(Source: ECI/ABP News/ABP Majha)
பிளஸ் 1 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ், மறுகூட்டல் தேதிகள் எப்போது?
பிளஸ் 1 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ், மறுகூட்டல் தேதிகள் எப்போது என்ற விவரத்தை அரசுத் தேர்வுகள் துறை வெளியிட்டுள்ளது.
பிளஸ் 1 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ், மறுகூட்டல் தேதிகள் எப்போது என்ற விவரத்தை அரசுத் தேர்வுகள் துறை வெளியிட்டுள்ளது.
11ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மதிப்பெண் பட்டியல் பதிவிறக்கம் செய்தல் மற்றும் மறுகூட்டல் / விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பித்தல் குறித்து அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர், அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர்கள் ஆகியோருக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதன்படி,
மதிப்பெண் பட்டியல் பதிவிறக்கம் செய்தல்:
01.07.2022 முற்பகல் 11.00 மணி முதல் மே 2022, மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வழுதிய பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளி தலைமையாசிரியர்கள் வழியாகவும், தனித்தேர்வர்கள் என்ற இணையதளம் வாயிலாக தங்களது தேர்வெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து, மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.
விடைத்தாள் நகல் / மறுகூட்டல்-। விண்ணப்பிக்கும் முறை:
விடைத்தாள் நகல் / மறுகூட்டல்-। கோரி விண்ணப்பிக்க விரும்பும் பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகள் வழியாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் வழியாகவும் 30.06.2022 (வியாழக்கிழமை) காலை 10.00 மணி முதல் 07.07.2022 (வியாழக் கிழமை) மாலை 5.00 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
விடைத்தாள் நகல், மறுகூட்டல் - ஆகியவற்றில் எதாவது ஒன்றிற்கு மட்டுமே தேர்வர்கள் விண்ணப்பிக்க இயலும். தேர்வர்கள் தங்களது விடைத்தாளின் நகல் வேண்டுமா? அல்லது மதிப்பெண் மறுகூட்டல் செய்ய வேண்டுமா? என்பது குறித்து தெளிவான முடிவு செய்து கொண்டு அதன் பின்னர் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விடைத்தாள் நகல் பெற்றவர்கள் மட்டுமே விடைத்தாள் மறுமதிப்பீடு கோரி பின்னர் விண்ணப்பிக்க இயலும்.
மதிப்பெண் மறுகூட்டல் கோரி விண்ணப்பிக்கும் பாடத்திற்கு விடைத்தாள்களின் நகல் கோரி விண்ணப்பித்திட இயலாது. விடைத்தாளின் நகல் பெற்ற பிறகு அவர்கள் மறுகூட்டல் - ॥ / மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்படும்.
பணம் செலுத்தும் முறை:
தேர்வர்கள் விடைத்தாட்களின் நகலிற்கான கட்டணத்தை விண்ணப்பிக்கவுள்ள பள்ளியிலேயே பணமாகச் செலுத்த வேண்டும்.
விடைத்தாள் நகல் - இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளும் முறை:
விடைத்தாள் நகல் விண்ணப்பிக்கும்போது வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டினை மாணவர்கள் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். தேர்வெண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிட்ட விவரங்களை பயன்படுத்தி தேர்வர்கள் தங்களது விடைத்தாளின் நகலினை இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.