TN 12th Result Karur: கரூர் பிளஸ் 2 ரிசல்ட்.. ‘எதிர்பார்த்ததை விட அதிக மதிப்பெண்’ - மகிழ்ச்சியில் மாணவர்கள்
Tamil Nadu 12th Result 2023 Updates: கரூர் மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு பொது தேர்வில் 94.31 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்.
![TN 12th Result Karur: கரூர் பிளஸ் 2 ரிசல்ட்.. ‘எதிர்பார்த்ததை விட அதிக மதிப்பெண்’ - மகிழ்ச்சியில் மாணவர்கள் Tamil Nadu 12th Result 2023 Karur HSC Results Higher Than Expected-TNN TN 12th Result Karur: கரூர் பிளஸ் 2 ரிசல்ட்.. ‘எதிர்பார்த்ததை விட அதிக மதிப்பெண்’ - மகிழ்ச்சியில் மாணவர்கள்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/08/efc9579e32ed4052e86c9f2738431c3d1683536039811183_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழ்நாடு முழுவதும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளுக்கு தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணியளவில் வெளியானது. இந்த நிலையில் கரூரில் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் ஏராளமானோர் நேரடியாக பள்ளிக்கு வருகை தந்து, தங்களது தேர்வு முடிவுகளை ஆன்லைன் மூலம் பார்த்து செல்கின்றனர். இதில் ஏராளமான மாணவர்கள் தாங்கள் எதிர்பார்த்ததை விட அதிக மதிப்பெண் கிடைத்துள்ளதாக தெரிவித்தனர்.
இந்த மகிழ்ச்சியை சக நண்பர்களுடன் இணைந்து உற்சாகத்துடன் துள்ளி குதித்து தங்களது சந்தோஷத்தை கொண்டாடினர்.
கரூர் மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு பொது தேர்வில் 94.31 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி அடைந்தனர். 4768 மாணவர்களும், 5436 மாணவிகள் என மொத்தம் 10,204 பேர் தேர்வு எழுதினர். இதில் 4385 மாணவர்கள், 5238 மாணவிகள் என மொத்தம் 9623 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 91.97 சதவீதம், மாணவிகள் தேர்ச்சி விகிதம் 96.36 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
வெளியானது தேர்வு முடிவுகள்
அதன்படி மே 8 ஆம் தேதியான இன்று காலை 9.30 மணிக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிட்டார். மாணவ, மாணவிகள் தேர்வு முடிவுகளை www.dge1.tn.nic.in , www.dge2.tn.nic.in , www.dge.tn.gov.in , www.tnresults.nic.in ஆகிய இணையதளங்கள் வழியாகத் தெரிந்து கொள்ள என கூறப்பட்டுள்ளது. இப்படியான நிலையில் வழக்கம்போல மாணவர்களை விட, மாணவிகளே இந்தாண்டும் அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சதமடித்த மாணவ, மாணவிகள்
- தமிழ் - 2
- ஆங்கிலம் - 15
- இயற்பியல் - 812
- வேதியியல் - 3, 909
- உயிரியல் - 1,494
- கணிதம் - 690
- தாவிரவியல் - 340
- விலங்கியல் - 154
- கணினி அறிவியல் - 4,618
- வணிகவியல் - 5,578
- கணக்குப் பதிவியல் - 6,573
- பொருளியல் - 1,760
- கணினிப் பயன்பாடுகள் - 4,051
- வணிக கணிதம் மற்றும் புள்ளியியல் - 1,334
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)