மேலும் அறிய

உயர்கல்வியில் தலைசிறந்து விளங்கும் தமிழ்நாடு: பட்டியல் போட்டு மாநில அரசு பெருமிதம்!

பல்வேறு சீர்மிகு திட்டங்களால்‌ கல்வித்‌ தரத்தில்‌ இந்தியாவிலேயே தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது என்று தமிழ்நாடு அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது.

திராவிட மாடல்‌ ஆட்சியில்‌ அரசுப்‌ பள்ளிகளில்‌ கல்வித்‌ தரத்தினை மேம்படுத்த ரூ.1,086 கோடியில்‌ 614 பள்ளிகளில்‌ 3,238 வகுப்பறைகள்‌, 21 அறிவியல்‌ ஆய்வகங்கள்‌, உள்கட்டமைப்புகள்‌ மேம்பாடு, ரூ.551.411 கோடியில்‌ 28,794 பள்ளிகளில்‌ திறன்மிகு வகுப்பறைகள்‌, ரூ.436.746 கோடியில்‌ 8,863 பள்ளிகளில்‌ உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள்‌, 20 இலட்சத்திற்கும்‌ மேற்பட்ட பள்ளிக்‌ குழந்தைகள்‌ பயனடையும்‌ காலை உணவுத்‌ திட்டம்‌, புதுமைப் பெண்‌ திட்டம்‌, தமிழ்ப்‌ புதல்வன்‌ திட்டம்‌, நான்‌ முதல்வன்‌ திட்டம்‌ போன்ற பல்வேறு சீர்மிகு திட்டங்களால்‌ கல்வித்‌ தரத்தில்‌ இந்தியாவிலேயே தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது என்று மத்திய அரசின்‌ உயர் கல்வித்துறை அமைச்சர்‌ பிற மாநிலங்களின்‌ புள்ளி விவரங்களை ஒப்பிட்டுப்‌ பாராட்டு தெரிவித்துள்ளதாக தமிழ்நாடு அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்துத் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

’’தமிழ்நாடு முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின்‌‌ 2021 இல்‌ முதலமைச்சராகப்‌ பொறுப்பேற்றது முதல்‌ தமிழ்நாட்டுக்‌ சூழந்தைகள்‌ ஒவ்வொருவரும்‌ தரமான உயர்ந்த கல்வி பெறவேண்டும்‌ எனப்‌ பல்வேறு புதிய திட்டங்களை உருவாக்கி வருகிறார்கள்‌.

பேராசிரியர்‌ அன்பழகன்‌ பள்ளி மேம்பாட்டுத்‌ திட்டம்‌

பள்ளிக்‌ கல்வித்‌துறையின்‌ வளர்ச்சிக்கென ரூபாய்‌ 7500 கோடி மதிப்பீட்டில்‌ பேராசிரியர்‌ அன்பழகனார்‌ பள்ளி மேம்பாட்டுத்‌ திட்டம்‌ என்ற மாபெரும்‌ திட்டத்தை 5 ஆண்டுகளில்‌ செயல்படுத்த அரசால்‌ அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி தமிழகத்தில்‌ அரசு உயர்நிலை மற்றும்‌ மேல்நிலைப்‌ பள்ளிகளில்‌கூடுதலாக வகுப்பறைகள்‌. ஆய்வகங்கள்‌. கழிவறைகள்‌, சுற்றுச்சுவர்கள்‌, மாணவ/ மாணவிகளுக்கு தங்கும்‌ விடுதிகள்‌ அமைக்க பள்ளிக்‌ கல்வி இயக்ககம்‌ மூலம்‌ 2022 2023ஆம்‌ நிதியாண்டில்‌ நபார்டு கடனுதவித்‌ திட்டம்‌ RIDF XXVIll-ன் கீழ், ரூ.813 கோடி செலவில்‌ 418 அரசு உயர்நிலை மற்றும்‌ மேல்நிலைப்‌ பள்ளிகளுக்கு 2394 கூடுதல்‌ வகுப்பறைகள்‌, 51 ஆய்வகங்கள்‌, 10 மாணவ/மாணவிகள்‌ தங்கும்‌ விடுதிகள்‌ ஏற்படுத்தவும்‌ ஒப்புதல்‌ அளிக்கப்பட்டுள்ளது.

மேலும்‌, 2023-24-ம்‌ நிதியாண்டில்‌ 173 அரசு உயர்நிலை / மேல்நிலைப்‌பள்ளிகளுக்கு ரூ.215.76 கோடி செலவில்‌ 844 கூடுதல்‌ வகுப்பறைகள்,‌ 21 அறிவியல்‌ ஆய்வகங்கள்,‌ 184 கழிப்பறைகள்‌ மற்றும்‌ 700 மீட்டர்‌ சுற்றுச்சுவர்‌ஏற்படுத்திட ஒப்புதல்‌ அளிக்கப்பட்‌டுள்ளது.

2023-24 ஆம்‌ ஆண்டிற்கு 23 அரசு உயர்நிலை மற்றும்‌ மேல்நிலைப்‌ பள்ளிகளுக்கு ரூ.58.61/- கோடி செலவில்‌ உட்கட்டமைப்பு வசதிகள்‌அளிக்கப்பட்டுள்ளது. 2024- 2025ம்‌ கல்வியாண்டில்‌ 440 அரசு உயர்நிலை மற்றும்‌ மேல்நிலைப்‌ பள்ளிகளுக்கு ரூ.745.27/- லட்சம்‌ செலவில்‌ உட்கட்டமைப்பு வசதிகள்‌ ஏற்படுத்துவது தொடர்பான கருத்துரு நபார்டு வங்கியின்‌ ஒப்புதலுக்காக அனுப்பப்பட்‌டுள்ளது.

2022 முதல்‌ 2024 வரை ஒப்பளிக்கப்பட்ட 614 பள்ளிகளுக்கு ரூ.4,086/- கோடி செலவில்‌ உட்கட்டமைப்பு பணிகள்‌ தொடங்கப்பட்டு பணிகள்‌ தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

உயர்‌ தொழில்நுட்ப ஆய்வகங்கள்‌

உயர்நிலை மற்றும்‌ மேல்நிலைப்‌ பள்ளிகளில்‌ நிறுவப்பட்ட உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள்‌ முக்கியமாக மதிப்பிடு, பயிற்சி மற்றும்‌ மொழி‌ ஆய்வக நோக்கங்களுக்காகப்‌ பயன்படுத்தப்படுகிறது. மேலும்‌ மாணவர்களுக்கான டிஜிட்டல்‌ உள்ளடக்க மதிப்பீடுகளை வழங்குவதற்கும்‌ அனைனத்துப்‌ பள்ளிகளிலும்‌ ஆசிரியர்களுக்கான திறனை வளர்ப்பதற்கும்‌ பயன்படுத்தப்படுகிறது.

2021-2024 ஆம்‌ ஆண்டில்‌ பாடநூல்‌ கழகம்‌ மற்றும்‌ கல்வி சேவை கழகம்‌ மூலம்‌ அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும்‌ மேல்நிலைப்‌ பள்ளிகளில்‌ மொத்தம்‌ ரூ.394.89 கோடியில்‌ 8209 உயர்‌ தொமில்நுட்ப ஆய்வகங்களை நிறுவுவதற்கான பணி ஆணைகள்‌ வெளியிடப்பட்டு பணிகள்‌ நடைபெற்று வருகிறது.

2024-25 ஆம்‌ ஆண்டில்‌, 654 அரசு உதவிபெறும்‌ மேல்நிலைப்‌ பள்ளிகளில்‌ உயர்‌ தொழில்நுட்ப ஆய்வகங்களை நிறுவ ரூ.41.856 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

திறன்மிகு வகுப்பறைகள்‌

மாணவர்களுக்கு கற்பித்தல்‌ மற்றும்‌ கற்றல்‌ செயல்முறையை எளிதாக்குவதற்கு திறன்மிகு வகுப்பறைகள்‌ பள்ளிகளில்‌ செயல்படுத்தப்படுகின்றன.

