(Source: ECI/ABP News/ABP Majha)
வாகனங்களில் சிசிடிவி, ஒரு பெண் உதவியாளர்: தனியார் பள்ளிகளுக்கு அதிரடியாக வந்த புதிய விதிகளின் பட்டியல்!
மாணவியர்களுக்கு இயக்கப்படும் பள்ளி வாகனங்களில் கட்டாயமாக பெண் உதவியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும்.
அனைத்து பள்ளி வாகனங்களிலும் பெண் உதவியாளர் நியமிக்கப்பட வேண்டும், சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும். நடத்துநருக்கு தினந்தோறும் சுவாச பரிசோதனை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டு விதிமுறைகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளன.
பள்ளி வாகனங்களில் மாணவிகள் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாவதாக வரும் புகார்களை அடுத்து, தனியார் பள்ளிகள் இயக்குனர் இவ்வாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
* மாணவியர்களுக்கு இயக்கப்படும் பள்ளி வாகனங்களில் கட்டாயமாக பெண் உதவியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும். மேலும், அனைத்துப் பள்ளி வாகனங்களிலும் ஒரு பெண் உதவியாளர் நியமிக்கப்படவேண்டும்.
* பள்ளி வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்கள் கனரக வாகன ஓட்டுநர்உரிமத்துடன் குறைந்தது 10 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். வாகனத்தை ஓட்டும் ஓட்டுநரின் உரிமத்தினைப் பள்ளி நிர்வாகம் அவ்வப்போது சரிபார்த்து அவை காலாவதியாவதற்கு முன்பே அவற்றைப் புதுப்பிக்க அறிவுறுத்த வேண்டும்.
* பள்ளி வாகன ஒட்டுநர் மற்றும் உதவியாளர் நியமனத்தின் போது அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எதும் இல்லை என்பதற்கான காவல் துறை சான்று சமர்பிக்க வேண்டும். சார்ந்த மருத்துவரிடம் மருத்துவ தகுதிச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
* பள்ளி வாகன உதவியாளர்களுக்கு நியமிக்கப்பட்ட 1 மாத காலத்திற்குள் போக்குவரத்துத் துறையால் வழங்கப்படும் உதவியாளர்களின் பொறுப்புகள்மற்றும் கடமைகள் சார்ந்த பயிற்சி அளிக்கப்படவேண்டும். மேலும், மூன்று மாதத்திற்கு ஒருமுறை ஒரு நாள் புத்தாக்கப் பயிற்சி அளிக்கப்படவேண்டும்.
* பயிற்சியின்போது போக்ஸோ சட்டத்தின் சாராம்சம் தெளிவாக விளக்கப்படவேண்டும்.
* வாகன ஓட்டுநர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு தினமும் சுவாச சோதனை மேற்கொள்ளப்பட வேண்டும்.
* பள்ளி வாகனங்களில் GPS, CCTV கேமரா பொருத்தப்படவேண்டும்.
* CCTV தரவுகள் அனைத்தும் குறைந்த பட்சம் 6 மாதம் காலம் பராமரிக்கப்பட்டு பின்னர் காவல் துறையில் ஒப்படைக்கப்பட வேண்டும்.
* போக்குவரத்துத்துறையிடமிருந்து பள்ளி வாகனம் என்பதற்கான அனுமதி பெறப்பட்ட வாகனங்களை மட்டுமே இயக்க வேண்டும்.
* ஒவ்வொரு வாகனத்திற்கும் தரச்சான்று உரிய காலத்தில் புதுப்பிக்கப் படவேண்டும்.
* ஒவ்வொரு பள்ளி வாகனமும் காப்பீடு செய்யப்பட்டிருக்க வேண்டும். காப்பீடு உரிய காலத்தில் புதுப்பிக்கப்படு வதை பள்ளி நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.
* பள்ளி வாகனத்தின் முன்னும் பின்னும் "பள்ளி வாகனம்" என பெரிய எழுத்தில் தெளிவாக எழுதப்பட்டிருக்க வேண்டும்.
* ஒவ்வொரு பள்ளி வாகனத்திலும் முதலுதவிப்பெட்டி கண்டிப்பாக வைக்கப்பட்டிருக்க வேண்டும்.
* ஒவ்வொரு பள்ளி வாகனத்திலும் தீயணைப்புக் கருவி பொருத்தப்பட்டிருக்க வேண்டும். தீயணைப்புக் கருவி உரிய காலத்தில் புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும்.
* ஒவ்வொரு பள்ளி வாகனத்திலும் அந்தந்த பள்ளியின் தொலைபேசி எண் எழுதப்பட்டிருக்க வேண்டும். மற்ற வாகனங்களிலிருந்து வேறுபாடாகத் தெரியும் வண்ணம் பள்ளி வாகனங்களுக்கு மஞ்சள் வண்ணம் பூசப்பட்டிருக்க வேண்டும்.
* புத்தகப் பையினை பாதுகாப்பாக வைக்க இருக்கையின் அடியில் போதிய இடவசதி செய்யப்பட்டிருக்க வேண்டும்.
* அவசர காலங்கள் அல்லது அசாதாரண சூழ்நிலைகளில் மாணவர்கள் உடனடியாக தொடர்பு கொள்ள அவசர கால பொத்தான்கள் பள்ளி வாகனங்களில் பொருத்தப்படவேண்டும்.
* பள்ளி வாகன உட்புறத்தில் எளிதில் மாணவர்களின் பார்வையில் தெரியும் வகையில் அவசர கால உதவி எண்களான 14417 மற்றும் 1098 குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.
* எந்தவொரு பள்ளி வாகனத்திலும் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு மேல் பள்ளிக் குழந்தைகளை ஏற்றக் கூடாது.
முழுமையாகக் காண: