சிபிஎஸ்இ தேர்வு ரத்து: தமிழ்நாடு மாணவர்கள் சந்திக்கும் சிக்கல் என்ன?

தமிழ்நாட்டில் 12ம் வகுப்புத் தேர்வை ரத்து செய்வதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளது. ஆனால், இதை எதிர்கொள்வது ஒன்றும் முடியாத காரியம் இல்லை. அனைத்துப் பிரிவு  மாணவர்களுக்கும்  நியாயமான முறையில் தேர்வு முடிவுகளை தயாரிப்பதை உறுதி செய்ய வேண்டும் என கல்வியாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

கொரோனா பெருந்தொற்று காரணமாக இந்தாண்டு 12ம் வகுப்புக்கான வாரியத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். மேலும், இதற்கு முன் நடத்தப்பட்ட தேர்வுகளின் முடிவுகளை தொகுக்கும் நடவடிக்கை சிபிஎஸ்இ மேற்கொள்ளும் என்றும் தெரிவித்தார்.     


இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு வாரியத்  தேர்வுகள் நடத்துவது குறித்த விவாதங்கள் சூடுபிடிக்கத் தொடங்கின. கடந்தாண்டும், கொரோனா பெருந்தொற்று காரணமாக, 12ஆம் வகுப்புக்களுக்கான தேர்வுகளை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) ரத்து செய்தது. மதிப்பீடு திட்டத்தின் அடிப்படையில் மாணவர்களுக்கு இறுதி மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. 


2019 சிபிஎஸ்இ தேர்வு முடிவுகளுடன் ஒப்பிடும் போது, கடந்தாண்டு தேர்வில், 95% மற்றும் அதற்கு மேற்பட்ட மதிப்பெண் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 118.6%  ஆக அதிகரித்தது. மேலும், கடந்தாண்டு 90% மற்றும் அதற்கு மேல் பெற்றவர்களின் எண்ணிக்கை 65 சதவிகிதமாக அதிகரித்தது. 


 Total number of candidates who scored >90% and >95% and above (2020) (Full Subjects) >90% and abovePass Percentage of students >90% above>95% and abovePass Percentage of students >95% aboveTotal Candidates15793413.24386863.24சிபிஎஸ்இ கல்விமுறையில் கொண்டு வந்த சில சீர்திருத்த நடவடிக்கைகள் இதற்கொரு காரணமாக இருந்தாலும், கொரோனா காலத்தில் பின்பற்றப்பட்ட  மதிப்பீடு திட்டமும் மிக முக்கிய காரணமாக கூறப்பட்டது. இதன் காரணமாக, நாடு முழுவதும் உள்ள சிறந்த கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சிபிஎஸ்இ மாணவர்களின் சேர்க்கை மற்ற மாநில வாரியத் தேர்வு மாணவர்களை விட  அதிகமாக இருந்தது.       


 
Overall Pass Percentage (Full Subjects)YearRegisteredAppearedpassedPass%Increase in pass%201912183931205484100542783.405.38 %202012035951192961105908088.78 


ஜெயப்பிரகாஷ் காந்தி: 


கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி நமக்கு அளித்த பேட்டியில், " தமிழ்நாட்டில் 12ம் வகுப்புத் தேர்வை ரத்து செய்வதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளது. ஆனால், இதை எதிர்கொள்வது ஒன்றும் முடியாத காரியம் இல்லை. அனைத்துப் பிரிவு  மாணவர்களுக்கும்  நியாயமான முறையில் தேர்வு முடிவுகளை தயாரிப்பதை உறுதி செய்ய வேண்டும்.  யாருக்கும் கூடுதல் நன்மைகள் கிடைக்காமல் நியாமான முறையில் இருக்க வேண்டும்.       


இந்தாண்டு, ஜனவரி மாதத்தில் இருந்து தான் 12ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வரவழைக்கப்பட்டனர். அதன்பின், மார்ச் மாதத்தில் இருந்து கொரோனா இரண்டாவது அலை தாக்கம் வேகமேடுக்க தொடங்கியது. இதனால், நகர்ப்புறங்களை விட கிராமப்புற பகுதி மாணவர்கள் அதிகமாக பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றனர். எனவே, 10 , 11, 12 வகுப்புகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மதிப்பெண் பட்டியலை தயாரிக்காலம்" என்று தெரிவித்தார். 


+2 தேர்வை ஒத்திவைத்து நடத்த தமிழக அரசு திட்டமா? அமைச்சர் விளக்கம்


தமிழகத்தில் 12ம் வகுப்புத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, நுழைவுத் தேர்வு நடத்துவதற்கான சாத்தியக் கூறுகள் முற்றிலும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.  


இதற்கிடையே, +2 தேர்வை எப்படி நடத்தவது?  எனது யோசனைகள் என்ற தலைப்பில்  எஸ்கேபி கல்விக் குழுமத்தின் தலைவர் எஸ்.கே.பி.கருணா தனது ட்விட்டர் பதிவில், " சராசரியாக 8 லட்சம் பிள்ளைகள் +2 தேர்வை எழுதுகின்றனர். எந்தப் பாடப்பிரிவாக இருந்தாலும் ஒவ்வொருவருக்கும் 6 தேர்வுகள்தான்.  அதில் இரண்டு மொழிப்பாடங்கள்.  மீதமுள்ள 4 பாடங்களின் மதிப்பெண்கள்தான்உயர்கல்விக்கான தகுதி மதிப்பெண்கள்.   8 லட்சம் பேர்களுக்கும் மொழிப்பாடங்களுக்கு அவர்களின் +1, +2 (பிற தேர்வுகள்) அடிப்படையில் மதிப்பெண்களைத் தந்து விடலாம். கூடுதலாக Covid  Consideration ஆக 10 மதிப்பெண்களும் தரலாம்.