மாணவர்கள்‌ ஆடியோ மற்றும்‌ வீடியோவைப்‌ பார்க்கவும்‌ கேட்கவும்‌ மற்றும்‌தொழில்நுட்ப ரீதியாக அதிநவீன கற்றல்‌ மற்றும்‌ கற்பித்தல்‌ சூழலை உருவாக்கும்போது பாடப்‌ பொருட்கள்‌ மற்றும்‌ பாடநூல்‌ தொடர்பான கூறுகளை விரைவாகப்‌ புரிந்துகொள்வார்கள்‌. இது எதிர்காலக்‌ குறிப்புக்காக, அத்துடன்‌ உரைகள்‌. புகைப்படங்கள்‌, ஆடியோ மற்றும்‌ வீடியோ போன்ற பல்வேறு வடிவங்களில்‌ தகவல்களைப் பெற்று பாடப்‌ பொருள்களை எளிதாகப்‌ புரிந்துகொள்ளவும்‌ பெற்ற தகவல்களை தக்க வைத்துக்‌ கொள்ளவும்‌ உதவுகிறது.

2021-22ஆம்‌ ஆண்டில்‌ 865 உயர்நிலை மற்றும்‌ மேல்நிலைப்‌ பள்ளிகளில்‌ திறன்மிகு வகுப்பறைகள்‌ உருவாக்கிட ரூ.20.76 கோடியும்‌, 2022-23ஆம்‌ ஆண்டில்‌ 12,500 தொடக்கப்‌ பள்ளிக்கு ஸ்மார்ட்‌ வகுப்பறைகள்‌ உருவாக்கிட ரூ.230 கோடியும்‌, 2023-24ஆம்‌ ஆண்டில்‌ 7500 தொடக்கப்‌ பள்ளிகளுக்கு திறன்மிகு வகுப்பறைகள்‌ உருவாக்கிட ரூ150 கோடியும்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டு மொத்தம்‌ 20,865 அரசுப்‌ பள்ளிகளில்‌ திறன்மிகு வகுப்பறைகள்‌உருவாக்கப்பட்டு வருகின்றன.

2024-25 ஆம்‌ ஆண்டில்‌, 6,179 அரசு நடுநிலை / உயர்நிலை மற்றும்‌ மேல்நிலைப்‌ பள்ளிகளுக்கு திறன்மிகு வகுப்பறைகள்‌ அமைத்திட ரூ.117.401 கோடி மற்றும்‌ ரூ. 1,750 அரசு உதவிடுபறும்‌ தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்‌ பள்ளிகளுக்கு ஸ்மார்ட்‌ போர்டு வழங்க ரூ.33,250 கோடி அனுமதிக்கப்பட்டது. 2021-22 முதல்‌ 2024-25 வரை 28,794 பள்ளிகளில்‌ 551.411 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ திறன்மிகு வகுப்பறைகள்‌ அமைக்கும்‌ பணிகள்‌நடைபெறுகின்றன.

முதலமைச்சரின்‌ காலை உணவுத்‌ திட்டம்‌

முதலமைச்சரின்‌ காலை உணவுத்‌ திட்டம்‌ 15.9.2022 அன்று மதுரைத்‌திருநகரில்‌ தொடங்கிவைக்கப்பட்டு, 1,545 பள்ளிகளைச்‌ சேர்ந்த 1 இலட்சத்து 14 ஆயிரம்‌ குழந்தைகள்‌ பயன்பெற்றனர்‌.

திருக்குவளையில்‌ 25.8.2023 அன்று தமிழ்நாடு முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டு, 30 ஆயிரத்து 992 அரசுத்‌ தொடக்கப்‌ பள்ளிகளில்‌ பயிலும்‌18 இலட்சத்து 50 ஆயிரம்‌ குழந்தைகள்‌ பயன்பெற்று வருகின்றனர்‌.

இந்நிலையில்‌, இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில்‌ இத்திட்டம்‌ அரசு உதவி பெறும்‌ தொடக்கப்‌ பள்ளிகளுக்கும்‌ விரிவுபடுத்தப்படும்‌ எனஅறிவிக்கப்பட்டது.

அந்த அறிவிப்பினைச்‌ செயல்படுத்தும்‌ வகையில்‌ 15.7.2024 அன்று பெருந்தலைவர்‌ காமராஜர்‌‌ பிறந்த நாளில்‌, திருவள்‌ளூர்‌ மாவட்டம்‌ கடம்பத்தூர்‌ ஒன்றியம்‌, கீழச்சேரி கிராமத்தில்‌ உள்ள புனித அன்னாள்‌ அரசு உதவி பெறும்‌ தொடக்கப்‌ பள்ளியில்‌ முதலமைச்சரின்‌ காலை உணவுத்‌ திட்டத்தைத்‌ தமிழ்நாடு அரசின்‌ சார்பில்‌ தொடங்கிவைக்கப்பட்டு மாநிலம்‌ முழுவதும்‌ விரிவுபடுத்தப்பட்டது.

