SSC Recruitment 2022: ஸ்டாஃப் செலக்ஷன் கமிஷன் தேர்வுகளுக்கான விண்ணப்பம்.. இன்றே கடைசி!
நாடு முழுவதும் மொத்தம் 2065 காலி பணியிடங்கள் இதன் மூலம் நிரப்பப்படும்.
2022ம் ஆண்டுக்கான ஸ்டாஃப் செலக்ஷன் கமிஷன் (SSC) தேர்வு போஸ்ட் ஃபேஸ் ஆன்லைன் அப்ளிகேஷன் பதிவு இன்றுடன் (ஜூன் 13, 2022) முடிவடைகிறது. விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான ssc.nic.in மூலம் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் விண்ணப்பம் 2022 மே 12 ஆம் தேதி தொடங்கியது. இந்த ஆட்சேர்ப்பு பதிவின் மூலம் நாடு முழுவதும் மொத்தம் 2065 காலியிடங்கள் நிரப்பப்படும். 2022 ஜூன் 20 முதல் 2022 ஜூன் 24 வரை விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தில் மாற்றங்களைச் செய்யலாம். கணினி அடிப்படையிலான சோதனை 2022 ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.
Tentative Annual Calendar of Examinations for the year 2021-22 #ssc #ssc_official #ssc_2021_exams_calendar @ssc_official__ #ssc_exam_calendar pic.twitter.com/v1KCBfR1ZK
— staff selection commission of India (@ssc_official__) May 31, 2022
ஸ்டாஃப் செலக்ஷன் கமிஷன் தேர்வு போஸ்ட் ஃபேஸ் ஆட்சேர்ப்பு 2022க்கான முக்கியமான தேதிகள் கீழ்வருமாறு:
ஆன்லைன் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்படும் தேதிகள்: மே 12 முதல் ஜூன் 13 வரை
ஆன்லைன் விண்ணப்பங்கள் பெறுவதற்கான கடைசி தேதி மற்றும் நேரம்: ஜூன் 13 (இரவு 11:00 மணி வரை)
ஆன்லைனில் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி மற்றும் நேரம்: ஜூன் 15 (இரவு 11:00 மணி வரை)
ஆஃப்லைன் சலானை உருவாக்குவதற்கான கடைசி தேதி மற்றும் நேரம்: ஜூன் 16 (இரவு 11:00 மணி வரை)
சலான் மூலம் பணம் செலுத்துவதற்கான கடைசி தேதி (வங்கியின் வேலை நேரத்தில்): ஜூன் 18
ஜூன் 20 முதல் ஜூன் 24 வரை (இரவு 11:00 மணி வரை) ஆன்லைன் கட்டணம் உட்பட ‘விண்ணப்பப் படிவத் திருத்தத்திற்கான சாளரம் திறந்திருக்கும்.
கணினி அடிப்படையிலான தேர்வு தேதிகள்: ஆகஸ்ட் 2022
நாடு முழுவதும் மொத்தம் 2065 காலி பணியிடங்கள் இதன் மூலம் நிரப்பப்படும்.
விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். இடஒதுக்கீட்டிற்குத் தகுதியான பட்டியல் சமூக மக்கள் (SC), பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் (ST), மாற்றுத் திறனாளிகள் (PwD), மற்றும் முன்னாள் படைவீரர்கள் (ESM) ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த பெண்கள் மற்றும் விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
"செலக்ஷன் கமிஷன் காலிப் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு, கணினி அடிப்படையிலான தேர்வு மூலம் நடத்தப்படும், மல்டிபிள் சாய்ஸ் வகைக் கேள்விகளைக் கொண்டதாக இருக்கும்" என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு கூறுகிறது. பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கல்வித் தகுதியைச் சரிபார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.