மேலும் அறிய

Periyar University: பெரியார்‌ பல்கலை.யில்‌ முறைகேடுகள், ஊழல்: பட்டியலிட்டு விசாரணைக் குழு அமைத்த அரசு - பகீர் விவரம்

சேலம்‌ பெரியார்‌ பல்கலைக்கழகத்தில்‌ ஆசிரியர்‌ நியமனத்தில்‌ முறைகேடு உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள்‌, ஊழல்கள்‌ தொடர்பாக, விசாரணை மேற்கொள்ள உயர்கல்வித் துறை விசாரணைக்‌ குழு அமைத்துள்ளது.

சேலம்‌ பெரியார்‌ பல்கலைக்கழகத்தில்‌ ஆசிரியர்‌ நியமனத்தில்‌ முறைகேடு உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள்‌, ஊழல்கள்‌ நடைபெறுவதாக வரபெற்ற புகார்கள்‌ தொடர்பாக, விசாரணை மேற்கொள்ள உயர்கல்வித் துறை விசாரணைக்‌ குழு அமைத்துள்ளது. இக்குழு விசாரணை அறிக்கையை இரண்டு மாதங்களுக்குள்‌ அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும்‌ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. 

இதுகுறித்து உயர் கல்வித்துறை அரசு முதன்மைச்‌ செயலாளர் தா. கார்த்திகேயன்‌ தெரிவித்துள்ளதாவது:‌

சேலம்‌ பெரியார்‌ பல்கலைக்கழகத்தில்‌ ஆசிரியர்‌ நியமனத்தில்‌ முறைகேடு உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள்‌, ஊழல்கள்‌ நடைபெறுவதாக பல புகார்கள்‌ அரசிடம்‌ பெறப்பட்டு வருகின்றன. அவற்றுள்‌ சில புகார்கள்‌ வருமாறு :-

* உடற்கல்வி இயக்குநர்‌ நியமனத்தில்‌ பல்கலைக்கழக மானியக் குழுவின்‌ வழிகாட்டு நெறிமுறைகள்‌ பின்பற்றப்படாதது.

* பல்கலைக்கழக நூலகர்‌ மற்றும்‌ உடற்கல்வி இயக்குநர்‌ ஆகிய பதவிகள்‌ (தமிழ்நாடு அரசின்‌ 200 புள்ளிகள்‌) இடஒதுக்கீடு ஆணையின்படி நிரப்பப்படாதது.

* தமிழ்த்துறை தலைவர்‌ பெரியசாமி என்பவரின்‌ நியமனத்தில்‌ நடைபெற்ற முறைகேடுகளான போலி சான்று, தகுதியின்மை ஆகியவை குறித்து விசாரணைகள்‌ நடைபெற்றுவரும்‌ நிலையில்‌, இவரை விட பலர்‌ பணியில்‌ சீனியராக இருக்கும்‌ நிலையில்‌ பணியில்‌ இளையவரான இவரை ஆட்சிக்குழு உறுப்பினராக நியமனம்‌ செய்ய பரிந்துரை செய்து, விதிகளுக்கு புறம்பாக நியமித்தது.

* பல்கலைக்கழகத்திற்குட்பட்ட அரசு உதவிபெறும்‌ கல்லூரிகளில்‌ காலியாகும்‌ உதவிப்பேராசிரியர்‌ பணியிடங்களை நிரப்பும்‌ குழுவில்‌ பல்கலைக்கழக பிரதிநிதி ஒருவர்‌ இடம்பெறவேண்டும்‌ என்ற  அடிப்படையில்‌, விதிகளுக்கு புறம்பாக பெரியசாமி என்பாரை முறைகேடாக நியமித்தது.

* பல்வேறு குற்றச்செயல்களில்‌ சம்பந்தப்பட்ட நெல்சன்‌ என்பவரை துணைவேந்தரின்‌ உதவியாளராகவும்‌, இவரின்‌ அனைத்து குற்றங்களிலும்‌ கூட்டாளியாக செயல்பட்ட குழந்தைவேல்‌ என்பவரை பதிவாளர்‌ அலுவலகத்தில்‌ முக்கிய பொறுப்பிலும்‌ முறைகேடாக நியமனம்‌ செய்தது.

* பெரியார்‌ பல்கலைக்கழகத்தில்‌ பிரிவு அலுவலராக பணியாற்றிவரும்‌ ராஜமாணிக்கம்‌ என்பவர்‌ ஆசிரியர்‌ நியமனம்‌ மற்றும்‌ பதவி உயர்வு ஆகியவற்றில்‌ பணபரிமாற்றம்‌ உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள்‌ செய்துள்ளது.