காலை உணவுத்‌ திட்டத்தின்‌ மூலம்‌ தற்போது தமிழ்நாடு முழுவதிலும் மொத்தம்‌ 20 இலட்சத்திற்கும்‌ மேற்பட்ட சூழந்தைகள்‌ காலை உணவைச்‌சூடாகவும்‌ சுவையாகவும்‌ உண்டு மகிழ்ச்சியோடு பள்ளிப்‌ பாடங்களில்‌ கவனம்‌ செலுத்தினர்‌.

காடு / மலைப்பகுதி குழந்தைகளுக்காகச்‌ சிறப்பு வசதி

காட்டுப்‌ பகுதிகளிலும்‌ மலைப்‌ பகுதிகளிலும்‌ பள்ளிகளுக்குச்‌ சென்று வருகின்ற குழந்தைகளுக்கு ஆபத்தான பல சிரமங்கள்‌ உள்ளன. அந்தச்‌ சிரமங்கள்‌ அனைத்தையும்‌ நீக்கிட முதலமைச்சர்‌ சில சிறப்பு ஏற்பாடுகளைச்‌ செய்துள்ளார்கள்‌.

2023-24 ஆம்‌ ஆண்டில்‌ தொலைதூர / அடர்ந்த காடு / மலைப்‌ பகுதிகளில்‌உள்ள 1692 குடியிருப்புகளைச்‌ சேர்ந்த தொடக்கநிலை முதல்‌ உயர்நிலை வரையில்‌ படிக்கும்‌ 27,707 மாணவர்கள்‌ பள்ளிக்குப்‌ பாதுகாப்பாகச்‌ சென்றுவர போக்குவரத்து பாதுகாவலர்களுடன்‌ வசதிகளையும்‌ எற்படுத்தினார்கள்‌. இதனால்‌, குழந்தைகள்‌ அச்சமில்லாமல்‌ பள்ளிகளுக்கு வந்து பயில்வது அப்பகுதி மக்களிடையே பெருத்த வரவேற்பைப்‌ பெற்றுள்ளது.

மாற்றுத்‌ திறன்‌ மாணவர்களுக்குத்‌ தனி கவனம்‌

முதலமைச்சர்‌ மாற்றுத்திறன்‌ கொண்ட மாணவர்களின்‌ கல்வி நலனில்‌ ஆசிரியர்கள்‌ மனிதாபிமானத்துடன்‌ தனி கவனம்‌ செலுத்த வேண்டும்‌ எனக்‌ கூறியுள்ளார்கள்‌. அதன்படி 1 முதல்‌ 5 ஆம்‌ வகுப்பு வரை பயிலும்‌ அறிவுசார்‌குறைபாடுள்ள மாற்றுத்திறன்‌ கொண்ட மாணவர்களின்‌ அடிப்படை எண்ணறிவு மற்றும்‌ எழுத்தறிவு திறன்களை உறுதிசெய்யும்‌ வகையில்‌ எளிமைப்படுத்தப்பட்டமாணவர்‌ பயிற்சி நூல்‌ மற்றும்‌ ஆசிரியர்‌ கையேடு போன்ற கற்றல்‌ கற்பித்தல்‌ உபகரணங்கள்‌ வடிவமைக்கப்பட்‌ ட வழங்கப்பட்டுள்ளன.

அரசுப்‌ பள்ளிகளில்‌ பயிலும்‌ மாணவர்களில்‌ மாற்றுத்திறன்‌ கொண்ட மாணவர்களைச்‌ சிறப்புப்‌ பயிற்றுநர்கள்‌ மூலம்‌ அடையாளம்‌ காணும்‌ வகையில்‌ "நலம் நாடி" என்னும்‌ செயலி ஒன்றும்‌ வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள்‌ நியமனம்‌

4,989 இடைநிலை ஆசிரியர்கள்‌ 5154 பட்டதாரி ஆசிரியர்கள்‌ 3,876 முதுகலை ஆசிரியர்களுக்கான மொத்தம்‌ 14,019 ஆசிரியர்‌ பணியிடங்களில்‌ தற்காலிக அடிப்படையில்‌ பள்ளி மேலாண்மைக்‌ குழுக்களின்‌ மூலம்‌ நியமனம்‌ செய்யப்பட்டு வகுப்பறைகளில்‌ கற்பித்தல்‌ பணி தடையின்றி மிகச்‌ சிறப்பாக நடைபெறுகிறது. ஆசிரியர்களுக்கு ஊக்கம்‌ அளிக்கும்‌ வகையில்‌ 76 நடுநிலைப்‌ பள்ளித்‌ தலைமை ஆசிரியர்களுக்கு வட்டாரக்‌ கல்வி அலுவலர்களாகப்‌ பதவி உயர்வுகள்‌ வழங்கப்பட்‌டுள்ளன.

