மேலும் அறிய

12th Answer Sheet Copy: பிளஸ் 2 மாணவர்களே... நாளை வெளியாகும் விடைத்தாள் நகல்- பெறுவது எப்படி?

மாணவர்கள் தங்களின்‌ விடைத்தாள்‌ நகலினை நாளை (மே 28) பிற்பகல்‌ முதல்‌ www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்குச்‌ சென்று பெறலாம். 

பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களுக்கு நாளை விடைத்தாள் நகல் வெளியாக உள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இதைப் பெறுவது எப்படி என்று காணலாம்.

இதுகுறித்து அரசுத்‌ தேர்வுகள்‌ இயக்ககம் தெரிவித்து உள்ளதாவது:

‘’மேல்நிலை இரண்டாமாண்டு தேர்வு, மார்ச் மாதம் நடைபெற்றது. இந்தத் தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியான நிலையில் விடைத்தாள்‌ நகல்‌ கோரி விண்ணப்பித்த மாணவர்களின்‌ விடைத்தாள்‌ நகலினை நாளை (மே 28) பிற்பகல்‌ முதல்‌ www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்குச்‌ சென்று பெறலாம். 

பெறுவது எப்படி?

தேர்வர்கள் Notification-ஐ Click செய்தவுடன்‌ HSE Second Year Exam, March 2024- Scripts Download" என்ற வாசகத்தினை "Click" செய்ய வேண்டும். அதில்‌ தோன்றும்‌ பக்கத்தில்‌ தங்களது பதிவெண்‌ மற்றும்‌ பிறந்த தேதியினைப்‌ பதிவு செய்து தாங்கள்‌ விண்ணப்பித்த பாடங்களுக்குரிய விடைத் தாள்களின்‌ நகலினைப்‌ பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்‌.

விடைத் தாள்களின்‌ நகலினை பதிவிறக்கம்‌ செய்த பிறகு மறுகூட்டல் அல்லது மறுமதிப்பிட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பினால்‌, இதே இணையதள முகவரியில்‌ “Application for Retotalling / Revaluation” என்ற தலைப்பினை க்ளிக் செய்து வெற்று விண்ணப்பத்தினைப்‌ பதிவிறக்கம்‌ செய்து கொள்ள வேண்டும்‌.

தேர்வர்கள்‌பதிவிறக்கம்‌ செய்யப்பட்ட விண்ணப்பப் ‌படிவத்தினை பூர்த்தி செய்து, அதனை மே 29 பிற்பகல்‌1.00 மணி முதல்‌ ஜூன் 1 வரையிலான நாட்களில்‌ மாலை 5.00 மணிக்குள்‌ சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத்‌ தேர்வுகள்‌ உதவி இயக்குநர்‌ அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். அங்கேயே மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீட்டுக்கான கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.

மாவட்ட அரசுத்‌ தேர்வுகள்‌ உதவி இயக்குநர்‌ அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலர்‌ அலுவலகத்திலும்‌ ஒப்படைக்க வேண்டும்‌.

 

தென்காசி, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர்‌, இராணிப்பேட்டை, மயிலாடுதுறை, செங்கல்பட்டு மாவட்டங்களில் சம்பந்தப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலர்‌ அலுவலகத்தில் விண்ணப்பப் படிவத்தை‌ ஒப்படைக்க வேண்டும்‌. மறுகூட்டல்‌ மற்றும்‌ மறுமதிப்பீட்டிற்கான கட்டணத்தினைப்‌ பணமாகச்‌ செலுத்த வேண்டும்‌.

மறுமதிப்பீடு

பாடம்‌ (ஒவ்வொன்றிற்கும்‌) - ரூ. 505/-

மறுகூட்டல்-

உயிரியல்‌ பாடம்‌ மட்டும்‌ - ரூ.305/-
ஏனைய‌ பாடங்கள்‌ (ஒவ்வொன்றிற்கும்‌) - ரூ.205/-’’

 

இவ்வாறு அரசுத் தேர்வுகள் இயக்ககம்  தெரிவித்துள்ளது.

