TN 10th Result Centums: தாய்மொழியை தவறவிட்ட மாணவர்கள்! 10 ஆம் வகுப்பு தேர்வில் எத்தனை பாடத்தில் எத்தனை பேர் சதம்?
Tamil Nadu 10th Result 2023 Centum Scorers: 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில் இதில் எத்தனை மாணவ, மாணவிகள் பாடவாரியாக முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளார்கள் என்ற விவரத்தை காணலாம்.
Tamil Nadu 10th Result 2023 Centum Scorers: 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில் இதில் எத்தனை மாணவ, மாணவிகள் பாடவாரியாக முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளார்கள் என்ற விவரத்தை காணலாம்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. தேர்வுகள் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி தொடங்கி, மே 20 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதனை தமிழ்நாடு, புதுச்சேரியில் மட்டும் சுமார் 9,38,291 மாணவ, மாணவிகள் எழுதியிருந்தனர். முதலில் 10 ஆம் வகுப்பு முடிவுகள் மே 17 ஆம் தேதி வெளியிடப்படுவதாக இருந்தது.
அதற்கேற்ப விடைத்தாள் திருத்தும் பணி கடந்த ஏப்ரல் 25 ஆம் தேதி தொடங்கி மே 3 ஆம் தேதி வரை விறுவிறுப்பாக நடைபெற்றது. 83 தேர்வு முகாம்களில் நடைபெற்ற இந்த பணியில் சுமார் 60,000 ஆசிரியர்கள் ஈடுபட்டனர். இதனையடுத்து மதிப்பெண்கள் இணையதளத்தில் பதிவேற்றும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் மே 19 ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும் என தேதி மாற்றியமைக்கப்பட்டது.
இப்படியான நிலையில் திட்டமிட்டபடி 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில் 9,14,,320 பேர் தேர்வு எழுதிய நிலையில் 4,04,904 மாணவர்களும், 4,30,710 மாணவியர்களும் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். தேர்வு எழுதியவர்கள் www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் வாயிலாக தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றைக் கொண்டு முடிவுகளை காணலாம்.
தேர்வு முடிவுகளை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டார். அதேசமயம் தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தி மூலம் தேர்வர்கள் பதிவு செய்துள்ள தொலைபேசி எண்ணுக்கு அனுப்பி வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தேர்வு முடிவுகளை பார்வையிட்ட மாணவ, மாணவியர்கள் தாங்கள் பெற்ற மதிப்பெண்களைப் பார்த்து மகிழ்ச்சியடைந்தனர். மேலும் தங்கள் மகிழ்ச்சியை குடும்பத்தினரிடமும், சக நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டனர்.
பாடங்கள் வாரியாக முழு மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியர்கள் விவரம்
- தமிழ் - யாருமில்லை
- ஆங்கிலம் - 89 பேர்
- கணிதம் - 3649 பேர்
- அறிவியல் - 3584 பேர்
- சமூக அறிவியல் - 320 பேர்