இடைநிலை ஆசிரியர்களுக்கு கைக்‌ கணினிகள்‌

தொடக்கப்‌ பள்ளிகளில்‌ பணிபுரிந்து வரும்‌ 79,723 இடைநிலை ஆசிரியர்களுக்கு மாறிவரும்‌ கற்றல்‌ கற்பித்தல்‌ முறைகளுக்கு ஏற்பத்‌ தங்களைச்‌ சிறப்பாக மெருகேற்றிக்‌கொள்வதற்கு உதவும்‌ வகையில்‌ 101 கோடியே 48 இலட்சம்‌ ரூபாய்ச்‌ செலவில்‌ கைக்‌ கணினிகள்‌ (72014) வழங்க ஆவன செய்யப்பட்டுள்ளது.

நான்‌ முதல்வன்‌ திட்டம்‌

நான்‌ முதல்வன்‌ திட்டத்தின்‌ கீழ்‌ 9-12ஆம்‌ வகுப்பு வரை பயிலும்‌மாணவர்களுக்கு உயர்கல்வி தொழில்‌ மற்றும்‌ வேலைவாய்ப்புகள்‌ குறித்து வழிகாட்டுதல்கள்‌ வழங்கப்பட்டு, ஏறத்தாழ 10 இலட்சம்‌ மாணவர்கள்‌ பயனடைந்துள்ளனர்‌.

"தமிழ்நாடு முதலமைச்சர்‌ திறனாய்வுத்‌ தேர்வு"

"தமிழ்நாடு முதலமைச்சர்‌ திறனாய்வுத்‌ தேர்வு" மூலம்‌ 11-ஆம்‌ வகுப்பு பயிலும்‌ 1,000 மாணவ மாணவியர்‌ தேர்வு செய்யப்பட்டு ஊக்கத்‌ தொகையாக மாதம்‌ 1,000 ரூபாய்‌ வீதம்‌ இளநிலை பட்டப்படிப்பு வரை வழங்கப்படுகிறது.

மாணவ மாணவியர்களுக்கு மிதிவண்டிகள்‌

கிராமப்புற மாணவ மாணவிகள்‌ பள்ளிகளுக்கு உரிய நேரத்தில்‌ வந்து செல்வதற்கு வசதியாக 3,44144 பள்ளி மாணவ-மாணவியர்களுக்கு ரூ.165.84 கோடி செலவில்‌ இலவச மிதிவண்டிகள்‌ வழங்கப்பட்‌டுள்ளன.

புதுமைப்பெண்‌ - தமிழ்ப்‌ புதல்வன்‌ திட்டங்கள்‌

அரசுப்‌ பள்ளிகளிலும்‌, அரசு உதவி பெறும்‌ பள்ளிகளில்‌ தமிழ்‌ வழியிலும்‌ 6ஆம்‌ வகுப்பு முதல்‌ 12ஆம்‌ வகுப்பு வரை பயின்று பின்னர்‌ உயர்கல்வி பயிலும் மாணவியர்க்கு மாதம்‌ 1,000 ரூபாய்‌ வழங்கும்‌ "புதுமைப்‌ பெண்‌" திட்டம்‌, அதேபோல மாணவர்களுக்கும்‌ மாதம்‌ 1,000 ரூபாய்‌ வழங்கும்‌ "தமிழ்ப்‌ புதல்வன்‌" திட்டம்‌ ஆகியவற்றில்‌ ஏறத்தாழ 6 இலட்சத்திற்கும்‌ மேற்பட்ட மாணவ -மாணவியர்‌ பயன்பெறுகின்றனர்‌.