கூடுதல் விவரங்களுக்கு: https://www.dge.tn.gov.in/

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

கே.ஜி. முதல் பி.ஜி. வரை; முழுவதும் இலவசக் கல்வி- வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கே.ஜி. முதல் பி.ஜி. வரை; முழுவதும் இலவசக் கல்வி- வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு
NEET UG 2026 Result: நீட் மறுதேர்வு முடிவுகள் ஜூலை 20-ல் வெளியீடு! மருத்துவக் கனவு நனவாகுமா?
NEET UG 2026 Result: நீட் மறுதேர்வு முடிவுகள் ஜூலை 20-ல் வெளியீடு! மருத்துவக் கனவு நனவாகுமா?
TNPSC Free Coaching: டிஎன்பிஎஸ்சி குரூப் 1, 2, 4 போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி; பங்கேற்பது எப்படி?
டிஎன்பிஎஸ்சி குரூப் 1, 2, 4 போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி; பங்கேற்பது எப்படி?
தமிழை உலக அரங்கிற்கு கொண்டு செல்வது எப்படி? மயிலாடுதுறை ஏ.வி.சி கல்லூரியின் அசத்தல் பயிலரங்கம்!
தமிழை உலக அரங்கிற்கு கொண்டு செல்வது எப்படி? மயிலாடுதுறை ஏ.வி.சி கல்லூரியின் அசத்தல் பயிலரங்கம்!

வீடியோ

DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை
நிர்மலா Out சக்திகாந்த தாஸ் IN 5 மத்திய அமைச்சர்கள் நீக்கம்? மோடியின் புதிய அமைச்சரவை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
‘Edappadi Palanisamy : போறவங்க போங்க’ மதிமுக மாதிரி அதிமுக நடத்திக்குறேன் – தில் எடப்பாடி..!
‘மதிமுக மாதிரி அதிமுகவை நடத்திகிறேன்’ தில் எடப்பாடி..!
DMK Paranthamen : ’ஓரங்கட்டப்பட்ட சேகர்பாபு, லைம் லைட்டுக்கு வந்த பரந்தாமன்’ திமுகவில் அதிரடி மாற்றம்..!
’ஓரங்கட்டப்பட்ட சேகர்பாபு’ முன்னேறி வந்த பரந்தாமன் !
NEET UG 2026 Result: நீட் மறுதேர்வு முடிவுகள் ஜூலை 20-ல் வெளியீடு! மருத்துவக் கனவு நனவாகுமா?
NEET UG 2026 Result: நீட் மறுதேர்வு முடிவுகள் ஜூலை 20-ல் வெளியீடு! மருத்துவக் கனவு நனவாகுமா?
கூட்டுறவு கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படுமா? சௌமியா அன்புமணி அதிரடி கோரிக்கை
கூட்டுறவு கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படுமா? சௌமியா அன்புமணி அதிரடி கோரிக்கை
மாருதி, எம்ஜி, நிசான்: ஜூலையில் இந்தியாவை அதிரவைக்கும் புதிய எஸ்யூவிகள்!
மாருதி, எம்ஜி, நிசான்: ஜூலையில் இந்தியாவை அதிரவைக்கும் புதிய எஸ்யூவிகள்!
Chennai Power Cut: சென்னையில ஜூலை 3-ம் தேதி (03.07.2026) ஏகப்பட்ட இடங்கள்ல மின் தடை இருக்கு; பார்த்து பிளான் பண்ணுங்க
சென்னையில ஜூலை 3-ம் தேதி (03.07.2026) ஏகப்பட்ட இடங்கள்ல மின் தடை இருக்கு; பார்த்து பிளான் பண்ணுங்க
TNPSC Free Coaching: டிஎன்பிஎஸ்சி குரூப் 1, 2, 4 போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி; பங்கேற்பது எப்படி?
டிஎன்பிஎஸ்சி குரூப் 1, 2, 4 போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி; பங்கேற்பது எப்படி?
TN PONGAL GIFT : தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசு.! ரூ.300 கோடி ஒதுக்கி அசத்திய தவெக அரசு - வெளியான அரசாணை
தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசு.! ரூ.300 கோடி ஒதுக்கி அசத்திய தவெக அரசு - வெளியான அரசாணை
Embed widget