TN Schools reopening | பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கு இன்று முதல் நேரடி வகுப்புகள்.. மீண்டும் பள்ளிக்குத் திரும்பும் மாணவர்கள்..
மழலையர் விளையாட்டு பள்ளிகள் (Play Schools), நர்சரி பள்ளிகள் (LKG, UKG) செயல்பட அனுமதி இல்லை என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.
தமிழ்நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த டிசம்பர் மாதம் இறுதி முதல் வேகமாக அதிகரித்து வந்தது. இதைத் தொடர்ந்து ஜனவரி மாதம் தமிழ்நாடு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. இரவு நேர ஊரடங்கு மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு ஜனவரி 31ஆம் தேதி வரை விதிக்கப்பட்ட நிலையில், கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் கொரோனா தொற்று குறைந்து வந்தது.
இதனால், பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் செயல்பட அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி இன்று முதல் அனைத்து பள்ளிகளிலும் பயிலும் 1 முதல் 12 ஆம் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்க உள்ளது.
மேலும் படிக்க: Budget 2022: ‛தயாரிப்பு முதல்... தாக்கல் வரை...’ பட்ஜெட் பற்றி தெரியவேண்டிய முழு விவரம் இதோ!
#BREAKING | நாளை முதல் இரவு நேர ஊரடங்கு ரத்து; ஜன.30ம் தேதி (ஞாயிறு) முழு ஊரடங்கு ரத்துhttps://t.co/wupaoCQKa2 #TNLockdown #MKStalin #nightcurfew #TNSchools #TNColleges pic.twitter.com/sUO6UD2w1i
— ABP Nadu (@abpnadu) January 27, 2022
கொரோனா பரவல் அதிகமாக இருந்த சூழலில், கொரோனா பாதுகாப்பு மையங்களாக (Covid Care Centre) செயல்பட்டு வந்த கல்லூரிகள் தவிர்த்து ஏனைய அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள்/ கல்லூரிகள்/ தொழிற்பயிற்சி மற்றும் பயிற்சி நிலையங்கள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி இன்று முதல் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. இதற்கான உரிய முன்னேற்பாடுகளை சம்மந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டியதை உறுதிப்படுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.
மேலும் தற்போது நோய்த் தொற்று பரவல் குறைந்திருப்பினும் பொது மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு நோய்த் தொற்று பரவலை கட்டுக்குள் வைத்திட ஒரு சில கட்டுப்பாடுகள் தொடர்ந்து விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி மழலையர் விளையாட்டு பள்ளிகள் (Play Schools), நர்சரி பள்ளிகள் (LKG, UKG) செயல்பட அனுமதி இல்லை என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, பொதுத் தேர்வு எழுதும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், 1 முதல் 9ஆம் வகுப்புகளுக்கும், 11ஆம் வகுப்புக்கும் இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்