மேலும் அறிய

Polytechnic Colleges Admission: பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை; விண்ணப்பிக்க இன்றே கடைசி- எப்படி?

தமிழகத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு டிப்ளமோ மற்றும் பகுதிநேர டிப்ளமோ சேர விண்ணப்பிப்பதற்கு இன்றே கடைசி நாளாகும்.

2023- 24ஆம்‌ ஆண்டிற்கான பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர்கள் முதலாம் ஆண்டு டிப்ளமோ மற்றும் பகுதிநேர டிப்ளமோ படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம். இதற்கு இன்றே (ஜூன் 9 வரை) கடைசித் தேதி  என்று தொழில்‌நுட்பக்‌ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.‌

தமிழ்நாட்டில் அரசு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தின்கீழ் 54 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், 3 இணைப்பு கல்லூரிகள் உள்ளன. இவற்றில் தொழில்நுட்ப பட்டய படிப்புகளுக்கு 19,120 இடங்கள் உள்ளன. இந்த பல்வகை தொழில்நுட்பக்‌ (பாலிடெக்னிக்) கல்லூரியில் பட்டயப் படிப்பு மாணவர்கள்‌ சேர்க்கை குறித்து தொழில்‌நுட்பக்‌ கல்வி இயக்ககம் வழிகாட்டுதல்களை வெளியிட்டது. 

தமிழ்நாடு அரசு அனைத்து பலவகை தொழில்நுட்பக்‌ கல்லூரிகளுக்கான நேரடி இரண்டாம் ஆண்டு பட்டயப் படிப்பிற்கு விண்ணப்பிக்கவும்‌, இணையதளத்தில்‌ பதிவேற்றம்‌ செய்யவும்‌ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி?

இந்த மையங்களின்‌ பட்டியல்‌ https://www.tnpoly.in/ என்ற இணையதள முகவரியில்‌ வெளியிடப்பட்டுள்ளது.

கல்வித்‌ தகுதி என்ன?

* முதலாம் ஆண்டு பட்டயச்‌ சேர்க்கை (First Year Diploma Admission)

10-ஆம்‌ வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்‌. (10th std passed)

* பகுதி நேர பட்டயச்‌ சேர்க்கை (Part time Diploma Admission) 

10-ஆம்‌ வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் . அல்லது 10-ஆம்‌ வகுப்பு தேர்ச்சி மற்றும்‌ 2 ஆண்டுகள்‌ தொழில்‌ பிரிவில்‌ பயின்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்‌. (10th std passed and 2 years ITI passed in any branch of Engineering and Technology). அல்லது 10-ஆம்‌ வகுப்பு தேர்ச்சி மற்றும்‌ 2 ஆண்டுகள்‌ தொழில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்‌.

பதிவுக் கட்டணம்‌ 

பதிவுக்‌ கட்டணமான ரூ.150/-ஐ விண்ணப்பதாரர்‌ Debit Card  / Credit Card / Net Banking ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றின்மூலம் இணையதள வாயிலாகச் செலுத்த வேண்டும்‌. எனினும் எஸ்சி/ எஸ்டி பிரிவினர்‌ பதிவுக்‌ கட்டணம்‌ செலுத்த வேண்டிய அவசியமில்லை.

முதலாம் ஆண்டு, பகுதி நேர பட்டயப்‌ படிப்பில் சேர மாணவர்கள், மே 20 முதல் இணையதளம் மூலம் விண்ணப்பித்து வருகின்றனர்.  இதற்கு விண்ணப்பமப் பதிவு செய்ய இறுதி நாள்‌ - ஜூன் 9, 2023 (இன்று) ஆகும்.

என்னென்ன ஆவணங்கள் தேவை?

* 12ஆம்‌ வகுப்பு மதிப்பெண்‌ சான்றிதழ்‌ / ஐடிஐ மதிப்பெண்‌ சான்றிதழ்‌,

* சாதிச்‌ சான்றிதழ்‌,

* சிறப்புப் பிரிவினர்‌ சமர்ப்பிக்க வேண்டிய சான்றிதழ்கள்‌

* விண்ணப்பதாரர்‌ புகைப்படம்‌ ஆகியவை தேவையான அளவுகளில்‌ இணையதளத்தில்‌ குறிப்பிட்டுள்ளவாறு பதிவேற்றம்‌ செய்யப்பட வேண்டும்‌.

