மேலும் அறிய

CM Vijay: 10ஆம் வகுப்பு தேர்வு முடிவு, பள்ளிகள் திறப்பு எப்போது? முதல்வர் விஜய் ஆலோசனை

முதலமைச்சர் விஜய் தலைமையில் பள்ளி கல்வித்துறை சார்பான ஆலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் (மே 20ஆம் தேதி) வெளியாகும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்படு இருந்த நிலையில் அதுகுறித்தும் கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் திறப்பு பற்றியும் முதல்வர் விஜய் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் ஏற்கெனவே திட்டமிட்ட வகையில் மே 8ஆம் தேதி அன்று வெளியாகின. மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, புதிய அரசு ஆட்சியமைக்கும் முன்னரே திட்டமிட்ட தேதியில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. முதல் முறையாக வாட்ஸ் அப் மூலம் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளும் வசதியும் செய்யப்பட்டு இருந்தது.

10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் எப்போது?

இந்த நிலையில், மே 20ஆம் தேதி 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் திட்டமிட்ட தேதிகளில் தேர்வு முடிவுகளை வெளியிடுவது குறித்து பள்ளிக் கல்வித்துறை ஆய்வு மேற்கொண்டு வருகிறது.

அதேபோல கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் ஜூன் 3ஆம் தேதி திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில் பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகுமா அல்லது திட்டமிட்ட தேதியில் திறக்கப்படுமா என்று கேள்வி எழுந்துள்ளது.

முதலமைச்சர் விஜய் தலைமையில் ஆலோசனை

இதுதொடர்பாக முதலமைச்சர் விஜய் தலைமையில் பள்ளி கல்வித்துறை சார்பான ஆலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இதில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், துறை சார் உயர் அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர்.

ஆலோசனைக்குப் பிறகு உரிய முடிவுகள் எடுக்கப்பட்டு, அறிவிக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

வெளியான 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்; மார்க் ஷீட் பெறுவது எப்படி? மறுகூட்டல், மறுமதிப்பீடு விவரம்!
வெளியான 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்; மார்க் ஷீட் பெறுவது எப்படி? மறுகூட்டல், மறுமதிப்பீடு விவரம்!
பள்ளிக் கல்விக்கு தவெக ஆட்சியில் நிதி குறைப்பா? நடந்தது இதான்- அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்
பள்ளிக் கல்விக்கு தவெக ஆட்சியில் நிதி குறைப்பா? நடந்தது இதான்- அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: மாணவர் தங்கும் விடுதிகள்; மதுரையில் சிறப்பு சட்டக்கல்லூரி- உயர் கல்வித்துறைக்கு என்னென்ன அறிவிப்புகள்?
TN Budget 2026: மாணவர் தங்கும் விடுதிகள்; மதுரையில் சிறப்பு சட்டக்கல்லூரி- உயர் கல்வித்துறைக்கு என்னென்ன அறிவிப்புகள்?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பொன்முடியை கைது செய்து நேரில் ஆஜர் படுத்துங்க.! நீதிபதி அதிரடி உத்தரவு- என்ன காரணம்.?
பொன்முடியை கைது செய்து நேரில் ஆஜர் படுத்துங்க.! நீதிபதி அதிரடி உத்தரவு- என்ன காரணம்.?
CM Vijay: தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
Agriculture Budget : வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
Kia Offers: அதிரடி தள்ளுபடிகளை அள்ளிக் கொடுத்த கியா; எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு விலை குறைப்பு?
Kia Offers: அதிரடி தள்ளுபடிகளை அள்ளிக் கொடுத்த கியா; எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு விலை குறைப்பு?
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
Kia Carens: ஆகஸ்ட் அதிரடி- கியா கேரன்ஸ் கிளாவிஸ், EV-க்கு ரூ.1.2 லட்சம் சலுகைகள்!
Kia Carens: ஆகஸ்ட் அதிரடி- கியா கேரன்ஸ் கிளாவிஸ், EV-க்கு ரூ.1.2 லட்சம் சலுகைகள்!
Gold and silver rate today : சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
பட்ஜெட் விலையில் பிரீமியம் பைக்குகள்: அட்டகாச லுக்கில் மிடில் கிளாஸுக்கு ஏத்த மாஸ் பைக்ஸ் என்ன?
பட்ஜெட் விலையில் பிரீமியம் பைக்குகள்: அட்டகாச லுக்கில் மிடில் கிளாஸுக்கு ஏத்த மாஸ் பைக்ஸ் என்ன?
Embed widget