ஒன்றிய அரசின்‌ உயர் கல்வித்துறை அமைச்சரின்‌ பாராட்டு

டெல்லியில்‌ 13.8.2024 அன்று ஒன்றிய அரசின்‌ உயர்கல்வித்துறை அமைச்சர்‌ தர்மேந்திர பிரதான்‌ ‌ வெளியிட்டுள்ள தேசிய கல்வி நிறுவனங்களுக்கான தர வரிசைப்பட்டியலில்‌ (என்ஐஆர்எஃப்) இடம்‌ பெற்றுள்ள செய்திகள்‌ தமிழ்நாட்டின்‌ பெருமையை மேலும்மேலும்‌ உயர்த்தியுள்ளன.

அதாவது, தேசிய அளவில்‌ தர வரிசைப்படுத்தப்பட்ட 926 கல்லூரிகளில்‌ தமிழ்நாட்டைச்‌ சேர்ந்த கல்லூரிகள்‌ மட்டும்‌ 165. அதற்கு அடுத்த நிலைகளில்‌ டெல்லியில்‌ 88 கல்லூரிகள்‌, மகாராஷ்டிரத்தில்‌ 80 கல்லூரிகள்‌, கர்நாடாகாவில்‌ 78 கல்லூரிகள்‌, உத்திரப்பிரதேசத்தில்‌ 71 கல்லூரிகள்‌, அசாம்‌ மாநிலத்தில்‌ 15 கல்லூரிகள்‌, மத்தியப்‌ பிரதேசம்‌, சண்டிகர்‌, ஜார்கண்ட்‌, ஜம்மு-காஷ்மீர்‌ ஆகிய மாநிலங்களில்‌ தலா 12 கல்லூரிகள்‌ எனத்‌ தரவரிசைப்படுத்தப்பட்டு உயர்கல்வியில்‌ தலைசிறந்து விளங்குவது தமிழ்நாடு என்பதைத்‌ தெள்ளத்தெளிவாகக்‌ காட்டுகிறது.

புதுமைப்‌ பெண்‌ திட்டம்‌, தமிழ்ப்‌ புதல்வன்‌ திட்டம்‌, நான்‌ முதல்வன்‌ திட்டம்‌, திறன்மிகு வகுப்பறைகள்‌, உயர்தொமில்நுட்ப ஆய்வகங்கள்‌, காலை உணவுத்‌ திட்டம்‌, இடைநிலை ஆசிரியர்களுக்கு கைக்‌ கணினிகள்‌ இப்படிப்‌ பல்வேறு புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருவதன்‌ பயனாக அரசுப்‌ பள்ளிகளுக்கு வரும் மாணவ-மாணவியர்‌ எண்ணிக்கை உயர்ந்து, கல்வித்‌ தரத்தில்‌ இந்தியாவில் தமிழ்நாடு சிறந்த மாநிலமாக விளங்குகிறது’’.

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CBSE New Syllabus: 9 -12ஆம் வகுப்பு சிபிஎஸ்இ புது பாடத்திட்டம் வெளியீடு: என்னென்ன மாற்றங்கள்? பெறுவது எப்படி?
CBSE New Syllabus: 9 -12ஆம் வகுப்பு சிபிஎஸ்இ புது பாடத்திட்டம் வெளியீடு: என்னென்ன மாற்றங்கள்? பெறுவது எப்படி?
புதுச்சேரி தேர்தல் திருவிழா: ஏப்ரல் 7 முதல் பள்ளிகளுக்கு விடுமுறை - முழு விபரம் உள்ளே!
புதுச்சேரி தேர்தல் திருவிழா: ஏப்ரல் 7 முதல் பள்ளிகளுக்கு விடுமுறை - முழு விபரம் உள்ளே!
கன்டென்ட் கிரியேட்டர்களுக்கு அடித்த லக்; 15,000 பேருக்கு AI இலவச பயிற்சி- எதற்கு? எப்படி? விவரம்
கன்டென்ட் கிரியேட்டர்களுக்கு அடித்த லக்; 15,000 பேருக்கு AI இலவச பயிற்சி- எதற்கு? எப்படி? விவரம்
Class 12 Result: பிளஸ் 2 தேர்வில் 93.88% மதிப்பெண்- முடிவுகள் வெளியாகும் முன்னே பரிதாபமாக பலியான மாணவி
Class 12 Result: பிளஸ் 2 தேர்வில் 93.88% மதிப்பெண்- முடிவுகள் வெளியாகும் முன்னே பரிதாபமாக பலியான மாணவி
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