CBSE Class 12 Board Exam 2021: சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு ரத்து என்பது சூழ்ச்சியே! - வைகோ


வசிக்கும் இடங்களுக்கு அருகில் உள்ள கலை & அறிவியியல் கல்லூரி, பட்டயக் கல்லூரிகளில் சேர்ந்து படிக்கத் திட்டமிட்டுள்ளவர்களுக்கு மீதமுள்ள 4 பாடங்களுக்கும் கூட இதே முறையில் மதிப்பெண்கள் வழங்கிவிடலாம். 


மேற்சொன்ன கல்லூரி / பாலிடெக்னிகளில் தேவைக்கும் அதிகமான இரு மடங்கு இடங்கள் உள்ளமையால் இவர்கள் கோரும் இடங்களைத் தருவதில் பிரச்சனை ஏதும் இருக்காது.  இந்த ஆப்ஷனை 4 லட்சம் மாணவர்களுக்கும் மேலாக தேர்ந்தெடுத்துக் கொண்டு விடுவார்கள் என உறுதியாக நம்புகிறேன். இப்போது மீதமுள்ள 4 லட்சம் மாணவர்களுக்கு 4 பாடங்களுக்கு மட்டும் பொதுத்தேர்வை நடத்துவது எப்படி என்பதற்குதான் திட்டமிட வேண்டும். இவர்களை மட்டும் தனியாக மாவட்ட, பள்ளிவாரியாக பட்டியிலிட்டு திட்டமிடலாம்" என்று பதிவிட்டுள்ளார்.  சிபிஎஸ்இ தேர்வு ரத்து: தமிழ்நாடு மாணவர்கள் சந்திக்கும் சிக்கல் என்ன?


முன்னதாக, 12ம் பொதுத்தேர்வு தொடர்பாக முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தியதாகவும், பிற மாநிலங்களின் கருத்துக்களும், சிபிஎஸ்சி 12ஆம் வகுப்பு ரத்து செய்யப்பட்டது குறித்த பின்னணியையும் முதலமைச்சரிடம் எடுத்துரைக்கப்பட்டதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களிடம் கூறினார்.


12ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து கருத்து தெரிவிக்க மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள் tnschoolsedu21@gmail.com என்ற மின்னஞ்சல் அல்லது 14417 எண்ணில் தொடர்பு கொண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வு குறித்த தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: 12th Exam news in tamil anbil mahesh Tamil Nadu 12th Exam Latest news updates Tamilnadu Plus 2 exam 12 Exam Mark scheme CBSE 12 Exam Cancelled

தொடர்புடைய செய்திகள்

TN School Education : 11-ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை : வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

TN School Education : 11-ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை : வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

NEET : நீட் தேர்வை ரத்துசெய்வது திமுக அரசுக்கு சாத்தியமா? எப்படி?

NEET : நீட் தேர்வை ரத்துசெய்வது திமுக அரசுக்கு சாத்தியமா? எப்படி?

AK Rajan | முதல்வர் ஸ்டாலினின் NEET ஆய்வு அதிரடி! யார் இந்த ஏ.கே ராஜன்?

AK Rajan | முதல்வர் ஸ்டாலினின் NEET ஆய்வு அதிரடி!  யார் இந்த ஏ.கே ராஜன்?

Thiruvalluvar university : தேர்வுக் கட்டணம் செலுத்துமாறு சுற்றறிக்கை : மாணவர்கள் விரக்தி . 

Thiruvalluvar university : தேர்வுக் கட்டணம் செலுத்துமாறு சுற்றறிக்கை : மாணவர்கள் விரக்தி . 

ப்ளஸ்-2 தேர்வுகள் ரத்து அறிவிப்பு - அரசியல் தலைவர்கள் ரியாக்‌ஷன்ஸ்!

ப்ளஸ்-2 தேர்வுகள் ரத்து அறிவிப்பு - அரசியல் தலைவர்கள் ரியாக்‌ஷன்ஸ்!

டாப் நியூஸ்

Tamil Nadu Coronavirus LIVE News : தமிழ்நாட்டில் இன்று 17,321 பேருக்கு உறுதியான கொரோனா தொற்று.

Tamil Nadu Coronavirus LIVE News : தமிழ்நாட்டில் இன்று 17,321 பேருக்கு உறுதியான கொரோனா தொற்று.

Tamil Nadu Coronavirus: கோவை ஈரோட்டில் அதிகரிக்கும் கொரோனா.. 400ஐ தாண்டிய உயிரிழப்பு

Tamil Nadu Coronavirus: கோவை ஈரோட்டில் அதிகரிக்கும் கொரோனா.. 400ஐ தாண்டிய உயிரிழப்பு

பட்டியலின மக்களை கோவிலுக்குள் விடாமல் தடுத்த சம்பவம் : அமைச்சருக்கு கடிதம் எழுதிய ரவிக்குமார் எம்.பி.,

பட்டியலின மக்களை கோவிலுக்குள் விடாமல் தடுத்த சம்பவம் : அமைச்சருக்கு கடிதம் எழுதிய ரவிக்குமார் எம்.பி.,

‛உன் உருவமும்... உன் கலரும்...’ குக் வித் கோமாளி தீபா சங்கர் சந்தித்த சங்கடங்கள்!

‛உன் உருவமும்... உன் கலரும்...’ குக் வித் கோமாளி தீபா சங்கர் சந்தித்த சங்கடங்கள்!