேதி வழங்கப்பட உள்ளது. மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் ஜூலை 10ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. சேவை மையம் வாயிலாக, மாணவர்கள் குறைகளை நிவர்த்தி செய்ய ஜூலை 11 முதல் 20ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.

2.43 லட்சம் பேர் விண்ணப்பம்

தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்கத்தின் இணையதளம் வாயிலாக கலந்தாய்வில் பங்கேற்பதற்காக நேற்று (ஜூன் 5) மாலை 6 மணி நிலவரப்படி, 2 லட்சத்து 42 ஆயிரத்து 983 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அதில், 1 லட்சத்து 96 ஆயிரத்து 570 பேர் கட்டணத்தைச் செலுத்தி உள்ளனர். 1 லட்சத்து 69 ஆயிரத்து 68 மாணவர்கள் சான்றிதழ் பதிவேற்றமும் செய்துள்ளனர்.

விண்ணப்பிப்பது எப்படி?

பொறியியல் படிப்பில் சேர விருப்பமுள்ள மாணவர்கள் https://www.tneaonline.org/user/login அல்லது http://www.dte.gov.in/ - என்ற இணைப்பை க்ளிக் செய்து, பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம்.

இணைய வசதி இல்லாதவர்கள் சிறப்பு சேவை மையங்கள் மூலமாக தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்பு எண்‌: 044 - 2235 1014 / 044 - 2235 1015
அழைப்பு எண்‌: 1800 - 425 - 0110

இ- மெயில் முகவரி: tneacare@gmail.com

கூடுதல் விவரங்களுக்குhttps://www.tneaonline.org என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Seeman: “தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
“தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
Embed widget