செங்கல்பட்டு மாவட்ட அளவில் முதலிடம்... எவ்வளவு மார்க் தெரியுமா ? முதல் 3 இடம் லிஸ்ட்..!
"செங்கல்பட்டு மாவட்டத்தில் 493 மதிப்பெண் பெற்று அரசு பள்ளியை சேர்ந்த மாணவி முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்"

செங்கல்பட்டு மாவட்ட அரசு பள்ளியை சேர்ந்த மாணவி வர்ஷா 493 மதிப்பெண் பெற்று, அரசு பள்ளிகளில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து சாதித்துள்ளார்
செங்கல்பட்டு மாவட்டத்தின் நிலை என்ன ?
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் செங்கல்பட்டு மாவட்டத்தின் தேர்வு முடிவுகள் வெளிவந்துள்ளன. செங்கல்பட்டு மாவட்டத்தை பொருத்தவரை 363 பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 79 பள்ளிகளில் மாணவர்கள் 100% தேர்ச்சி பெற்றுள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தை பொருத்தவரை 15192 மாணவர்களும் 14927 மாணவிகளும் தேர்வு எழுதினர். மொத்தம் செங்கல்பட்டு மாவட்டத்தை பொருத்தவரை 30119 மாணவர்கள் தேர்வு எழுதி இருந்தனர். இதில் 13,125 மாணவர்களும், 13927 மாணவிகளும் மொத்தம் 27052 மாணவ மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
மொத்தம் தேர்ச்சி 89.82 சதவீதமாக உள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் 35 வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 33-வது இடத்தில் இருந்த செங்கல்பட்டு மாவட்டம் இந்த முறை 35-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்ட அரசு பள்ளியின் நிலை என்ன ?
செங்கல்பட்டு மாவட்டத்தில் 146 அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 14 அரசு பள்ளிகள் மட்டுமே 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. அரசுப் பள்ளியின் தேர்ச்சி சதவீதம் 84.15 சதவீதமாக உள்ளது. கடந்த ஆண்டு அரசு பள்ளியின் தேர்ச்சி 79 சதவீதமாக இருந்த நிலையில், இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதத்தில் சற்று அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீத அடிப்படையில் செங்கல்பட்டு மாவட்டம் 35 வது இடத்தை பிடித்து இருக்கிறது. கடந்தாண்டு 36-வது இடத்தை பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மாவட்டத்தில் முதலிடம் யாருக்கு ?
செங்கல்பட்டு மாவட்ட அரசு பள்ளிகளில் தேர்வு முடிவு அடிப்படையில், நந்திவரம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவி வர்ஷா.S.G 493 மதிப்பெண்களைப் பெற்று முதலிடம் பிடித்த அசத்தியுள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்தை பொருத்தவரை அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களில் முதலிடம் வர்ஷாவிற்கு கிடைத்துள்ளது.
இதேபோன்று இரண்டாவது, இடத்தை மூன்று மாணவ மாணவிகள் பிடித்துள்ளனர். புகழேந்திப் புலவர் அரசு பள்ளியை சேர்ந்த மாணவி வைஷ்ணவி 492 மதிப்பெண்களைப் பெற்று இரண்டாம் இடம் பிடித்துள்ளார். அதேபோன்று, செங்கல்பட்டு மாவட்ட மாதிரி பள்ளியை சேர்ந்த மாணவர் ஜீவன்ராஜ் 492 மதிப்பெண்களை பெற்றுள்ளார். திருவணஞ்சேரி பகுதியை சேர்ந்த உதயபாரதி 492 மதிப்பெண்களை பெற்று மாவட்ட அளவில் மூன்று பேரும் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளனர்.
இதேபோன்று 490 மதிப்பெண்களை பெற்று 3 மாணவிகள் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளனர். அரசு மாதிரி பள்ளியை சேர்ந்த மோனிஷா மற்றும் ராஜ ஸ்ரீ , நந்திவரம் பெண்கள் மேல்நிலை பள்ளியை சேர்ந்த வித்யாலஷ்மி ஆகியோர் மூன்று இடங்களை பிடித்துள்ளனர்.





















