மேலும் அறிய
Advertisement
TN School Education : 11-ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை : வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!
ஜூன் மூன்றாவது வாரத்தில் 11-ஆம் வகுப்புகளை துவங்க தமிழக அரசு பள்ளிகளுக்கு உத்தரவிட்டுள்ளது
கொரோனா பெருந்தொற்று காரணமாக 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தமிழ்நாட்டில் ரத்து செய்யப்பட்டன. அதே நேரம் 9, 10, 11 ஆகிய வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி அடைந்ததாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி அடைந்துள்ள மாணவர்கள், 11-ஆம் வகுப்பில் எவ்வாறு சேர வேண்டும் என்னும் வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளி கல்வித்துறை வெளியிட்டது.
பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறை
- 10-ம் வகுப்பில் மாணவர்களுக்கு ஆல் பாஸ் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், 11-ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு பள்ளி அளவிலான நுழைவுத் தேர்வை கல்வித்துறை அறிமுகம் செய்துள்ளது.
- தமிழ்நாட்டில் கடந்த 2020-2021-ஆம் கல்வியாண்டில் 10-ஆம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு கொரோனா பேரிடரைக் கருத்தில் கொண்டு All Pass வழங்கப்பட்டது.
- அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11-ஆம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கையை உடனடியாக தொடங்க வேண்டும் என்றும், மாணவர்களின் விருப்பத்துக்கேற்ப பாடப்பிரிவுகளை ஒதுக்கிட வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் உத்தரவிட்டுள்ளார்.
- ஏதேனும் குறிப்பிட்ட பிரிவில் அனுமதிக்கப்பட்ட இடங்களை விட, கூடுதலான மாணவர்கள் விண்ணப்பித்தால், 15% வரை மட்டும் அனுமதிக்க வேண்டும் என்றும், மிக அதிகமான அளவில் விண்ணப்பங்கள் வந்தால் பள்ளி அளவில் 50 வினாக்களில் தேர்வு நடத்தி மாணவர்களை அனுமதிக்க வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
ஜூன் 3-ஆம் வாரத்துக்குள் வகுப்புகளைத் தொடங்க வேண்டும் என்றும், 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வித்தொலைக்காட்சி வாயிலாகவும், தொலைத்தொடர்பு முறையிலும் பாடங்களை நடத்த வேண்டும் என்றும் பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
சமீபத்திய கல்வி செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் கல்வி செய்திகளைத் ( Tamil Education News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
மயிலாடுதுறை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion