TN 10th 12th Result 2022 LIVE: பிளஸ் 2 தேர்வில் 93.76 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி..!
Tamil Nadu 10th 12th Result 2022 LIVE Updates: 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவு விவரங்களை உடனுக்குடன் ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் கீழே காணலாம்.

Background
10, 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியாகும் நிலையில், குறைந்தபட்சத் தேர்ச்சி மதிப்பெண்களாக தலா 35 மதிப்பெண்கள் உள்ளன.
கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக பொதுத்தேர்வுகள் நடத்த முடியாமல் போனது. தற்போது கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதால், இந்தாண்டு அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வுகள் நடத்தப்பட்டன. குறிப்பாக 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.
இதில்,12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மே 5ஆம் தேதி தொடங்கி மே 28ஆம் தேதி தேர்வு முடிவடைந்தது. தனிடையே 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களைத் திருத்தும் பணி ஜூன் 1 ஆம் தேதி தொடங்கியது. இந்த விடைத்தாள்கள் முடிக்கும் பணி ஜூன் 9 ஆம் தேதி நிறைவடைந்தது.
மாறிய தேதிகள்
இந்த நிலையில் 10 ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் முன்கூட்டியே வெளியாகின்றன. இரண்டு தேர்வு முடிவுகளும் ஜூன் 20ஆம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசுத் தேர்வுகள் இயக்ககம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதன்படி, நாளை (ஜூன் 20ஆம் தேதி) காலை 9.30 மணிக்கு 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன. நண்பகல் 12 மணிக்கு 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன. இந்நிலையில், 10ஆம் வகுப்பில் உள்ள 5 பாடங்களிலும் ஒவ்வொரு பாடத்திலும் 35 சதவீத மதிப்பெண்களைப் பெற வேண்டியது அவசியம். அதாவது 100க்குத் தலா 35 மதிப்பெண்களைப் பெற வேண்டியது அவசியம். அதேபோல, 12ஆம் வகுப்பில் உள்ள 6 பாடங்களிலும் ஒவ்வொரு பாடத்திலும் தலா 35 சதவீத மதிப்பெண்களைப் பெற வேண்டியது அவசியம்.
முன்னதாக 2021ஆம் ஆண்டு கொரோனா காரணமாக 10ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்பட்டது. 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முந்தைய தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. குறிப்பாக 10ஆம் வகுப்பு மதிப்பெண்களில் இருந்து 50 சதவீத மதிப்பெண்களும், 11ஆம் வகுப்பு மதிப்பெண்களில் இருந்து 20 சதவீத மதிப்பெண்களும், 12ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வு மற்றும் அக மதிப்பீட்டில் இருந்து 30 சதவீத மதிப்பெண்களும் வழங்கப்பட்டு மொத்த மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிக்கலாம்: TN 10th Result 2022: 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண்களை அறிவது எப்படி?- முழு விவரம்
TN 12th Result 2022: புதிய தேதியில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: தெரிந்துகொள்வது எப்படி?- முழு விவரம்..
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
எஸ்எஸ்எல்சி (SSLC) தேர்வைப் புறக்கணித்த மாணவர் எண்ணிக்கை, 2 மடங்கு அதிகரிப்பு.. அதிரவைத்த தகவல்
அதிர்ச்சி.. எஸ்எஸ்எல்சி (SSLC) தேர்வைப் புறக்கணித்த மாணவர் எண்ணிக்கை, 2 மடங்கு அதிகரிப்பு.. அதிரவைத்த தகவல்https://t.co/G6M5rIvjMA#TN10thResults #Class10Results
— ABP Nadu (@abpnadu) June 20, 2022
நெல்லையில் மாணவர்களை காட்டிலும் மாணவிகளே தேர்ச்சி அதிகம்
நெல்லையில் மாணவர்களை காட்டிலும் மாணவிகளே தேர்ச்சி அதிகம்#Nellai #10thresults #12thResults https://t.co/fuyKZlSV7g
— ABP Nadu (@abpnadu) June 20, 2022





















