மேலும் அறிய

TN 12th 2024: முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு: ஏப்.1 முதல் விடைத்தாள் திருத்தும் பணி தொடக்கம்

Tamil Nadu 12th Paper Correction 2024: 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் நேற்றுடன் (மார்ச் 22) முடிவடைந்த நிலையில், ஏப்ரல் 1 முதல் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்க உள்ளது.

12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் நேற்றுடன் (மார்ச் 22) முடிவடைந்த நிலையில், ஏப்ரல் 1 முதல் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்க உள்ளது.

தமிழக மாநிலக் கல்வி வாரியத்தின்கீழ் 10ஆம் வகுப்பு, 11, 12ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 2023- 24ஆம் கல்வி ஆண்டுக்கான 12ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1-ம் தேதி தொடங்கி நடைபெற்றது. நேற்றுடன் முடிந்த தேர்வை சுமார் 7.6 லட்சம் மாணவர்கள் எழுதினர்.

நேற்று என்ன தேர்வு?

பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நேற்று (மார்ச் 22) முடிவு பெற்ற நிலையில் உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிகக் கணிதம், ஜவுளி தொழில்நுட்பம் உள்ளிட்ட பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற்றன.

இதைத் தொடர்ந்து விடைத்தாள் திருத்துதல் பணிகள் ஏப்ரல் 1-ம் தேதி முதல் தொடங்க உள்ளது. இதுகுறித்துத் தேர்வுத் துறை அதிகாரிகள் கூறும்போது, பொதுத் தேர்வு மார்ச் 22ஆம் தேதி முடிந்த நிலையில், இன்று (மார்ச் 23-ம் தேதி) முதல் மாணவர்களின் விடைத் தாள்கள் 101 மண்டல சேகரிப்பு மையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட உள்ளன. அங்கே இருந்து திருத்துதல் முகாம்களுக்கு விடைத் தாள்கள் மார்ச் 28-ம் தேதி முதல் அனுப்பி வைக்கப்பட உள்ளன. தொடர்ந்து ஏப்ரல் 1 முதல் 13-ம் தேதி வரை திருத்துதல் பணிகள் நடைபெற உள்ளன.

விடைத்தாள் திருத்தும் பணிகளில் 46 ஆயிரம் ஆசிரியர்கள்

2023- 24ஆம் கல்வியாண்டில் 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை சுமார் 25 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர். இவர்களின் விடைத்தாள் திருத்தும் பணிக்காக தமிழகம் முழுவதும் 83 தேர்வு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பணிகளில் சுமார் 46 ஆயிரம் முதுநிலை ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இவர்களுக்கு பல்வேறு வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிடப்பட்டு உள்ளன. இவர்களுக்கு ஏப்ரல் 13ஆம் தேதி வரை விடைத்தாள் திருத்தம் நடைபெற உள்ளது.

பொதுத் தேர்வு முடிவுகள்

தொடர்ந்து மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும்.  தொடர்ந்து திட்டமிட்டபடி மே 6-ம் தேதி பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். 

மற்ற வகுப்புகளுக்கு எப்போது?

11ஆம் வகுப்புக்கு ஏப்ரல் 6ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரையும் விடைத்தாள் திருத்தும் பணிகள் நடத்தப்பட உள்ளன. தொடர்ந்து பத்தாம் வகுப்புக்கு ஏப்ரல் 12ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரையும் விடைத்தாள் திருத்தம் செய்யப்பட உள்ளது. இந்தப் பணிகள் முடிவடைந்ததும் மதிப்பெண்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படும்.

தேர்வு முடிவுகள் எப்போது?