மாணவர் சேர்க்கை குறித்த அனைத்து தகவல்கள்‌, வழிகாட்டி மற்றும்‌ தொலைபேசி எண்களை மாணவர்கள்‌ https://www.tnpoly.in/ என்ற இணையதள வாயிலாக அறிந்து கொள்ளலாம்‌. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பிளஸ் 2 துணைத் தேர்வு தேதிகள் அறிவிப்பு; மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்- எப்படி?
பிளஸ் 2 துணைத் தேர்வு தேதிகள் அறிவிப்பு; மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்- எப்படி?
அந்தரங்க உறுப்பில் கல்லை கட்டி சித்திரவதை! நீட் தேர்வுக்கு தயாரான மாணவருக்கு நேர்ந்த கொடூரம்!
அந்தரங்க உறுப்பில் கல்லை கட்டி சித்திரவதை! நீட் தேர்வுக்கு தயாரான மாணவருக்கு நேர்ந்த கொடூரம்!
காஷ்மீரில் என்கவுன்டர்: பதுங்கியிருந்த பயங்கரவாத அமைப்பின் முக்கிய புள்ளி சுட்டுக் கொலை
காஷ்மீரில் என்கவுன்டர்: பதுங்கியிருந்த பயங்கரவாத அமைப்பின் முக்கிய புள்ளி சுட்டுக் கொலை
சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா..?; நடந்தது என்ன? - சிறைத்துறை விளக்கம்
சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா..?; நடந்தது என்ன? - சிறைத்துறை விளக்கம்
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

12th Result 2024 | உயர் கல்வி படிக்க ஏங்கும் ஏழை மாணவி தெருவிளக்கில் படித்து சாதனை  12th exam resultSavukku Shankar accident CCTV | சவுக்கு விபத்தின் பின்னணி சதியா? தற்செயலா? பகீர் CCTV காட்சிSavukku shankar | ”சிறையில் சவுக்கு மீது தாக்குதல் CBCID விசாரணை வேணும்” வழக்கறிஞர் அதிரடிModi casts vote | ஓட்டு போட்ட கையோடு குழந்தையுடன் விளையாடிய மோடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பிளஸ் 2 துணைத் தேர்வு தேதிகள் அறிவிப்பு; மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்- எப்படி?
பிளஸ் 2 துணைத் தேர்வு தேதிகள் அறிவிப்பு; மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்- எப்படி?
அந்தரங்க உறுப்பில் கல்லை கட்டி சித்திரவதை! நீட் தேர்வுக்கு தயாரான மாணவருக்கு நேர்ந்த கொடூரம்!
அந்தரங்க உறுப்பில் கல்லை கட்டி சித்திரவதை! நீட் தேர்வுக்கு தயாரான மாணவருக்கு நேர்ந்த கொடூரம்!
காஷ்மீரில் என்கவுன்டர்: பதுங்கியிருந்த பயங்கரவாத அமைப்பின் முக்கிய புள்ளி சுட்டுக் கொலை
காஷ்மீரில் என்கவுன்டர்: பதுங்கியிருந்த பயங்கரவாத அமைப்பின் முக்கிய புள்ளி சுட்டுக் கொலை
சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா..?; நடந்தது என்ன? - சிறைத்துறை விளக்கம்
சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா..?; நடந்தது என்ன? - சிறைத்துறை விளக்கம்
கணவரின் பிறப்புறுப்பில் சிகரெட்டால் சூடு! கட்டிப்போட்டு சித்ரவதை செய்த கொடூர மனைவி - அய்யய்யோ!
கணவரின் பிறப்புறுப்பில் சிகரெட்டால் சூடு! கட்டிப்போட்டு சித்ரவதை செய்த கொடூர மனைவி - அய்யய்யோ!
Crime: முகமூடியுடன் வந்த திருடர்கள்.. தங்கத்துக்கு வந்த ஆபத்து ; தருமபுரியில் திக் திக்..!
முகமூடியுடன் வந்த திருடர்கள்.. தங்கத்துக்கு வந்த ஆபத்து ; தருமபுரியில் திக் திக்..!
Breaking Tamil LIVE: மே 16ம் தேதி முதல் 12ம் வகுப்பு துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் - அரசுத் தேர்வுகள் இயக்ககம்
Breaking Tamil LIVE: மே 16ம் தேதி முதல் 12ம் வகுப்பு துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் - அரசுத் தேர்வுகள் இயக்ககம்
இளம் பெண்ணிடம் போன் நம்பர் கேட்ட விவகாரம்; தொழிலாளி தலை துண்டித்து படுகொலை - நிலக்கோட்டை அருகே பயங்கரம்
இளம் பெண்ணிடம் போன் நம்பர் கேட்ட விவகாரம்; தொழிலாளி தலை துண்டித்து படுகொலை - நிலக்கோட்டை அருகே பயங்கரம்
Embed widget