(Source: ECI/ABP News/ABP Majha)
TRB: வெளியான சூப்பர் அறிவிப்பு; அதிகரித்த ஆசிரியர் பணியிடங்கள்- டிஆர்பி அதிரடி
இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையை உயர்த்தி ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையை உயர்த்தி ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. குறிப்பாக, 1768 பணி இடங்களோடு மேலும் 1000 பணி இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 2768 பணி இடங்களுக்கு இடைநிலை ஆசிரியர் தேர்வு நடைபெறுகிறது.
பள்ளிக் கல்வித்துறையில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணிகளுக்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலி இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்குத் தற்போது தற்காலிக ஆசிரியர்கள் மூலம் கற்பித்தல் நடைபெற்று வருகிறது.
ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதி பெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு போட்டித் தேர்வு நடத்துவதற்கான அரசாணை எண் 149, கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து, இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்திற்கான அறிவிப்பு வெளியிடுவதில் தொடர்ந்து காலதாமதம் ஏற்பட்டது.
தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் நேரடி நியமனம்
இதற்கிடையில் முதல்கட்டமாக 1768 இடைநிலை ஆசிரியர் காலி இடங்களை நிரப்பத் தேர்வு நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. பள்ளிக் கல்வித்துறையில் தொடக்கக் கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் செயல்படும் ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / மாநகராட்சி / அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் நேரடி நியமனம் மூலம் இந்த இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இதற்கிடையே 2024 பிப்ரவரி மாதத்தில் இடைநிலை ஆசிரியர்களை நிரப்புவதற்கான தேர்வு குறித்த அறிவிக்கை வெளியிடப்பட்டது. தொடர்ந்து இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வு ஜூன் 23ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த நிலையில் தேர்வு நிர்வாகக் காரணங்களுக்காக ஒத்தி வைக்கப்பட்டது. ஜூலை 21ஆம் தேதி இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
கூடுதலாக 1000 பணியிடங்கள் சேர்ப்பு
இந்த நிலையில் இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையை உயர்த்தி ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. குறிப்பாக, 1768 பணி இடங்களோடு மேலும் 1000 பணி இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 2768 பணி இடங்களுக்கு இடைநிலை ஆசிரியர் தேர்வு நடைபெறுகிறது. இந்தத் தேர்வு ஏற்கெனவே திட்டமிட்டபடி ஜூலை 21ஆம் தேதி நடக்க உள்ளது.
கூடுதல் தகவல்களுக்கு: https://www.trb.tn.gov.in/