மேலும் அறிய

மதுரை மேயர் கணவர் பொன்வசந்த் ஜாமீன் மனு தள்ளுபடி! சாட்சிகளை கலைக்க கூடும் என கருத்து !

தற்போது  ஜாமின் வழங்கினால் அனைத்து சாட்சிகளையும் கலைக்க கூடிய வாய்ப்பு உள்ளது, எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மதுரை  மாநகராட்சியில் வரி முறைகேடு வழக்கில் மதுரை மேயரின் கணவர் பொன்வசந்த் , ஜாமீன் கோரி  தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் கிளை உத்தரவு.
 
நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்க வேண்டும் 
 
மதுரை மாநகராட்சி மேயரின் கணவர் பொன் வசந்த், தனக்கு ஜாமீன் வழங்க கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில்..,” மதுரை மாநகராட்சியில் வரி முறைகேடு தொடர்பான வழக்கில், ஆகஸ்ட் 12 ஆம் தேதி கைது செய்யப்ப ட்டு, தற்பொழுது வரை நீதிமன்ற காவலில் உள்ளேன். நான் நிரபராதி, என் மீது குற்றம் சாட்டியது போல் எந்த குற்றத்தையும் செய்யவில்லை . என்றும், முன்  விரோதம் காரணமாக தனது பெயர் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளது, எனது பெயர் FIR-ல் சேர்க்கப்படவில்லை. புகார் அளித்து வழக்கை பதிவு செய்வதில் மிகுந்த தாமதம் ஏற்பட்டுள்ளது. உடல் நிலை மோசமாக உள்ளது. நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்க வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.
 
35 நாட்கள் நீதிமன்ற காவலில் உள்ளார்
 
இந்த மனு நீதிபதி ஸ்ரீமதி முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் திறப்பு வழக்கறிஞர் கூறுகையில்..,” வேண்டுமென்றே சிக்க வைக்கப்பட்டுள்ளார். 35 நாட்கள் நீதிமன்ற காவலில் உள்ளார். உடல்நல குறைபாடால்  அவசர சிகிச்சையில் சிகிச்சை பெற்று வருகிறார். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவோம். இந்த வழக்கில் தொடர்புடைய பலர்  ஜாமினில் உள்ளனர். இவருக்கு மட்டும் ஜாமீன் வழங்காமல் இருப்பது ஏற்புடையதல்ல, என வாதிட்டார்.
 
ஜாமீன் வழங்கக் கூடாது என்று கடும் எதிர்ப்பு
 
அப்போது, அரசு தரப்பு வழக்கறிஞர் கூறுகையில், தொடக்கத்தில் 33 கட்டடங்களுக்கு வரிகுறிப்பு செய்தார் என குற்றச்சாட்டு இருந்தது. ஆரப்பாளையம் பகுதியில் உள்ள ஒரு  ஓட்டலுக்கு  ரூ. 75 லட்சம் ரூபாய் வரி குறைப்பு செய்து வரியில்லாமல் செய்துள்ளார், இதனால் சுயநலமாக பல லட்சங்கள் பயனடைந்துள்ளார். எனவே விசாரணை சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில், இவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்று கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
 
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, தற்போது  ஜாமின் வழங்கினால் அனைத்து சாட்சிகளையும் கலைக்க கூடிய வாய்ப்பு உள்ளது, எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்,
 

தலைப்பு செய்திகள்

மதுரையில் நாளை (1.08.2026) மின்தடை: உங்கள் பகுதிக்கு பாதிப்பா?
மதுரையில் நாளை (1.08.2026) மின்தடை: உங்கள் பகுதிக்கு பாதிப்பா?
தாமிரபரணி ஆறு மாசுபடுத்துபவர்களுக்கு அபராதம்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
தாமிரபரணி ஆறு மாசுபடுத்துபவர்களுக்கு அபராதம்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
சீமைக்கருவேல அகற்றும் இடங்களில் நாட்டு மரங்கள்: உயர் நீதிமன்றம் அதிரடி முடிவு!
சீமைக்கருவேல அகற்றும் இடங்களில் நாட்டு மரங்கள்: உயர் நீதிமன்றம் அதிரடி முடிவு!
விஜய் ஆண்டனி, பிரசாந்த் தொடங்கி வைத்த அதிநவீன ரோபோடிக் அறுவைசிகிச்சை: மதுரைக்கு புதிய மைல்கல்!
விஜய் ஆண்டனி, பிரசாந்த் தொடங்கி வைத்த அதிநவீன ரோபோடிக் அறுவைசிகிச்சை: மதுரைக்கு புதிய மைல்கல்!

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
Upcoming Powerful SUVs: SUV வாங்குற பிளான் இருக்கா.? அடுத்த 3 மாதங்களில் வரும் 3 பவர்ஃபுல் கார்கள்; விலை, அம்சங்கள் என்ன.?
SUV வாங்குற பிளான் இருக்கா.? அடுத்த 3 மாதங்களில் வரும் 3 பவர்ஃபுல் கார்கள்; விலை, அம்சங்கள் என்ன.?
Chennai Power Cut: சென்னை மக்களே.! ஆகஸ்ட் 1-ம் தேதி நிறைய இடங்கள்ல பவர் கட் ஆகப் போகுது; தெரிஞ்சுட்டு பிளான் பண்ணுங்க
சென்னை மக்களே.! ஆகஸ்ட் 1-ம் தேதி நிறைய இடங்கள்ல பவர் கட் ஆகப் போகுது; தெரிஞ்சுட்டு பிளான் பண்ணுங்க
PM Modi: இஸ்லாமாபாத்திற்கு செல்கிறாரா பிரதமர் மோடி? அழைப்பிதழை உறுதி செய்த பாக்., - அரசின் முடிவு என்ன?
இஸ்லாமாபாத்திற்கு செல்கிறாரா பிரதமர் மோடி? அழைப்பிதழை உறுதி செய்த பாக்., - அரசின் முடிவு என்ன?
Embed widget