TANUVAS: இளநிலை கால்நடை மருத்துவப் படிப்புகளில் சேர நாளையே கடைசி; உடனே விண்ணப்பிங்க!
TANUVAS: இளநிலை கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான இணையவழி விண்ணப்பப்பதிவு நாளையுடன் முடிவடைகிறது.
இளநிலை கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான இணையவழி விண்ணப்பப்பதிவு நாளையுடன் (30.06.2023) முடிவடைகிறது.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி ஒரத்தநாடு, சேலம், தலைவாசல், உடுமலைப்பேட்டை, தேனி, வீரபாண்டி ஆகிய 7 இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றனர். இந்த கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்புக்கு (பி.வி.எஸ்சி. ஏ.ஹெச்.) 660 இடங்கள் இருக்கின்றன. சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு ஆகிய 4 கல்லூரிகளில் உள்ள 420 இடங்களில் மட்டும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 63 இடங்கள் (15 சதவீதம்) ஒதுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 597 இடங்கள் மாநில அரசு வசம் உள்ளதாக தமிழ்நாடு மருத்துவ பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஜூன் 12-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
மாணவர் சேர்க்கை
இந்தப் படிப்புகளுக்கு 12-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.
B.Tech. - Food Technology, BTech – Poultry Technology, BTech – Dairy Technology ஆகிய படிப்புகள் நான்கு ஆண்டு கால படிப்பாகும்.
B.Tech. - Food Technology - சென்னை உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரி
B.Tech – Poultry Technology- ஓசுர் கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மைக் கல்லூரி
B.Tech – Dairy Technology - சென்னை உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரி.
விண்ணப்பிப்பது எப்படி?
பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச் மற்றும் பி.டெக் படிப்புகளுக்கான நிகழாண்டு மாணவா் சோ்க்கைக்கு https://adm.tanuvas.ac.in/ என்ற இணையதளத்தில் நாளைக்குள் (30.06.2023) விண்ணப்பிகலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.06.2023