SBI Clerk Admit Card 2021 : எஸ்பிஐ எழுத்தர் பணிக்கான அட்மிட் கார்டு ரிலீஸ்- டவுன்லோடு செய்வது எப்படி?
ஆகஸ்ட் 17ம் தேதி முதல் ஆகஸ்ட் 28ம் தேதிக்குள் மட்டுமே ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யும் கால அவகாசமாகும்.
5121, ஜூனியர் அசோசியேட் பணிக்கான அட்மிட் கார்டை இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங் ஆப் இந்தியா வெளியிட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் ஆன்லைனில் 27.04.2021 முதல் பெறப்பட்டன. 20 மே வரை ஆன்லைனில் விண்ணப்பங்கள் சமர்பிப்பதற்கான கடைசி தேதியாகும்.
அட்மிட் கார்டு டவுன்லோடு: இத்தேர்வுக்கான அர்மிட் கார்டை எஸ்பிஐ வங்கி வெளியிட்டுள்ளது. தற்போது, மகாராஷ்டிராவில் அகர்தலா, ஷில்லாங், மகாராஷ்டிரா மாநிலத்தின் அவுரங்காபாத், நாசிக் ஆகிய நான்கு நகரிங்களில் உள்ள மையங்களுக்கு மட்டும் அட்மி கார்டு வெளியாகியுள்ளது. இதர, நகரங்களுக்கு மிக விரைவில் வெளியாகும் என்று எதிரபார்க்கப்படுகிறது.
www.sbi.co.in/careers என்ற Portal மூலமாக விண்ணப்பதாரர் அட்மிட் கார்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஆகஸ்ட் 17ம் தேதி முதல் ஆகஸ்ட் 28ம் தேதிக்குள் மட்டுமே ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யும் கால அவகாசமாகும்.
குறைந்தபட்ச கல்வித் தகுதி : 10 + 2 தேர்ச்சி அல்லது அதற்கு இணையான அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் / பல்கலைக்கழக பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: விண்ணப்பதார்கள் 01.04.2021 அன்றைய தேதியில் 20 வயதுக்கு குறையாமலும், 28 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த வயது வரம்பு இடஒதுக்கீடு பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு தளர்த்தப்படும் என்றும் கூறப்பட்டது.
தேர்வு முறைகள்: முதல்நிலை தேர்வை நாடு முழுவதும் ஜூன் மாதத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே போன்று, முதன்மை தேர்வு 31.07.2021 அன்று நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவு, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர் விண்ணப்பக் கட்டணமாக ரூ. 750 செலுத்த வேண்டும். இதர பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது.
முன்னதாக, பல்வேறு துறைகளில் சிறப்பு அதிகாரி பணிக்கு விண்ணப்பபிதற்கான அறிவிப்பை ஸ்டேட் பேங் ஆப் இந்தியா அறிவித்துது.
இதற்கான விண்ணப்பங்களை http://recruitment.bank.sbi இணையதளம் மூலம் ஆன்லைனில் மட்டும் சமர்ப்பிக்க வேண்டும். 2021, ஆகஸ்ட் 13ம் தேதி முதல் செப்டம்பர் 2ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். காலியிடங்கள், வயது வரம்பு, கல்வித் தகுதி, கட்டணம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பணியாளர் தேர்வு அறிவிப்பில் (ஆட்சேர்ப்பு அறிவிப்பில்) தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன.
ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது, சுயவிவரம் (Resume), கல்வி சான்றிதழ்,வயது சரிபார்ப்பு ஆவணங்கள், பணி அனுபவ சான்றிதல்கள் உள்ளிட்ட அத்தாட்சி ஆவணங்களை பதவிவேற்றம் செய்யவேண்டும். ஆன்லைன் விண்ணப்ப படிவத்தில், விண்ணப்பதாரர்கள் தங்களின் வண்ண பாஸ்போர்ட் புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
மேலும், தகவல்களுக்கு https://bank.sbi/careers (அல்லது) https://www.sbi.co.in/careers ஆகிய இணைய தளங்களில் இருந்து விண்ணப்பதாரர்கள் பெறலாம்.
மேலும், வாசிக்க:
SBI SO Recruitment 2021: எஸ்பிஐ வங்கியில் 69 சிறப்பு அதிகாரி பணி: அப்ளை செய்வது எப்படி?
பத்தாம் வகுப்பு தேர்ச்சியா? மீன்வளத்துறையில் பணியாற்ற விண்ணப்பிக்கலாம்!