TN Governor | தமிழகத்தில் தேசிய கல்விக்கொள்கை?: கல்லூரி முதல்வர்களுடன் நேரடியாகக் கலந்துரையாடும் ஆளுநர்
பல்கலைக்கழகத் துணைவேந்தர்களை அடுத்து, முதல்முறையாகக் கல்லூரி முதல்வர்களுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரையாட உள்ளார்.
பல்கலைக்கழகத் துணைவேந்தர்களை அடுத்து, முதல்முறையாகக் கல்லூரி முதல்வர்களுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரையாட உள்ளார். இந்த சந்திப்பில் தேசிய கல்விக் கொள்கையைத் தமிழகத்தில் அமல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்படுமா என்று கேள்வி எழுந்துள்ளது. திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரி முதல்வர்களுடன் கலந்துரையாடல் நடைபெற உள்ளது.
தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி, கடந்த செப்டம்பர் 18-ம் தேதி பதவியேற்றார். பொதுவாக ஆளுநர், மாநிலப் பல்கலைக்கழகங்களின் வேந்தர் ஆகவும் பதவி வகிக்கிறார். அதன்படி அனைத்து பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளார். இதற்கிடையே அனைத்துப் பல்கலை. துணைவேந்தர்கள் உடனான கலந்துரையாடல் கூட்டம், சென்னை ராஜ்பவனில் கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்றது. ஆளுநர் ஆர்.என்.ரவி இந்தக் கூட்டத்துக்கு தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் பல்கலை.களின் துணை வேந்தர்கள், பதிவாளர்கள் கலந்துகொண்டனர். இதில் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தகவல் வெளியானது.
இந்நிலையில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகக் கல்லூரி முதல்வர்களுடனும் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரையாட உள்ளார். இதுகுறித்து திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகப் பதிவாளர் (பொறுப்பு) கோபிநாத், பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்துக் கல்லூரி முதல்வர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
அதில், ’’ஆளுநர் உடனான கலந்துரையாடல் நிகழ்வு டிசம்பர் 8-ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த நிகழ்வு பல்கலைக்கழக பேரூர் வளாகத்தில் நடைபெற உள்ளது. வருகைக்கான ஒப்புதலை பல்கலைக்கழகத்துக்கு உடனடியாகத் தெரிவிக்க வேண்டும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பில் தேசிய கல்விக் கொள்கையைத் தமிழகத்தில் அமல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்படுமா என்று கேள்வி எழுந்துள்ளது.
முன்னதாக நாகாலாந்தில் பாதுகாப்புப் படையினர் தவறுதலாக நடத்திய தாக்குதலில் அப்பாவி பழங்குடியின மக்கள் உயிரிழந்தனர். இதன் காரணமாக மாநிலம் முழுவதும் பதற்றமான சூழ்நிலை தற்போது நிலவி வருகிறது.
இந்த சூழலில் அம்மாநிலத்தின் முன்னாள் ஆளுநரும், தற்போதைய தமிழ்நாடு ஆளுநருமான ஆர்.என்.ரவி தற்போது டெல்லி விரைந்துள்ளார். நாளை சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் 20-ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் கலந்துகொள்ள இருந்த நிலையில், அதை ரத்து செய்துவிட்டு ஆளுநர் டெல்லி விரைந்தது குறிப்பிடத்தக்கது.
லைஃப்ஸ்டைல் செய்திகளைப் படிக்க...
Migraine | ஒற்றைத் தலைவலி பாடாய்படுத்துதா? இந்த 7 விஷயமும் உங்களுக்கான மந்திரம்..
இந்த பாகங்களில் தொடர்ச்சியாக வலி இருந்தால் கவனிங்க.. மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..
Jaw Pain and Heart Attack | தாடை வலி, மாரடைப்பு வருவதற்கான அறிகுறியா?
முடி கொட்டுதா? பிரச்னை இதுதான்..! தலைமுடியும்.. தெரியாத தகவல்களும்!
Diabetes | சர்க்கரை நோய் குறித்து பரப்பப்படும் டாப் 10 பொய்கள் இவைதான்.. இதையெல்லாம் நம்பாதீங்க..
மழைக்காலத்தில் உடலை கதகதப்பாக்கும் உணவுகள் இதோ!
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்