ஆதவ் கார் மோதி விபத்து! வலியால் துடித்த காவலர் உதவிய தவெக-வினர்
விடுதலை ஆன பொன்முடி.. கண்ணீர் விட்ட சிகாமணி! செம்மண் முறைகேடு வழக்கு
Vijay Copies MGR | அன்று MGR.. இன்று விஜய்! 2 தொகுதி போட்டி STRATEGY அரசியல் REWIND
Congress | காங்கிரஸில் நீயா நீனா போட்டி! பவரை கையில் எடுத்த ராகுல்! வேட்பாளர்கள் தாமதம் ஏன்?
வேட்பாளர் தேர்வில் இழுபறி..மாணிக்கம் தாகூர் திடீர் விலகல்!பரபரக்கும் காங்கிரஸ் கூடாரம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: விஜயின் வேட்புமனுவிலேயே கோளாறு..! ஃபார்ம் கூட ஃபில் பண்ண தெரியலயா? பெரம்பூரில் தள்ளுபடி?
TVK Vijay: விஜயின் வேட்புமனுவிலேயே கோளாறு..! ஃபார்ம் கூட ஃபில் பண்ண தெரியலயா? பெரம்பூரில் தள்ளுபடி?
Trump Iran War: “அமெரிக்கா அவமானப்பட்டு, இழிவுபட்டு, வருத்தப்பட்டு...“; ட்ரம்ப்புக்கு மெர்சல் காட்டிய ஈரான்
“அமெரிக்கா அவமானப்பட்டு, இழிவுபட்டு, வருத்தப்பட்டு...“; ட்ரம்ப்புக்கு மெர்சல் காட்டிய ஈரான்
CSK vs PBKS: சொந்த மண்ணில் கம்பேக் தருமா சிஎஸ்கே? பேட்டிங்கில் தேறுமா? வரிந்து கட்டும் பஞ்சாப் - வெற்றி யாருக்கு?
CSK vs PBKS: சொந்த மண்ணில் கம்பேக் தருமா சிஎஸ்கே? பேட்டிங்கில் தேறுமா? வரிந்து கட்டும் பஞ்சாப் - வெற்றி யாருக்கு?
“செந்தில் பாலாஜி என்றாலே செயல்வீரர், செயல்வீரர் என்றாலே செந்தில் பாலாஜி” - கோவை பிரச்சாரத்தில் புகழ்ந்து தள்ளிய முதல்வர் ஸ்டாலின்
“செந்தில் பாலாஜி என்றாலே செயல்வீரர், செயல்வீரர் என்றாலே செந்தில் பாலாஜி” - கோவை பிரச்சாரத்தில் புகழ்ந்து தள்ளிய முதல்வர் ஸ்டாலின்
Chennai Bus ; பேருந்து பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு !! காத்திருப்பு நேரம் குறைய புதிய திட்டம்
Chennai Bus ; பேருந்து பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு !! காத்திருப்பு நேரம் குறைய புதிய திட்டம்
Tamil Nadu New DGP: தமிழக தேர்தல் களம் பரபரப்பு! புதிய DGP நியமனம்: விஜய்க்கு பாதுகாப்பு குறைபாடு குற்றச்சாட்டு காரணமா?
தமிழக தேர்தல் களம் பரபரப்பு! புதிய DGP நியமனம்: விஜய்க்கு பாதுகாப்பு குறைபாடு குற்றச்சாட்டு காரணமா?
சிறுபான்மையினர் நிறுவனங்களை முடக்க சதி? ஏன் இந்த பிடிவாதம்? - மத்திய அரசுக்கு எதிராக கொந்தளித்த விஜய்
சிறுபான்மையினர் நிறுவனங்களை முடக்க சதி? ஏன் இந்த பிடிவாதம்? - மத்திய அரசுக்கு எதிராக கொந்தளித்த விஜய்
திமுக வேட்பாளர் சண். ராமநாதனுக்கு பெருகும் ஆதரவு: வல்லத்தில் தேர்தல் அலுவலகம் திறப்பு
திமுக வேட்பாளர் சண். ராமநாதனுக்கு பெருகும் ஆதரவு: வல்லத்தில் தேர்தல் அலுவலகம் திறப்பு
Embed widget