மேலும் அறிய

Supplementary Exam Result: வெளியான பிளஸ் 1, பிளஸ் 2 துணைத்தேர்வு முடிவுகள்; சரிபார்ப்பது எப்படி?- இணைப்பு இதோ!

கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் நடைபெற்ற 11ம் வகுப்பு, 12ம் வகுப்பு துணைத் தேர்வு எழுதிய மாணவர்களின் மறுகூட்டல்‌ / மறுமதிப்பீடு முடிவுகள்‌ இன்று (செப்டம்பர் 4) வெளியாகி உள்ளன.

கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் நடைபெற்ற 11ம் வகுப்பு, 12ம் வகுப்பு துணைத் தேர்வு எழுதிய மாணவர்களின் மறுகூட்டல்‌ / மறுமதிப்பீடு முடிவுகள்‌ இன்று (செப்டம்பர் 4) வெளியாகி உள்ளன.

11ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளை மாணவர்கள் https://tnegadge.s3.amazonaws.com/notification/HRSEC/1693824165.pdf என்ற இணைப்பில் காணலாம். அதேபோல 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளை மாணவர்கள் https://tnegadge.s3.amazonaws.com/notification/HRSEC/1693824379.pdf என்ற இணைப்பில் காணலாம். 

மேல்நிலை முதலாம்‌ ஆண்டு, இரண்டாம்‌ ஆண்டு மாணவர்களுக்கு கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் துணைத் தேர்வுகள்‌ நடைபெற்று முடிந்தன. இதை எழுதி, மறுகூட்டல் (Retotal) மற்றும்‌ மறு மதிப்பீடு (Revaluation) கோரி விண்ணப்பித்தவர்களுள்‌, மதிப்பெண்‌ மாற்றம்‌ உள்ள தனித் தேர்வர்களின் பதிவண்களின்‌ பட்டியல்‌ www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில்‌ Notification பகுதியில்‌ இன்று ( 04.09.2023)  பிற்பகல்‌ வெளியிடப்பட்டது. இப்பட்டியலில்‌ இடம்‌பெறாத பதிவெண்களுக்கான விடைத்தாட்களில்‌ எவ்வித மதிப்பெண்‌ மாற்றமும்‌ இல்லை எனத்‌ தெரிவிக்கப்படுகிறது.

மறுகூட்டல்‌ / மறுமதிப்பீட்டில்‌ மதிப்பெண்‌ மாற்றம்‌ உள்ள தனித்தேர்வர்கள்‌ மட்டும்‌, மேற்குறிப்பிட்ட இணையதளத்தில்‌ தங்களது பதிவெண்‌ மற்றும்‌ பிறந்த தேதி ஆகிய விவரங்களை பதிவு செய்து தங்களுக்கான திருத்தப்பட்ட மதிப்பெண்கள்‌ அடங்கிய மதிப்பெண்‌ பட்டியலை (Statement‌ of Marks) பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்‌.

ஜூன், ஜூலையில் நடைபெற்ற துணைத் தேர்வு

தமிழ்நாட்டில் 10,11, 12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு முறை அமலில் இருந்து வரும் நிலையில், இதில் 12 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் 13 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வுகளை தமிழ்நாட்டில்  சுமார் 8 லட்சத்து 03ஆயிரத்து 385 மாணவர்கள் எழுதினர்.  

மே 8ஆம் தேதி வெளியான முடிவுகள்

இதையடுத்து சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் மே 8ஆம் தேதி காலை 10.05 மணிக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிட்டார். 

8.3 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதிய 12 ஆம் வகுப்பு தேர்வில் 47,934 மாணவ, மாணவியர்கள் தோல்வியடைந்தனர். இவர்களுக்கான துணைத் தேர்வு ஜூன் 19ஆம் தேதி முதல் தொடங்கி, ஜூன் 26ஆம் தேதி வரை நடைபெற்றது. 11ஆம் வகுப்பு துணைத் தேர்வு ஜூன் 27ஆம் தேதி தொடங்கி, ஜூலை 5ஆம்தேதி வரை நடைபெற்றது. 

இந்த நிலையில் மேல்நிலை முதலாம்‌ ஆண்டு, இரண்டாம்‌ ஆண்டு துணைத்‌ தேர்வுகளின் மறுகூட்டல்‌ / மறுமதிப்பீடு முடிவுகள்‌ இன்று வெளியாகி உள்ளன. 11ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளை மாணவர்கள் https://tnegadge.s3.amazonaws.com/notification/HRSEC/1693824165.pdf என்ற இணைப்பில் காணலாம். அதேபோல 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளை மாணவர்கள் https://tnegadge.s3.amazonaws.com/notification/HRSEC/1693824379.pdf என்ற இணைப்பில் காணலாம். 

அசல்‌ மதிப்பெண்‌ சான்றிதழ் எப்போது?

மேல்நிலை துணைத் தேர்வு எழுதிய தனித்தேர்வர்களுக்கு அசல்‌ மதிப்பெண்‌ சான்றிதழ்‌ வழங்கப்படும்‌ தேதி குறித்து பின்னர்‌ அறிவிக்கப்படும்‌ எனத்‌ தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
"ரஜினி பத்தி தெரியாது.." ரஜினியை அவமானப்படுத்தினாரா நயன்தாரா ?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
"ரஜினி பத்தி தெரியாது.." ரஜினியை அவமானப்படுத்தினாரா நயன்தாரா ?
TVK:
TVK: "எனக்கு எதிரிங்க வெளிய இல்ல" அடித்து கொள்ளும் தவெக நிர்வாகிகள்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
உண்டியலில் விழுந்த ஐ-போன் முருகனுக்கு சொந்தமா? - அமைச்சர் சேகர் பாபு சொன்ன பதில்
உண்டியலில் விழுந்த ஐ-போன் முருகனுக்கு சொந்தமா? - அமைச்சர் சேகர் பாபு சொன்ன பதில்
Russia Ukraine War: அடிவாங்கிய அமெரிக்கா, ரஷ்யாவில்  கட்டிடங்களுக்குள் பாய்ந்த ட்ரோன்கள் - அதிர்ந்த புதின்
Russia Ukraine War: அடிவாங்கிய அமெரிக்கா, ரஷ்யாவில் கட்டிடங்களுக்குள் பாய்ந்த ட்ரோன்கள் - அதிர்ந்த புதின்
Robin Uthappa : 23 லட்சம் மோசடி! வலை வீசும் போலீஸ்.. சிக்கலில் முன்னாள் கிரிக்கெட் வீரர்!
Robin Uthappa : 23 லட்சம் மோசடி! வலை வீசும் போலீஸ்.. சிக்கலில் முன்னாள் கிரிக்கெட் வீரர்!
Embed widget