* பெரியார்‌ பல்கலைக்கழகத்தில்‌ சுமார்‌ 450 பணியாளர்கள்‌ பணியாற்றிவரும்‌ நிலையில்‌, சுமார்‌ 18 மாணவர்களை பணப்பரிமாற்றம்‌ உள்ளிட்ட பல முறைகேடுகளுக்கு பிறகு மணிக்கணக்கு அடிப்படையில்‌ பணியமர்த்தப்பட்டது.

* பெரியார்‌ பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி மையத்தில்‌ மாணவர்கள்‌ இணையவழியாக பயில்வதற்கான முறை ஆரம்பிக்கப்பட்டு, இதற்கு சாப்ட்வேர்‌ ஒன்றினை முறைகேடாக, கொள்முதல்‌ விதிகளை மீறி கணினி அறிவியல்‌ துறைத்‌ தலைவர்‌ தங்கவேல்‌ அவரின்‌ உறவினர்‌ நிறுவனத்தில்‌ கொள்முதல்‌ செய்யப்பட்டது.

* பெரியார்‌ பல்கலைக்கழகத்திற்கு தேசிய தர அங்கீகாரம்‌ (NAAC) பெறுவதற்காக செய்யப்பட்டுள்ள செலவின வகையில்‌ ரூ.1.30 கோடி கணக்கு காட்டப்பட்டுள்ளாதாக தெரியவருகிறது. ஆனால்‌ இவற்றில் பெரும்பாலான ரசீதுகள்‌ பல்கலைக்கழக நூலகர்‌ ஜெயப்பிரகாஷ்‌ என்பவரால்‌ போலியாக தயார் செய்யப்பட்டு மோசடி நடைபெற்றது.

* பெரியார்‌ பல்கலைக்கழகத்தில்‌ பட்டியல்‌ இன, பட்டியல்‌ பழங்குடியினர்‌ உரிமைகள்‌ மறுக்கப்படுகிறது.

* பெரியார்‌ பல்கலைக்கழகத்தில்‌ சிண்டிகேட்‌ உறுப்பினர்‌ நியமனத்தில்‌ விதிமீறல்‌

* பெரியார்‌ பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர்‌ பதவிக்கு தலித்‌ பேராசிரியர்களை புறக்கணித்தது. 

* பெரியார்‌ பல்கலைக்கழகத்தால்‌ நடத்தப்பட்டு வரும்‌ தொலைதூரக் கல்விக்கு பல்கலைக்கழக மானியக்‌ குழு தடை விதித்துள்ளது.

மேற்கண்ட நிலையில்‌, சேலம்‌, பெரியார்‌ பல்கலைக்கழகத்தில்‌ நடைபெற்ற முறைகேடுகள்‌ தொடர்பாக, விசாரணை மேற்கொள்ள உயர்கல்வித்‌ துறை அரசு கூடுதல்‌ செயலாளர்‌ சு.படினிசாமி மற்றும்‌ அரசு இணைச்‌ செயலாளர்‌ இளங்கோ ஹென்றி தாஸ்‌ ஆகியோர்‌ கொண்ட விசாரணை குழு அமைக்கப்படுகிறது.‌ இக்குழு கீழ்க்கண்ட முறைகேடுகள்‌ குறித்து விசாரணை செய்யவும்‌ அரசு ஆணையிடுகிறது.

i) பெரியார்‌ பல்கலைக்கழகத்தில்‌ நடைபெற்ற மேற்குறிப்பிட்ட 13 குற்றச்சாட்டுக்கள்‌ தொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்‌.

ii) இது போன்ற தவறுகள்‌ மீண்டும்‌ நிகழாதவாறு தடுக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள்‌ தொடர்பான வழிமுறைகளை அரசுக்கு தெரிவிக்க வேண்டும்‌.

iil) 'இத்தவறுக்கு பொறுப்பான அதிகாரிகள்‌ / அலுவலர்கள்‌ குறித்து அரசுக்கு தெரிவிக்க வேண்டும்‌.

