மேலும் அறிய
சிவகங்கை மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் சார்ந்த சான்றிதழ் படிப்புகளில் தகுதிப் பட்டியல் வெளியீடு !
தகுதிப் பட்டியலில் இடம் பெற்றுள்ள மாணாக்கர்கள் தங்களது அசல் சான்றிதழ் மற்றும் நகல்களுடன் வர அறிவுருத்தப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியர்
Source : whats app
மருத்துவம் சார்ந்த சான்றிதழ் படிப்புகளில் காலியாகவுள்ள டெக்னீஷியன் இடங்களுக்கான பெறப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில், தகுதிப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
மருத்துவம் சார்ந்த சான்றிதழ் படிப்புகள்
சிவகங்கை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியில், 2025-2026 ஆம் கல்வியாண்டிற்கான மருத்துவம் சார்ந்த சான்றிதழ் படிப்புகளில் காலியாகவுள்ள 18 மயக்க மருந்து டெக்னீஷியன் மற்றும் 19 தியேட்டர் டெக்னீஷியன் இடங்களை, மாவட்ட அளவில் நிரப்புவதற்கான சேர்க்கைக்கு பெறப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில், இன்றைய தினம் (16.09.2025) சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி, தகுதிப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
கல்லூரி அறிவிப்பு பலகை வாயிலாகவும் அறிந்து கொள்ளலாம்
மேலும், அத்தகுதிப் பட்டியல் தொடர்பான விபரங்கள் www.gsmch.ac.in என்ற இணையதளத்தின் வாயிலாகவும், மாவட்ட ஆட்சியர் அலுவலக அறவிப்பு பலகை மற்றும் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி அறிவிப்பு பலகை வாயிலாகவும் அறிந்து கொள்ளும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அசல் சான்றிதழ் மற்றும் நகல்களுடன் கொண்டுவரவேண்டும்
தகுதிப் பட்டியலில் இடம் பெற்றுள்ள மாணாக்கர்கள் தங்களது அசல் சான்றிதழ் மற்றும் நகல்களுடன் வருகின்ற 20.9.2025ஆம் தேதிக்குள் முதல்வர், சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி என்ற முகவரியில் நேரில் அணுகி சேர்க்கை பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி,தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வின் போது, சிவகங்கை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியின் முதல்வர் மரு.சீனிவாசன் மற்றும் சிவகங்கை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியின் துணை முதல்வர் ஆகியோர் உடனிருந்தனர்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )
சமீபத்திய கல்வி செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் கல்வி செய்திகளைத் ( Tamil Education News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















