(Source: ECI/ABP News/ABP Majha)
10th Plus 2 Exam Date: 10, ப்ளஸ் 2 பொதுத்தேர்வுகள் தேதி இன்று மாலை அறிவிப்பு..
தமிழ்நாட்டில் 10 மற்றும் ப்ளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தேதி இன்று மாலை அறிவிக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் 10 மற்றும் ப்ளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தேதி இன்று மாலை அறிவிக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல் தெரிவித்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக 10 மற்றும் ப்ளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறாதநிலையில் இந்த ஆண்டு தேர்வு நடத்த தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்துள்ளது.
மேலும் படிக்க: காமெடியன் Vs உளவாளி : ரஷ்யா- உக்ரைன் போருக்கு காரணமான 2 பேர்!
முன்னதாக, கடந்த ஜனவரி மாதம் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கடந்த மார்ச் மாதம் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களும் தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். அதற்கு முந்தைய கல்வியாண்டில் 1 முதல் 10 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர்.
#BREAKING 10,+2 பொதுத்தேர்வு தேதி இன்று மாலை அறிவிப்பு: பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ்https://t.co/wupaoCzH82 #10thStdExams #12thStdExams
— ABP Nadu (@abpnadu) February 25, 2022
கொரோனாவால் மாணவர்களின் கல்வி, குறிப்பாக தேர்வு எழுதும் பழக்கம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த ஆண்டு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெறுமா என்ற கேள்வி இருந்தது. இந்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள 15-18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தி வருவதால், 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு கட்டாயம் நேரடி பொதுத்தேர்வு நடைபெறும் என்று தெரிவித்தார்.
அதேபோல், பிற வகுப்புகளுக்கு ஏப்ரல் கடைசி வாரத்திலோ அல்லது மே முதல் வாரத்திலோ பள்ளி பொதுத்தேர்வுகள் நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்