மேலும்‌ மேற்கண்ட குழுவானது விசாரணை அறிக்கையை இரண்டு மாதங்களுக்குள்‌ அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும்‌. இக்குழுவின்‌ விசாரணைக்கு தேவையான உரிய அலுவலக வசதிகளை பெரியார்‌ பல்கலைக்கழகம்‌ செய்து தரவேண்டும்‌ என்று உயர் கல்வித்துறை தெரிவித்துள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Actor Ajith:
Actor Ajith: "இனி நடிக்கமாட்டேன்" அஜித் தந்த ஷாக்! பேரதிர்ச்சியில் ரசிகர்கள்
நேற்று ”யார் அந்த சார்” பேட்சுடன் அதிமுக; இன்று ”இவன்தான் அந்த சார்” பலகையுடன் திமுக: பரபரப்பில் சட்டப்பேரவை
நேற்று ”யார் அந்த சார்” பேட்சுடன் அதிமுக; இன்று ”இவன்தான் அந்த சார்” பலகையுடன் திமுக: பரபரப்பில் சட்டப்பேரவை
விவசாயிகளே! காட்டுப்பன்றிகளை இனி சுட்டுத் தள்ளலாம் - யாருக்கு அந்த அதிகாரம்?
விவசாயிகளே! காட்டுப்பன்றிகளை இனி சுட்டுத் தள்ளலாம் - யாருக்கு அந்த அதிகாரம்?
Ind W Vs Ire W; அசால்டாக அடித்த இந்தியா... அயர்லாந்தின் இளம் கேப்டன் கேபியின் ஆட்டம் வீண்...
Ind W Vs Ire W; அசால்டாக அடித்த இந்தியா... அயர்லாந்தின் இளம் கேப்டன் கேபியின் ஆட்டம் வீண்...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Taiwan Couple Marriage in India : அம்மி மிதித்து..அருந்ததி பார்த்து திருமணம் செய்த தைவான் தம்பதிTirupati Stampede |  Pawan  VS Jagan Mohan டவுன் டவுன் ஜெய் ஜெய் கோஷம் போர்களமான திருப்பதி HOSPITALSeeman Periyar Issue : Vadakalai Vs Thenkalai fight : வடகலை Vs தென்கலை”யார் பெரியவா..?”களேபரமான காஞ்சிபுரம் கோயில்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Ajith:
Actor Ajith: "இனி நடிக்கமாட்டேன்" அஜித் தந்த ஷாக்! பேரதிர்ச்சியில் ரசிகர்கள்
நேற்று ”யார் அந்த சார்” பேட்சுடன் அதிமுக; இன்று ”இவன்தான் அந்த சார்” பலகையுடன் திமுக: பரபரப்பில் சட்டப்பேரவை
நேற்று ”யார் அந்த சார்” பேட்சுடன் அதிமுக; இன்று ”இவன்தான் அந்த சார்” பலகையுடன் திமுக: பரபரப்பில் சட்டப்பேரவை
விவசாயிகளே! காட்டுப்பன்றிகளை இனி சுட்டுத் தள்ளலாம் - யாருக்கு அந்த அதிகாரம்?
விவசாயிகளே! காட்டுப்பன்றிகளை இனி சுட்டுத் தள்ளலாம் - யாருக்கு அந்த அதிகாரம்?
Ind W Vs Ire W; அசால்டாக அடித்த இந்தியா... அயர்லாந்தின் இளம் கேப்டன் கேபியின் ஆட்டம் வீண்...
Ind W Vs Ire W; அசால்டாக அடித்த இந்தியா... அயர்லாந்தின் இளம் கேப்டன் கேபியின் ஆட்டம் வீண்...
ஃபாலோ பண்ணா 5 ஆண்டு; வன்கொடுமைக்கு 14 ஆண்டு- மரண தண்டனையும் உண்டு! பெண்களுக்காக நிறைவேறியது புது சட்டம்!
ஃபாலோ பண்ணா 5 ஆண்டு; வன்கொடுமைக்கு 14 ஆண்டு- மரண தண்டனையும் உண்டு! பெண்களுக்காக நிறைவேறியது புது சட்டம்!
Pratika Rawal: பயங்கர திறமையா இருக்கே! இந்திய கிரிக்கெட்டின் புதிய ஸ்டார் - யார் இந்த 2 கே கிட் ப்ரதிகா ராவல்?
Pratika Rawal: பயங்கர திறமையா இருக்கே! இந்திய கிரிக்கெட்டின் புதிய ஸ்டார் - யார் இந்த 2 கே கிட் ப்ரதிகா ராவல்?
TN Rain: உசார் மக்களே.! நாளை மறுநாள் 5 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
உசார் மக்களே.! நாளை மறுநாள் 5 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
Alert: பொங்கல் விடுமுறை.. பைக்ல போறவங்க உஷார்.. தயவு செஞ்சு இந்த தப்பை பண்ணாதீங்க..!
Alert: பொங்கல் விடுமுறை.. பைக்ல போறவங்க உஷார்.. தயவு செஞ்சு இந்த தப்பை பண்ணாதீங்க..!
Embed widget