தொடர்ந்து 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் மே 6ஆம் தேதி வெளியாக உள்ளன. அதேபோல மே 10ஆம் தேதி 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன. அதேபோல 11ஆம் வகுப்புக்கு மே 14ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Olympic Games Paris 2024: இன்னும் பத்தே வாரங்களில் ஒலிம்பிக்; பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா!
இன்னும் பத்தே வாரங்களில் ஒலிம்பிக்; பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா!
T20 World Cup: டி20 உலகக் கோப்பை இந்திய அணிக்கான புதிய ஜெர்சியை அறிமுகம் செய்த பிசிசிஐ!
T20 World Cup: டி20 உலகக் கோப்பை இந்திய அணிக்கான புதிய ஜெர்சியை அறிமுகம் செய்த பிசிசிஐ!
Watch Video: இந்தோனேசியா மேற்கு சுமத்ராவில் திடீர் கனமழை, வெள்ளம்.. இதுவரை 41 பேர் வரை உயிரிழப்பு என தகவல்!
இந்தோனேசியா மேற்கு சுமத்ராவில் திடீர் கனமழை, வெள்ளம்.. இதுவரை 41 பேர் வரை உயிரிழப்பு என தகவல்!
“அமைச்சர் ரகுபதி என்னை அப்படி சொல்லி இருக்கக்கூடாது” - செங்கோட்டையன் கண்டனம்
“அமைச்சர் ரகுபதி என்னை அப்படி சொல்லி இருக்கக்கூடாது” - செங்கோட்டையன் கண்டனம்
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Ramdoss : மோடியின் சர்ச்சை பேச்சு எஸ்கேப்பான ராமதாஸ் முஸ்லீம் குறித்து பேசியது சரியா?Pondichery : பாண்டிச்சேரியில் 1 நாள்...150 ரூபாய் PACKAGE இத்தனை இடங்களா?Felix Gerald Arrest :  கணவரை தேடிய மனைவி போலீஸ் வேனில் Felix திடீர் திருப்பம்KPY Bala :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Olympic Games Paris 2024: இன்னும் பத்தே வாரங்களில் ஒலிம்பிக்; பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா!
இன்னும் பத்தே வாரங்களில் ஒலிம்பிக்; பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா!
T20 World Cup: டி20 உலகக் கோப்பை இந்திய அணிக்கான புதிய ஜெர்சியை அறிமுகம் செய்த பிசிசிஐ!
T20 World Cup: டி20 உலகக் கோப்பை இந்திய அணிக்கான புதிய ஜெர்சியை அறிமுகம் செய்த பிசிசிஐ!
Watch Video: இந்தோனேசியா மேற்கு சுமத்ராவில் திடீர் கனமழை, வெள்ளம்.. இதுவரை 41 பேர் வரை உயிரிழப்பு என தகவல்!
இந்தோனேசியா மேற்கு சுமத்ராவில் திடீர் கனமழை, வெள்ளம்.. இதுவரை 41 பேர் வரை உயிரிழப்பு என தகவல்!
“அமைச்சர் ரகுபதி என்னை அப்படி சொல்லி இருக்கக்கூடாது” - செங்கோட்டையன் கண்டனம்
“அமைச்சர் ரகுபதி என்னை அப்படி சொல்லி இருக்கக்கூடாது” - செங்கோட்டையன் கண்டனம்
Watch video : கண்ணாடியில் உன் மூஞ்சியை பார்!  ஹீரோவாக ஆசைப்பட்ட நகுலுக்கு கிடைத்த முதல் கமெண்ட்..
கண்ணாடியில் உன் மூஞ்சியை பார்!  ஹீரோவாக ஆசைப்பட்ட நகுலுக்கு கிடைத்த முதல் கமெண்ட்..
En Kalloori Kanavu : என் கல்லூரி கனவு; மாணவர்களுக்கு மே 14 முதல் உயர்கல்வி வழிகாட்டல் திட்டம்.. எங்கெல்லாம்? முழு விவரம் இதோ!
என் கல்லூரி கனவு; மாணவர்களுக்கு மே 14 முதல் உயர்கல்வி வழிகாட்டல் திட்டம்.. எங்கெல்லாம்? விவரம்
Rahul Gandhi Marriage : எப்போ கல்யாணம் பண்ணிப்பீங்க?: கூட்டத்தில் இருந்து வந்த பெண் குரல்.. ராகுல் சொன்ன பதில்!
எப்போ கல்யாணம் பண்ணிப்பீங்க?: கூட்டத்தில் இருந்து வந்த பெண் குரல்.. ராகுல் சொன்ன பதில்!
Watch Video: இஸ்லாமிய பெண் வாக்காளர்களிடம் அத்துமீறல்.. பாஜக வேட்பாளர் மாதவி லதா மீது வழக்குப்பதிவு.. என்ன நடந்தது..?
இஸ்லாமிய பெண் வாக்காளர்களிடம் அத்துமீறல்.. பாஜக வேட்பாளர் மாதவி லதா மீது வழக்குப்பதிவு.. என்ன நடந்தது..?
Embed widget