மேலும் அறிய

TN TRB results: டிஆர்பி முதுகலை ஆசிரியர் பணி தேர்வு முடிவுகள் வெளியீடு - பார்ப்பது எப்படி?

அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர், கணினி பயிற்றுநர் பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன.

அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர், கணினி பயிற்றுநர் பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன.

2020- 21ஆம் ஆண்டு முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள்‌ / உடற்கல்வி இயக்குநர்‌ நிலை - 1 / கணினி பயிற்றுநர்கள்‌ நிலை - 1 ஆகிய  2,207 காலிப் பணியிடங்களுக்குத் தேர்வு நடத்தப்படும் என்று ஆசிரியர்‌ தேர்வு வாரியம் அறிவித்தது. இந்த அறிவிப்பு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 9ஆம் தேதி வெளியானது. ‌ 

இணையவழி வாயிலாக விண்ணப்பத்தினை விண்ணப்பதாரர்கள்‌ 18.09.2021 முதல்‌ பதிவேற்றம்‌ செய்தனர். மேலும்‌, விண்ணப்பதாரர்‌ விண்ணப்பத்தினைப் பதிவேற்றம்‌ செய்ய 14.11.2021 மாலை 5 மணி வரை கால அவகாசம்‌ வழங்கப்பட்டது. 

இந்த நிலையில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள்‌ / உடற்கல்வி இயக்குநர்‌ நிலை - 1 / கணினி பயிற்றுநர்கள் தேர்வுக்கான கணினி வழித் தேர்வுகள்  12.02.2022 முதல்  20.02.2022 வரை உள்ள தேதிகளில்‌ இருவேளைகளில்‌ நடத்தப்பட்டன. இந்தத் தேர்வை 2,13,893 பேர் எழுதியிருந்தனர்.

இவர்களுக்கான உத்தேச விடைகள் ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாகின. தேர்வர்களிடம் இருந்து விடைக்குறிப்பு ஆட்சேபனைகள் ஏப்ரல் 9 முதல் 13ஆம் தேதி மாலை 5.30 வரை பெறப்பட்டன. வெளியான விடைகள் குறித்த 4,276 தேர்வர்களின் இணைய வழியிலான விடைக்குறிப்பு ஆட்சேபனைகள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

அவை மே 10 முதல் ஜூன் 15ஆம் தேதி வரை, மொத்தம் 115 பாட வல்லுநர்களால் ஆய்வு செய்யப்பட்டன. அவர்களின் ஆய்வு முடிவின் அடிப்படையில் இறுதி விடைக்குறிப்பு தயாரிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் விடைகள் திருத்தம் செய்யப்பட்டு முடிவுகள் வெளியாகி உள்ளன. தேர்வு முடிவுகளோடு இறுதி விடைக் குறிப்பும் வெளியாகி உள்ளது.

தேர்வு முடிவுகளைக் காண்பது எப்படி?

* http://trb.tn.nic.in/pg2021/04072022/msg.htm என்ற இணைய முகவரியை க்ளிக் செய்யவும்

*Click here for Result என்னும் திரையைச் சொடுக்கவும்

*அதில், https://trbpg2021.onlineregistrationform.org/TRBPGCT/LoginAction_input.action என்ற இணையப் பக்கம் தோன்றும்.

* அதில் யூஸர் ஐடி மற்றும் பாஸ்வேர்டைப் பதிவு செய்யவும்

*லாகின் செய்து, தேர்வு முடிவுகளைத் தெரிந்துகொள்ளலாம்.

TN TRB results: டிஆர்பி முதுகலை ஆசிரியர் பணி தேர்வு முடிவுகள் வெளியீடு - பார்ப்பது எப்படி?

உயர்த்தப்பட்ட வயது வரம்பு

முதல்முறையாக முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு வயது வரம்பு கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டது. அதன்படி, 40 வயதைத் தாண்டிய பொதுப்பிரிவினரும், 45 வயது தாண்டிய இடஒதுக்கீட்டுப் பிரிவினரும் (பிசி, பிசி-முஸ்லிம், எம்பிசி, எஸ்சி, எஸ்சி- அருந்ததியர், எஸ்டி) முதுகலை ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்க இயலாது என்று தெரிவிக்கப்பட்டது. வயது வரம்பு கட்டுப்பாடு கடந்த அதிமுக ஆட்சியின்போது கொண்டுவரப்பட்டது. அப்போது, ஆசிரியர் சங்க நிர்வாகிகளும், அரசியல் கட்சி தலைவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது, திமுக ஆட்சிக்கு வந்ததும் ஆசிரியர் பணிக்கான வயது வரம்பு கட்டுப்பாடு நீக்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தார். அந்த வகையில் ஆசிரியர் நேரடி நியமனம் தொடர்பான வயது உச்சவரம்பு பொதுப்பிரிவினருக்கு 40-ல் இருந்து 45 ஆகவும், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 45-ல் இருந்து 50 ஆகவும் உயர்த்தப்பட்டது. ஆசிரியர் தேர்வு வாரியத்தால் கடந்த செப்.9-ம் தேதி வெளியிட்ட, முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு அறிவிப்புக்கு இது பொருந்தும்.

2022-ம் ஆண்டு வரை

இவ்வாறு உயர்த்தப்படும் உச்ச வரம்பு 31.12.2022 வரை சிறப்பு நிகழ்வாக ஒருமுறை மட்டுமே நிர்ணயிக்கப்பட்டது. அதுவரை வெளியிடப்படும் ஆசிரியர் பணி நியமனம் தொடர்பான அறிவிக்கைகளுக்கு இது பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதேபோல நேரடி நியமனத்துக்கான உச்ச வயது வரம்பு 1.1.2023 முதல் பொதுப்பிரிவினருக்கு 42 ஆகவும், இதரப் பிரிவினருக்கு 47 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்ரெய்டில் சிக்கிய கோடிகள்! தலைவலியில் அண்ணாமலை! பற்றவைத்த ஆளுங்கட்சியினர்”அரியணை நோக்கி கனிமொழி” மகளிரணியின் சம்பவம்! ஷாக்கான திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
Embed widget