TN 12th Result 2022: 12-ஆம் வகுப்பில் 93.76% மாணவ, மாணவியர் தேர்ச்சி.. வெளியானது தேர்வு முடிவுகள்..
TN 10th 12th Result 2022: 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார்.
12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மே 5ம் தேதி தொடங்கி மே 28ம் தேதி தேர்வு முடிவடைந்தது. இதையடுத்து, 12ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஜூன் 20-ந் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. காலையில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வௌியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், பொதுத்தேர்வு முடிவுளை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு விழா நூலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். அவருடன் பள்ளிக்கல்வித்துறை இயக்குனரும் உடனிருந்தார்.
பிளஸ் 2 தேர்வு எழுதிய 9.12 லட்சம் மாணவர்களில் 8.21 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில்12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 93.67 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 90.07 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.
தேர்வு முடிவுகளை மாணவர்கள் தெரிந்து கொள்ள ஏதுவாக கீழ்க்கண்ட இணையதளங்கள் மூலமாக www.tnresults.nic.in , www.dge1.tn.nic.in , www.dge2.tn.nic.in , www.dge.tn.gov.in வெளியிட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மேலும், தேர்வு முடிவுகளை எளிதில் தெரிந்து கொள்ள ஏதுவாக பள்ளிகளில் மாணவர்கள் வழங்கிய செல்போன் எண்களுக்கு குறுஞ்செய்தி மூலமாகவும் அனுப்பப்பட்டுள்ளது.
12ம் வகுப்பு பொதுத்தேர்வை மொத்தமாக 8 லட்சத்து 6 ஆயிரத்து 277 மாணவர்கள் எழுதியுள்ளனர். தேர்வெழுதிய மாணவியர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 21 ஆயிரத்து 622 பேர் ஆகும். மாணவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 84 ஆயிரத்து 655 ஆகும். இவர்களில் 7 லட்சத்து 55 ஆயிரத்து 998 ஆகும். அதாவது 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 93.76 சதவீதம் ஆகும்.
தேர்வெழுதிய மாணவியர்களில் 4 லட்சத்து 6 ஆயிரத்து 105 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 96.32 சதவீதம் ஆகும். மாணவர்களை விட மாணவியர்கள் 5.36 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம் 7 ஆயிரத்து 499 மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர். இவற்றில் 2 ஆயிரத்து 628 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் மொத்தம் 246 அரசுப்பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை பதிவு செய்துள்ளனர்.
மேலும் படிக்க : TN 10th Result District Wise 2022: 10ம் வகுப்பு தேர்ச்சி விகிதம்! மாவட்ட வாரியாக முழு விவரம்!
மேலும் படிக்க : TN 12th Result District Wise 2022: எந்த மாவட்டம் கெத்து? 12ம் வகுப்பு தேர்ச்சி விகிதங்கள்! மாவட்ட வாரியாக முழு விவரம்!!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்